Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
உங்களுக்கு இந்த பிரச்சனை-லாம் இருக்கா? அப்ப கொடிய நுரையீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
நீங்கள் உங்களின் சுவாசிக்கும் செயல்முறையில் மாற்றத்தை அல்லது சிரமத்தை உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் முற்றிய நிலையில் சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் மரணத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
நம்மால் சுவாசிக்காமல் வாழ முடியாது. ஒருவர் உயிருடன் இருப்பதையே, அவர் சுவாசிப்பதைக் கொண்டு தான் கண்டறிவோம். ஆனால் நாம் சுவாசிப்பதில் எந்த அளவு கவனம் செலுத்துகிறோம்? நிச்சயம் அது குறைவாகவே இருக்கும். சுவாசிக்கும் செயல்பாடானது நுரையீரலின் உதவியுடன் தான் நிகழ்கிறது. நுரையீரல் தான் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உள்ளிழுத்து இரத்த சிவப்பணுக்களுக்கு வழங்கி, உடலுறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியை செய்யும் நுரையீரலில் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், அது நேரடியாக நமது சுவாசிக்கும் செயல்பாட்டை தான் பாதிக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி சளி, இருமல், லேசான மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. ஆனால் அவற்றை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். உண்மையில் இவையெல்லாம் நுரையீரலில் உள்ள நோயின் ஒருசில அறிகுறிகளாகும். இவற்றை அப்படியே விட்டுவிட்டடால், அது நாள்பட்ட நுரையீரல் நோய்க்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் உங்களின் சுவாசிக்கும் செயல்முறையில் மாற்றத்தை அல்லது சிரமத்தை உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் முற்றிய நிலையில் சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் மரணத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

நுரையீரல் நோய்க்கான ஆபத்து காணிகள்
பல ஆபத்து காரணிகள் கடுமையான நுரையீரல் நோயை உண்டாக்கலாம். அவை பின்வருமாறு:
* புகைப்பிடிப்பது
* நாள்பட்ட அடைப்ப நுரையீரல் நோய் (COPD)
* நுரையீரலில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று
* ஆஸ்துமா
* நிமோனியா
* இதய நோய்
இப்போது நுரையீரல் நோயின் சில முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

நாள்பட்ட இருமல்
குளிர்காலங்களில் இருமல் பிரச்சனையை சந்திப்பது சாதாரணம் தான். ஆனால் ஒருவர் ஒரு மாதத்திற்கும் மேலாக இருமலை சந்தித்தால், அது சாதாரணம் அல்ல. இம்மாதிரி இருமலை சந்திப்பவர்கள், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது நுரையீரலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

மூச்சுத்திணறல்
பொதுவாக கடுமையான உடற்பயிற்சி செய்தால், அதிகமாக டென்சன் கொண்டால், நிமோனியா, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இருப்பினும், தொடர்ந்து அடிக்கடி முச்சுத்திணறலை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

இருமலின் போது இரத்தம்
இருமலின் போது அல்லது சளியில் இரத்தம் கலந்திருப்பது தெரிகிறதா? அப்படியானால் அது நுரையீரலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து, நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

நாள்பட்ட நெஞ்சு வலி
பொதுவாக நெஞ்சு வலியானது இதய நோயுடன் தொடர்புடையது. பலர் அடிக்கடி நெஞ்சு வலிப்பதை உடலில் அதிகப்படியான வாயுவின் காரணமாக இருக்கலாம் என்று நினைத்து, சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் நீண்ட நாட்களாக நெஞ்சு வலியை அனுபவித்து வந்தால், அதை சாதாணமாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நுரையீரலில் பிரச்சனை இருந்தாலும், நெஞ்சு வலியை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

நாள்பட்ட சளி
இயற்கையாகவே சுவாசப்பாதைகள் சளியை உற்பத்தி செய்யும். இந்த சளியானது ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு, நோய்களில் இருந்து காப்பாற்றும். ஆனால் இந்த சளியானது நுரையீரலில் அதிகளவில் தேங்கியிருந்தால், அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிக்கலை உண்டாக்கும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.



Click it and Unblock the Notifications
