Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தீவிரமான மூட்டு அழற்சியால் அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...
நமக்கு அடிக்கடி அழற்சி தொற்றுக் கொள்வதற்கு நம் உடலில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பது தான் காரணம். அழற்சி எதிர்ப்பு தன்மையை அதிகமாக்க நாம் அழற்சி எதிர்ப்பு டயட் திட்டத்தை எடுக்க வேண்டும்.
நம் உடலில் பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்வதற்கு அழற்சியும் ஒரு காரணமாக அமைகிறது. நீங்கள் நோய்வாய்ப்படும் போதோ, உடலில் வீக்கம் ஏற்படும் போதோ உடம்பை காத்துக் கொள்ள நிறையா போராட வேண்டியிருக்கும். சிலருக்கு எதாவது உணவு எடுத்தாலோ மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ உடனே அழற்சி ஏற்பட்டு விடும். இந்த அழற்சியே உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட நாள்பட்ட அழற்சியை எப்படி சரி செய்வது? நமக்கு அடிக்கடி அழற்சி தொற்றுக் கொள்வதற்கு நம் உடலில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பது தான் காரணம். எனவே இந்த அழற்சி எதிர்ப்பு தன்மையை அதிகமாக்க நாம் அழற்சி எதிர்ப்பு டயட் திட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் சில உணவுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உணவுகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறையவே இருக்கின்றன.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
அழற்சி இருப்பவர்கள் ஒருசில உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அவையாவன: பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் பானங்கள், வறுத்த வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா, வெஜிடேபிள் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், க்ளூட்டன் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், எண்ணெய் பலகாரங்கள், அதிகமான ஆல்கஹால், அதே மாதிரி கார்போஹைட்ரேட் உணவுகள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

அழற்சி எதிர்ப்பு டயட் எப்படி வேலை செய்கிறது?
அழற்சி எதிர்ப்பு டயட் நமது உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரித்து செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. இந்த செல்கள் தான் நோய் அபாயத்தை உண்டாக்குகிறது. எனவே அழற்சி எதிர்ப்பு டயட் உங்களுக்கு இந்த விதத்தில் பலனளிக்கக்கூடியது.

அழற்சி எதிர்ப்பு டயட் பயன்கள்
அழற்சி எதிர்ப்பு டயட் மூலம் நாள்பட்ட அழற்சியை கூட போக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அழற்சி எதிர்ப்பு டயட் முடக்கு வாதம், தோல் தடிப்பு, அழற்சி, ஆஸ்துமா, பெருங்குடல் அழற்சி, நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய், லூபஸ், வளர்சிதை மாற்றம், ஹாசிமோடோ நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

அழற்சி எதிர்ப்பு டயட் உணவுகள்
அழற்சி எதிர்ப்பு டயட்டில் கீரைகள், ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, செர்ரி, கருப்பு திராட்சை பழம், ப்ராக்கோலி, காலிஃப்ளவர், பீன்ஸ், பருப்பு வகைகள், க்ரீன் டீ, ரெட் ஒயின், அவகேடோ, ஆலிவ் ஆயில், தேங்காய், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, பைன் நட்ஸ், பிஸ்தா, மஞ்சள், பட்டை, டார்க் சாக்லேட், சால்மன், மத்தி மீன் உட்பட ஏகப்பட்ட உணவுகள் இதில் அடங்கும்.

வெஜிட்டேரியன் டயட் மற்றும் வீக்கம்
சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அதிகளவில் பிளாஸ்மா ஏஏ உள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அடையாளமாகவும், குறைந்த அளவு வீக்கத்துடனும் இதய நோய்களை தடுப்பதுடன் அமைகிறது. நீங்கள் சைவ உணவை சாப்பிடும் போது வீக்கங்கள் குறைகின்றன என்கிறது ஆய்வு. மேலும் இந்த மாதிரி அழற்சி எதிர்ப்பு டயட்டில் இருக்கும் போது பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.



Click it and Unblock the Notifications











