Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 3 சாதாரண பழக்கத்தால உங்களுக்கு ஆபத்தான புற்றுநோய் ஏற்படுமாம்... ஜாக்கிரதை...!
மார்பக புற்றுநோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு மிக அவசியம். புற்றுநோயியல் நிபுணர்கள் அதிக சர்க்கரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதோடு, மெலிந்த புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவை பரிந்துரை
உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் இறப்பதற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணம். பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. இதில், சில புற்றுநோய்கள் ஆண்களுக்கு மட்டும் ஏற்படுகின்றன, சில பெண்களுக்கு மட்டும் ஏற்படுகின்றன. எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், ஆரோக்கியமான உணவு பழக்கமும் கொண்டிருந்தால், பல உடல்நல பிரச்சனைகளிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம். பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். பல ஆய்வுகளின்படி, மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் அல்லது உண்டாக்கும் குறிப்பிட்ட உணவு எதுவும் இல்லை.

இருப்பினும், நீங்கள் உண்ணும் முறை இந்த தீவிர நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பாதிக்கிறது. சரியான உணவைப் பற்றிய அறிவு, அதைப் பின்பற்றுவதுடன், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சிகிச்சையை விட தடுப்பு மிகவும் சிறந்தது. உங்கள் உணவுப்பழக்கத்துடன், உங்கள் புற்றுநோய் அபாயத்தை பாதிக்கும் பிற வாழ்க்கை முறை தேர்வுகள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு
மார்பக புற்றுநோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு மிக அவசியம். புற்றுநோயியல் நிபுணர்கள் அதிக சர்க்கரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதோடு, மெலிந்த புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவை பரிந்துரைக்கின்றனர். தாவர அடிப்படையிலான மற்றும் மத்திய தரைக்கடல் உணவுகளையும் பரிந்துரைக்கின்றனர். இவற்றின் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிப்ரோலிஃபெரேடிவ் பண்புகள் மூலம் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைக்க உதவும். அவை டிஎன்ஏ சேதத்தையும் குறைக்கலாம். இதனால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள், ஆலிவ் அல்லது மீன் எண்ணெய் போன்ற பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களைக் குறைக்கிறது. மேலும், இது நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும் பிற காரணிகளைக் குறைப்பதன் மூலம் ஒரு பாதுகாப்புப் பங்கைக் கொண்டிருக்கலாம்.

ஆல்கஹால்
அதிகமாக மது அருந்துவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, ஆல்கஹால் ஈஸ்ட்ரோஜன் அளவை உயர்த்தலாம். இது மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட், யுஎஸ் படி, 118 தனிப்பட்ட ஆய்வுகளின் தரவுகள், மது அருந்தாதவர்களை விட மிதமாக குடிப்பவர்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் சற்று அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது. மிதமாக குடிப்பவர்களுக்கு, இந்த ஆபத்து 1.23 மடங்கு அதிகமாகும். அதிகமாக குடிப்பவர்களுக்கு இது 1.6 மடங்கு அதிகமாகும். ஆதலால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

சில சமையல் முறைகள் ஆபத்தானதா?
நம் உணவை நாம் சமைக்கும் முறை அதன் ஆரோக்கியம் தொடர்பான ஆபத்தை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் கேன்சர் ரிசர்ச் கருத்துப்படி, இறைச்சி, கோழி அல்லது மீன்களை தீயில் சுட்டுவது, ஹெட்டோரோசைக்ளிக் அமீன்கள் அல்லது எச்.சி.ஏ.க்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். உங்கள் உணவை தீயில் சுடுவதற்கு பதிலாக, உங்கள் புரதங்களை முன்கூட்டியே ஊறவைக்கவும், பின்னர் அவற்றை குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைக்கவும்.

எடை அதிகரிப்பு மற்றும் மார்பக புற்றுநோய்
அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது பல மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு, உங்கள் உணவு மற்றும் எடை அதிகரிப்பு மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறது. வயதான காலங்களில் எடை அதிகரிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க உடற்பயிற்சி
மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க உடற்பயிற்சி செய்வது ஒரு நிரூபிக்கப்பட்ட வழியாகும். இது பல வழிகளில் உங்களுக்கு வேலை செய்கிறது. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் எடையை நீங்கள் நினைத்த வரம்பிற்குக் குறைக்கலாம். அதிக எடையுடன் வரும் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம். எடை பிரச்சினைகள் இல்லாதவர்கள், ஆனால் இன்னும் மார்பக புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் இரத்த ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

இறுதிக்குறிப்பு
ஆராய்ச்சியின் படி, சுறுசுறுப்பாக இல்லாத பெண்களை விட, வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் 10-20 சதவீதம் குறைவு. மாதவிடாய் நின்ற பெண்களில் இந்த நன்மை மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. ஆதலால், உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications