For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்தனை நிமிடத்திற்கு குறைவாக ஆணுறுப்பு விறைப்பிருக்கும் ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது...

வெவ்வேறு அளவு விறைப்புத்தன்மை உள்ளது, சில உடலியல் பிரச்சினைகள் காரணமாகவும் மற்றவை உளவியல் பிரச்சினைகள் காரணமாகவும் ஏற்படுகின்றன.

|

உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பொதுவான கவலை என்னவெனில் அது அவர்களின் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பொறுத்துதான். ஏனெனில் அனைத்து ஆண்களுக்குமே அவர்களின் பாலியல் செயல்திறன் குறித்த சந்தேகம் இருக்கும். விறைப்புத்தன்மையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் போது ஆண்களை பல உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

How To Help Men To Maintain An Erection

வெவ்வேறு விறைப்புத்தன்மை உள்ளது, சில உடலியல் பிரச்சினைகள் காரணமாகவும் மற்றவை உளவியல் பிரச்சினைகள் காரணமாகவும் ஏற்படுகின்றன. இருப்பினும், விறைப்புத்தன்மை சிக்கல்களில் பொதுவான அம்சங்கள் உள்ளன. இந்த பதிவில் ஆண்களின் விறைப்புத்தன்மை குறித்த பிரச்சினைகள் மற்றும் அதனை சமாளிக்கும் வழிகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விறைப்பு பிரச்சினையின் இயல்புகள்

விறைப்பு பிரச்சினையின் இயல்புகள்

ஆண்களின் பாலியல் இயலாமை அல்லது விறைப்புத்தன்மை பிரச்சினை என்பது ஒரு முழு விறைப்புத்தன்மையை தொடர்ந்து பராமரிக்கத் தவறும் போது ஆண்கள் அனுபவிக்கும் ஒரு பிரச்சினையாகும். சிக்கல்கள் நீண்ட காலத்திற்கு அல்லது படிப்படியாக ஏற்படலாம். முழு பாலியல் செயல்பாட்டின் போதும் ஆணுறுப்பின் விறைப்பை பராமரிக்க முடியாமல் போகலாம், உடலுறுவுக்கு முன்னரே அவர்கள் இயலாமையை உணர்வது, தூண்டுதலை ஒருபோதும் உணராமல் போவது, சிறு வயதிலேயே விறைப்புத்தன்மை பிரச்சினைகள் என பல வழிகளில் இது ஏற்படலாம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மனிதனின் வயதைப் பொறுத்து, அவர் ஒரு விறைப்புத்தன்மையை பராமரிப்பதில் குறைபாடுகளை அனுபவிப்பதற்கான காரணம் வேறுபடலாம். இளைஞர்களிடையே, இது பெரும்பாலும் உளவியல் காரணிகளால் ஏற்படுகிறது, ஆண்குறியின் அளவு, கடந்தகால அனுபவங்கள், மனச்சோர்வு, குறைமதிப்பீடு அல்லது பிற காரணங்களால் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான்.

இளைஞர்களின் விறைப்புத்தன்மை பிரச்சினைகள்

இளைஞர்களின் விறைப்புத்தன்மை பிரச்சினைகள்

இளைஞர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட காரணம் இது நீரிழிவு, உடல் பருமன் அல்லது இரத்த ஓட்டம் போன்ற நோய்கள் போன்ற உளவியல் பிரச்சினைகள் அல்லது உடலியல் காரணிகளின் விளைவாக இருக்கலாம்.

MOST READ: கேட்கும்போதே நடுங்க வைக்கும் அந்த காலத்தின் மிருகத்தனமான கருக்கலைப்பு முறைகள்... ஷாக் ஆகாம படிங்க...

இயலாமையுள்ள ஆண்களுக்கு உடலுறவில் திருப்தி கிடைக்குமா?

இயலாமையுள்ள ஆண்களுக்கு உடலுறவில் திருப்தி கிடைக்குமா?

இதற்கு பதில் ஆம் மற்றும் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்பத்தை உடல் ரீதியான ஒன்று என்று நாம் புரிந்து கொண்டால், விறைப்புத்தன்மை கொண்ட ஒரு மனிதன் ஒரு முழுமையான விறைப்புத்தன்மையை பராமரிக்காமல் விந்து வெளியேற முடியும். சுரப்பி தூண்டுதலுடன், ஆண்குறி முழுமையாக விரைப்படைந்த நிலையில் இல்லை என்றாலும், ஒரு ஆண் இன்னும் இன்பத்தை உணர முடியும். இருப்பினும், இன்பத்தை உளவியல் ரீதியாக நாம் புரிந்துகொண்டால், இங்கே விஷயங்கள் சிக்கலாகிவிடும். மனிதனுக்கு ஒரு விறைப்புத்தன்மையை பராமரிக்க முடியாததால் அவர்கள் பாதுகாப்பாற்றவராக உணர்வார்கள். இது விந்து வெளியேறுவதை நிர்வகித்த போதிலும், உளவியல் மற்றும் உணர்ச்சி மட்டத்தில் முழு இன்பத்தைத் தடுக்கலாம்.

