Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காலையில் பற்களைத் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?
நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான டீ குடித்தால் தான் பலருக்கு அன்றைய தினத்தை சிறப்பாக ஆரம்பித்த ஒரு சந்தோஷம் இருக்கும். ஒருவேளை டீ குடிக்காமல் இருந்தால் மனநிலை பாழாகிவிடும். அந்த அளவில் டீ பலரை அதன் சுவையால் அடிமையாக்கியுள்ளது. எப்படி காபி பிரியர்கள் இவ்வுலகில் அதிகம் உள்ளனரோ, அதேப் போல் டீ பிரியர்களும் ஏராளமாக உள்ளனர். அந்த டீ பிரியர்களுக்கு ஏற்ப பல வகையான டீக்களும் உள்ளன.

பெரும்பாலான மக்கள் பெட் டீ குடிக்க விரும்புவார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று தெரியுமா? அதுவும் டீயை ஸ்ட்ராங்காக குடித்தால், அதனால் அதிக சேதம் ஏற்படும். டீயில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது அது தீங்கு விளைவிக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அசிடிட்டி
ஒருவர் காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் டீயை குடித்தால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அசிடிட்டி. ஆம், வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது, இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கப்பட்டு அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும் மற்றும் இது உடலில் செரிமான அமிலத்தையும் பாதிக்கும்.

பலவீனமான செரிமான மண்டலம்
தினமும் வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், செரிமான மண்டலம் படிப்படியாக பலவீனமாகும் சில சமயங்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட காலமாக வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

பசியின்மை
வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது பசியுணர்வை பாதிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சிலர் ஒரு நாளில் பல முறை டீ குடிப்பார்கள். அத்தகையவர்களின் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். உண்ணும் உணவின் அளவு குறையும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட தொடங்கும்.

வயிற்று எரிச்சல் மற்றும் வாந்தி
கோடைக்காலத்தில் பலரும் வயிற்று எரிச்சல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. இதற்கு ஓர் காரணம் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தான். டீயை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே கோடையில் குடிக்கும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது தூக்கத்தை இழக்க வழிவகுக்கும். இப்படியே ஒருவர் நீண்ட காலமாக தூங்கும் நேரத்தில் டீ குடித்து வந்தால், பின் அது சரியான தூக்கம் கிடைக்காமல் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அதிகரிக்கும்
முக்கியமாக வெறும் வயிற்றில் டீ குடித்தால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோயை வரவழைத்துவிடும். ஆகவே எப்போதும் வெறும் வயிற்றில் டீ குடிக்காதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications