Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா? அப்ப தினமும் இத குடிங்க...
பித்தக்கற்கள் இருந்தால், அதை வெறும் அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்பதில்லை. அந்த கற்களை இயற்கையாகவே ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் கரைக்க முடியும்.
உடலில் பித்தப்பையானது மிகச்சிறிய அளவில் பேரிக்காய் வடிவில் கல்லீரலுக்கு பின்புறம் இருக்கும். பித்தப்பையின் வேலையே, கல்லீரல் சுரக்கும் கொலஸ்ட்ராலைக் கரைக்கத் தேவையான பித்தநீரை சேகரித்து வைப்பதாகும். எப்போது கொழுப்பு நிறைந்த உணவுகள் குடலை அடைகிறதோ, அப்போது குடலானது பித்தப்பைக்கு பித்த நீரை அனுப்புமாறு ஒரு சிக்னல் அனுப்பும்.

உடனே பித்தப்பையும் பித்த நீரை அனுப்பி, கொழுப்பு நிறைந்த உணவை எளிதில் உடைத்தெறியச் செய்து, செரிமான செயல்பாட்டை எளிதாக்கும். சிலருக்கு இத்தகைய பித்தப்பையில் கற்கள் உருவாகும். ஒருவரது பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு பித்தநீரின் வேதியியல் தயாரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு தான் காரணம். மேலும் வேறு சில காரணங்களாலும் பித்தக்கற்கள் உருவாகலாம்.
பித்தக்கற்கள் இருந்தால், அதை வெறும் அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்பதில்லை. அந்த கற்களை இயற்கையாகவே ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் கரைக்க முடியும். இக்கட்டுரையில் பித்தக்கற்களைக் கரைக்க உதவும் ஒருசில இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்கள் நிச்சயம் பித்தக்கற்களைக் கரைத்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பான ஒரு பானம். அதிலும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஆப்பிள் ஜூஸில் உள்ள மாலிக் அமிலம், பித்தக்கற்களை மென்மையாக்கும் மற்றும் வினிகர் பித்தப்பையில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இந்த இரண்டு பொருட்களும் தொடர்ந்து பித்தப்பைக்குள் செல்லும் போது, பித்தக்கற்கள் மெதுவாக கரைய ஆரம்பித்துவிடும்.

டான்டேலியன் மற்றும் மில்க் திஸ்டல்
டான்டேலியன் தாவரத்தின் இலைகள் பித்தப்பையில் பித்தநீரின் சுரப்பைத் தூண்டும் மற்றும் மில்க் திஸ்டல் கல்லீரலால் அடர்த்தி குறைவான பித்தநீரை உற்பத்தி செய்ய உதவும். இந்த இரண்டு பொருட்களுமே பித்தக்கற்களைக் கரைக்க உதவக்கூடியவை. ஒரு கப் டான்டேலியன் இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, அத்துடன் 1/4 கப் மில்க் திஸ்டன் இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தைக் குடித்தால் பித்தக்கற்களை விரைவில் கரையும்.

எப்சம் உப்பு ஜூஸ்
பித்தநீர் குழாய் வழியாக பித்தப்பைகளை எளிதில் நகர்த்துவதற்கு எப்சம் உப்புகள் காரணமாகின்றன. காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை நீரில் போட்டு அறை வெப்பநிலையில் வைத்து, தினமும் மாலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கூட எப்சம் உப்பு நீரைக் குடிக்கலாம். ஆனால் சிலருக்கு எப்சம் உப்பு நீரை அதிகம் குடித்த பின் தீவிரமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன.

எலுமிச்சை ஜூஸ்
நற்பதமான 4 எலுமிச்சை பழங்களைப் பிழிந்து ஜூஸ் போட்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், வலியின்றி பித்தக்கற்கள் வெளியேறிவிடும். மேலும் பித்தக்கற்கள் உடலில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டுமானால், அதிகளவு நீரைப் பருக வேண்டியது அவசியம்.

பேரிக்காய் ஜூஸ்
1/2 டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, எஞ்சிய பாதியில் பேரிக்காய் ஜூஸ் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் பேரிக்காயில் உள்ள பெக்டின், பித்தக்கற்களை இயற்கையாக கரைத்துவிடும்.

புதினா டீ
புதினா பித்த நீர் மற்றும் டெர்பீனின் ஓட்டத்தைத் தூண்டுவதற்கு பொறுப்பாகும். இது பித்தக்கற்களையும் கரைக்க உதவும். ஒரு டம்ளர் நற்பதமான புதினா டீ தயாரிப்பதற்கு, சில புதினா இலைகளை சுடுநீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை குடித்தால், பித்தக்கற்கள் கரைத்துவிடும்.

ஹெர்பல் டீ
மூலிகை சாறுகள் பித்தக்கற்களைக் கரைக்கும் பணியை சிறப்பாக செய்யக்கூடியவை. எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை ஹெர்பல் டீயைக் குடிப்பதன் மூலம், பித்தக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த டீ தயாரிப்பதற்கு, 4-5 விருப்பமான ஏதேனும் மூலிகை இலையை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.



Click it and Unblock the Notifications