Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
உங்களுக்கு 'ஹை பிபி' பிரச்சனை இருக்கா? அப்ப அது எகிறாம இருக்க இந்த ஜூஸை குடிங்க...
உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை நிர்வகிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு சரியான நிபுணருடன் எந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது என்பதை கலந்தாலோசிக்க வேண்டும்.
இன்று உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. பொதுவாக உயர் இரத்த அழுத்தம் வயதானவர்களைத் தான் பாதித்து வந்தது. ஆனால் தற்போது இளைஞர்களிடையேயும் இப்பிரச்சனை அதிகரித்துவிட்டது. இந்த நிலைக்கு இன்னும் நிரந்தர தீர்வு எதுவும் இல்லை என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையை நிர்வகிக்க முடியும்.

ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி மிக அதிகமாக இருக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதை நீண்ட காலமாக கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டுவிட்டால், இந்நிலை பக்கவாதத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே தான் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதை நிர்வகிக்க மருத்துவரை அவசியம் அணுக வேண்டும். அதே சமயம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் இந்நிலையை சிறப்பாக நிர்வகிக்கலாம்.

பழங்கள், காய்கறிகள்
உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை நிர்வகிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு சரியான நிபுணரை சந்தித்து அவருடன் எந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது என்பதை கலந்தாலோசித்த பின் அந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக, தக்காளி இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் உணவுப் பொருட்களுள் ஒன்று. யு.எஸ்.டி.ஏ தரவுகளின்படி, ஒரு 100-கிராம் தக்காளியில் 237 மி.கி பொட்டாசியம் உள்ளது, இது சோடியத்தின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சோடியத்தைக் குறைப்பது அவசியம்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சோடியத்தைக் குறைக்க அறிவுறுத்தப்படுவதால், தக்காளியின் டையூரிக் பண்புகள், உடலில் உள்ள அதிகளவிலான சோடியத்தை சிறுநீரின் வழியே வெளியேற்றும். சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான காய்கறி தக்காளி. நாம் சமைக்கும் ஒவ்வொரு உணவுகளிலும் இது முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தக்காளி ஜூஸ் சிறந்தது
இருப்பினும், தக்காளியின் முழு சத்தைப் பெற வேண்டுமானால், அதை உட்கொள்வதற்கான சிறந்த வழி, தக்காளிஸை ஜூஸ் வடிவில் குடிப்பது தான். இதில் தக்காளி எந்த விதத்திலும் சமைக்கப்படாததால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு தக்க வைக்கப்பட்டு, உடலுக்கு அதன் முழு சத்தும் கிடைக்கிறது.

கேரட்
தக்காளிக்கு அடுத்தப்படியாக உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் உணவுப் பொருள் தான் கேரட். நம்மில் பெரும்பாலானோர் இது கண்களுக்கும், சருமத்திற்கும் மட்டும் தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே1 போன்றவை இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த கேரட்டை ஜூஸ் வடிவில் உட்கொள்ளும் போது, இதன் முழு சத்தும் உடலுக்கு கிடைக்கப் பெறும்.
இப்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்த உதவும் கேரட் மற்றும் தக்காளி இரண்டையும் கொண்டு எப்படி ஜூஸ் தயாரிப்பது என்பதைக் காண்போம்.

ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* புதினா இலைகள் - 6-7
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை - பாதி (சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை:
* முதலில் பிளெண்டரில் தக்காளி, கேரட், இஞ்சி, புதினா இலைகளைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றினை ஊற்றி கலந்து குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸை காலை உணவின் போது குடிக்கலாம் அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலும் குடிக்கலாம்.

குறிப்பு
தக்காளி கேரட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை நிர்வகிக்க உதவியாக இருக்கும். ஆனால் உங்கள் உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதாக இருந்தாலும், மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
