Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
நீங்க நடக்கும்போது ஏதும் வித்தியாசம் தெரியுதா? அப்ப அது ஆபத்தான நோயோட அறிகுறியா இருக்கலாமாம்!
ஒரு ஆய்வின் படி, கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நடையில் மிகவும் பொதுவான இரண்டு மாற்றங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அவை, சமநிலை இல்லாத நடை மற்றும் விழும் போக்கு ஆகும்.
கல்லீரல் நம் உடலில் ஒரு முக்கிய உறுப்பு. அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதிலும், கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதைமாக்குவதிலும், கிளைகோஜன், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை சேமிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது உடலுக்குள் மற்றும் வெளியே பித்தத்தை உற்பத்தி செய்து வெளியேற்றுகிறது.

இதன் ஆரோக்கியமான செயல்பாடுகள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அதே நேரத்தில் அல்புமின் மற்றும் உறைதல் காரணிகள் போன்ற பிளாஸ்மா புரதங்களை ஒருங்கிணைக்கிறது. இதனால், உங்கள் கல்லீரல் செயல்பட போராடும் போது, அது பல அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இது உங்கள் கல்லீரல் ஆபத்தில் உள்ளதை குறிக்கிறது.
உங்களுக்கு கல்லீரல் கொழுப்பு நோய் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அவை என்ன அறிகுறிகள் என்றும், கல்லீரல் கொழுப்பு நோயிலிருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?
கல்லீரல் நமது உடலிலுள்ள மிகப்பெரிய உள் உறுப்பு ஆகும். கொழுப்பு கல்லீரல் நோய் என்பது பல்வேறு காரணங்களால் கல்லீரலில் அதிக கொழுப்பு படியும் ஒரு சுகாதார நிலை ஆகும். கொழுப்பு கல்லீரல் நோயின் இரண்டு முக்கிய வகைகள்: மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD), ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகும். மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது அதிக ஆல்கஹால் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத ஒரு வகை கொழுப்பு கல்லீரல் நோயாகும். ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது அதிக அளவில் மது அருந்தும்போது ஏற்படுகிறது.

பொதுவான அறிகுறிகள்
கொழுப்பு கல்லீரல் நோய் பல அறிகுறிகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, அதிகரித்த எடை இழப்பு, மஞ்சள் நிற தோல் மற்றும் கண்களின் வெண்மை, வயிறு மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு மற்றும் மன குழப்பம், உடல் பலவீனம் ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாகும்.

உங்கள் நடைப்பயணத்தை எவ்வாறு பாதிக்கிறது?
இரண்டு வகையான கொழுப்பு கல்லீரல் நோய்களில், நரம்பியல் நோய்களுக்கான புதிய வாஸ்குலர் ஆபத்து காரணிகளில் ஒன்றாக ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக கூறப்படுகிறது, தன் செயல்பாடுகளை செய்வதற்கு போராடும் ஆரோக்கியமற்ற கல்லீரல் பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிக்கும். உங்கள் நடத்தையில் மாற்றம், மனநிலையில் மாற்றம், பேச்சு, தூக்கம் மற்றும் ஒரு நபர் நகரும் விதம் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நடைப்பயிற்சி முறையில் ஏற்படும் மாற்றங்கள் கொழுப்பு கல்லீரல் நோயைக் குறிக்கலாம்.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
ஒரு ஆய்வின் படி, கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நடையில் மிகவும் பொதுவான இரண்டு மாற்றங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அவை, சமநிலை இல்லாத நடை மற்றும் விழும் போக்கு ஆகும். ஒழுங்கற்ற நடை பொதுவாக ஒரு அடாக்ஸிக் நடை என்று விவரிக்கப்படுகிறது. அதாவது அந்த நடை எப்போதும்போல சமநிலையில் இல்லாமல் இருக்கலாம். இந்த அறிகுறி கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் பார்கின்சன் நோய்க்கும் ஒரே மாதிரியாக இருக்கலாம். இருப்பினும், நரம்பியல் பரிசோதனை அறிக்கையின்படி, பார்கின்சன் நோயைப் போலல்லாமல், இது விரைவான முன்னேற்றம், ஆரம்பகால தோரணை மற்றும் நடை சிக்கல்களால் வகைப்படுத்தப்படுகிறது.

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?
கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைக் குறைக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இறுதிக்குறிப்பு
ஆரோக்கியமான எடையை பராமரித்தல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவை கொழுப்பு கல்லீரலை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும் சிறந்த வழிகள். மேலும், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைக் குறைப்பது முக்கியம்.



Click it and Unblock the Notifications