நீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா?

இந்திய உணவுகளில் வாசனை பொருட்கள் சுவையை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை நமது ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.

இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமையலறையில் தீர்வு இருக்கிறது என்று கூறுவார்கள். இயற்கையாகவே பூமியிலிருந்து பிறக்கும் அனைத்தும் நம் உடலையும், மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் அதிசய சக்தியைக் கொண்டுள்ளன என்பதை பண்டைய இந்திய வேதங்கள் விளக்குகின்றன.

kitchen spices that will completely detoxify your body

காற்று, மழை, மசாலா பொருட்கள், உணவு, மருத்துவ மூலிகைகள் என அனைத்திற்கும் தனித்துவமான குணங்கள் உள்ளது, இது உங்கள் உடலை சுத்தப்படுத்தும் குணம் வாய்ந்தது. மசாலா பொருட்கள் நமது உடலை எப்படி சுத்தப்படுத்தும், எந்தெந்த மசாலா பொருட்கள் உடலை சுத்தப்படுத்தும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசனை பொருட்கள்

வாசனை பொருட்கள்

இந்திய உணவுகளில் வாசனை பொருட்கள் சுவையை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, இவை நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன் நமது ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.

சீரகம்

சீரகம்

இந்த சிறிய விதைகள் பல பெரிய நன்மைகளை வழங்கக்கூடும். சீரகம் செரிமானத்தை அதிகரிக்கும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டள்ளது. நம் உடலில் உற்பத்தியாகும் நச்சுக்கள் செரிமானம் குறைவாக இருக்கும்போது உடலிலேயே தங்கிவிடுகிறது. சீரகத்தை அடிக்கடி உட்கொள்வது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மட்டுமல்லாமல், உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இதனை பல வழிகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், தினமும் காலையில் சில சீரக விதைகளை வாயில் போட்டு மெள்ளுவது உங்கள் உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தும்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி, கேசர் அல்லது குங்குமப்பூ மிகவும் பயனுள்ள மசாலாப் பொருள் ஆகும். உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, இதனால் உங்கள் சிறுநீர் வழியாக நச்சுகள் வெளியேறும். அனைத்து உறுப்புகளின் தாயாகக் கருதப்படும் கல்லீரல், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களுக்கும் எதிராக உங்களைப் பாதுகாக்கிறது. இந்த கல்லீரலின் ஆரோக்கியத்தை குங்குமப்பூ கொண்டு அதிகரிக்கலாம். தினமும் உணவில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொண்டால் போதும்.

மஞ்சள்தூள்

மஞ்சள்தூள்

இந்தியாவின் அனைத்து சமயலறைகளிலும் இருக்கும் ஒரு மசாலாப்பொருள் மஞ்சள் தூளாகும். கிட்டதட்ட அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு பொருளாக மஞ்சள்தூள் இருக்கிறது. உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டவும் வெளியேற்றவும் உதவுகிறது. புற்றுநோயை தீவிரமாக எதிர்க்கும் குணம் கொண்ட இது உங்களின் ஆயுளை நீடிக்கும் பணியை செய்கிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

அதிக பயனை வழங்கக்கூடிய மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை உங்கள் உடலை நச்சுகளை சுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த பொருட்களை தயாரிப்பதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, இலவங்கப்பட்டை, அதன் இயற்கையான வடிவத்தில் உட்கொண்டால் சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக இருக்கிறது. இதனை பல வழிகளில் எடுத்துக்கொள்ளலாம், குறிப்பாக இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடிக்கவும். இது உங்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும்.

இஞ்சி

இஞ்சி

வலிமையான மசாலாப் பொருளான இஞ்சி நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் திரவ பொருட்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச பயன்படுகிறது. பண்டைய மருத்துவ நூல்களின்படி, இஞ்சி சாறு செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியின் வழக்கமான நுகர்வு வீக்கம் மற்றும் மென்மையான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது.

குதிரைவாலி

குதிரைவாலி

தங்கள் உடலை சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும். அதற்கு தங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு மிகசிறந்த பொருள் குதிரைவாலி ஆகும். இதன் சுவை கடுமையானதாக இருந்தாலும் இதன் நன்மையை அளவிட முடியாது. இதனை அப்படியே எடுத்துக்கொள்ள இயலாவிட்டாலும் இதனை சாலட், பொரியல் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளவும். இது உங்கள் உடலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு பொருளாகும்.

மிளகாய்த்தூள்

மிளகாய்த்தூள்

பண்டைய காலங்களில் இருந்தே மிளகாய்த்தூள் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவும் ஒரு சக்திவாய்ந்த பொருளாக கருதப்படுகிறது, இது உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. மிளகாயை தவறாமல் உட்கொள்வது நம் உடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் மோசமான நச்சுகளை நம் உடலில் இருந்து நீக்குகிறது. செரிமான பிரச்சினைகள், வாய்வு அல்லது சோம்பலை எதிர்கொண்டால், மிளகாய்த்தூள் கலந்த உணவுகளை சாப்பிடுவது இதனை போக்குவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, November 7, 2019, 18:00 [IST]
Desktop Bottom Promotion