ஆணின் விறைப்புத்தன்மையை எவ்வாறு தூண்டுவது மற்றும் பராமரிப்பது

ஆணின் விறைப்புத்தன்மையை எவ்வாறு தூண்டுவது மற்றும் பராமரிப்பது

இயற்கையாகவே, இந்த சிக்கல்களை அனுபவிக்கும் ஒரு ஆணுடன் நீங்கள் இருப்பதைக் கண்டால், அவற்றின் விறைப்புத்தன்மையை எவ்வாறு தூண்டுவது மற்றும் பராமரிப்பது என்பதில் நீங்கள் கவலைப்படலாம். இது பெரும்பாலும் உங்கள் சொந்த இன்பத்திற்காக நீங்கள் அஞ்சுவதால் அல்ல, ஆனால் உங்கள் கூட்டாளியின் இன்பம் மற்றும் சுயமரியாதை குறித்து நீங்கள் அக்கறை காட்டுவதால்தான்.

இயலாமைக்கான உடலியல் காரணங்கள்

இயலாமைக்கான உடலியல் காரணங்கள்

பிரச்சினை உடலியல்ரீதியாக இருந்தால், அதாவது, ஒரு ஆணால் நோய் காரணமாக விறைப்புத்தன்மையை பராமரிக்க முடியாவிட்டால், மருத்துவர் அல்லது நிபுணரிடம் சென்று பிரச்சினைக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பது நல்லது. சில நேரங்களில் இந்த பிரச்சினையை மருந்துகளுடன் சிகிச்சையளிப்பது சிக்கலை தீர்க்க போதுமானது; இருப்பினும், மற்ற நேரங்களில், முழு விறைப்புத்தன்மையை அடைய வயக்ராவைப் பயன்படுத்த ஒரு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் அருகிலிருக்கும் பேய் உங்களுடன் பேச விரும்புகிறது என்று அர்த்தம்...!

விறைப்புத்தன்மை மற்றும் உளவியல்

விறைப்புத்தன்மை மற்றும் உளவியல்

சிக்கல் உளவியல்ரீதியாக இருந்தால் அதனை சில வழிகளில் குணப்படுத்தலாம். அதில் முதல் வழி வெளிப்படையாக பேசுவது, ஆரம்பத்தில் இருந்தே அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் அவர் உங்களுடன் வெளிப்படையாக பேசுவார். முக்கியமான விஷயம் என்னவெனில் விறைப்புத்தன்மை பிரச்சினையால் நீங்கள் விசுவாசமற்றவராக இருப்பீர்கள் என்று ஆண்கள் பயப்படலாம்.

உளவியல் பிரச்சினைகள்

உளவியல் பிரச்சினைகள்

நீங்கள் ஏதேனும் அதிர்ச்சிகரமான அனுபவத்தை அனுபவித்தீர்களா என்பதைக் கண்டுபிடியுங்கள். இது நேரடியாக பாலியல் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் சில நேரங்களில் இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சினையை தீர்க்க உளவியல் மருத்துவரை அணுக செய்யுங்கள். இது ஆண்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இது ஒரு பயனுள்ள வழியாகும்.

ஆண் விறைப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஆண் விறைப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஒரு சாதாரண விறைப்புத்தன்மையின் காலம் ஒவ்வொரு மனிதனையும் சார்ந்துள்ளது. ஆணுறுப்பின் விறைப்பு 2 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தால் அவருக்கு நிச்சயம் விறைப்புத்தன்மையில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம். இது உளவியல் அல்லது உடலியல் பிரச்சினைகள் காரணமாகவும் இருக்கலாம். இது ஒரு பிரச்சினையாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான விறைப்பு

ஆரோக்கியமான விறைப்பு

3 முதல் 7 நிமிடங்கள் வரை ஆணுறுப்பு விறைப்பாக இருந்தால் இது நிலையான காலம், அதாவது இந்த விறைப்புத்தன்மை சாதாரணமாகக் கருதப்படும். 7 நிமிடத்திற்கும் மேல் ஆணுறுப்பில் விறைப்பு இருந்தால் அவர்கள் வழக்கத்தை விட ஆரோக்கியமான விறைப்புத்தன்மை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

MOST READ: வேதஜோதிடத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம்... உஷாரா இருங்க...!

4 மணி நேரத்திற்கும் மேல்

4 மணி நேரத்திற்கும் மேல்

விறைப்புத்தன்மை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால், அது சற்று கவலைப்பட வேண்டிய விஷயமாகும். அவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும், ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது சில நேரங்களில் வயக்ராவுடன் நிகழலாம், ஆனால் இது இயற்கையாக நிகழும் போது சிக்கலான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Help Men To Maintain An Erection

Read to know how to help a man maintain an erection.
Story first published: Thursday, May 14, 2020, 11:04 [IST]
Desktop Bottom Promotion