Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
வீட்டிலேயே கொரோனா சோதனை செய்யும் கருவி.. விலை என்ன? எப்படி பயன்படுத்துவது? எப்போது கிடைக்கும்?
கொரோனாவுக்கான முதல் சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற அந்த கொரோனா வீட்டு சோதனை கருவியான ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவியின் விலை ரூ.250.
கொரோனாவுக்கான முதல் சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற அந்த கொரோனா வீட்டு சோதனை கருவியான ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவியின் விலை ரூ.250 மற்றும் இது கருவி 15 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குகிறது.

தற்போது நாட்டில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனைக்காக அனைவரும் சோதனைக்கூடம் சென்றால், அது தொற்று பரவலை மேலும் மோசமாக்கும். எனவே ஆய்வகத்தில் பாசிட்டிவ் முடிவைப் பெற்ற நபர்களோடு தொடர்பு கொண்டவர்கள், வீட்டிலேயே சோதனைக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் எப்படி இந்த சோதனைக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கோவிட்-19 வீட்டு பரிசோதனை கருவி
இந்தியாவின் முதல் சுய-பயன்பாட்டு சோதனை கருவியை புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ளது. கோவிசெல்ஃப் என பெயரிடப்பட்டுள்ள ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவி (RAT), தற்போது சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவி விரைவில் நோயை கண்டறியவும், குறைவான விலையிலும் விற்கப்படுகிறது. ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஃப்ளோரசன்ஸ் இம்யூனோக்ரோமாட்டோகிராஃபிக் துல்லியமானது மற்றும் எளிமையானது. நாசோபார்னீஜியல் ஸ்வாப் மற்றும் சிறுநீர் மாதிரியில் மரபணு பொருள்களைக் கொண்டிருக்கும் வைரஸின் வெளிப்புற புரத ஷெல்லைக் கண்டறிய இந்த சோதனை உதவுகிறது. இருப்பினும், ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் ஆய்வக அடிப்படையிலான RT-PCR சோதனைகளை விட குறைவான உணர்திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் பல அறிக்கைகள் ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவி அதிக அளவில் தவறான முடிவுகளைக் காட்டியுள்ளதாக கூறுகின்றன.

கோவிட்-19 வீட்டு சோதனை கருவி எப்போது கிடைக்கும்?
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) வீட்டு சோதனைக் கருவியின் சந்தை கிடைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சோதனை கருவி ஒரு வாரத்திற்குள் சந்தைகளில் விற்கப்படும்.

கோவிட்-19 வீட்டு சோதனை கருவியை யார் பயன்படுத்தலாம்?
ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதல்களின் படி, கோவிட் வீட்டு சோதனைக் கருவியை கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் அல்லது ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், உங்களுக்கு அறிகுறிகள் இருந்து, கோவிட் சோதனைக் கருவியில் நெகட்டிவ் என்று வந்தால், நீங்கள் ஆய்வகத்தில் RT-PCR பரிசோதனையைப் பெற வேண்டும்.
ஒருவேளை சோதனை கருவியில் பாசிட்டிவ் என்று வந்தால், அவர்கள் கோவிட் பாசிட்டிவ்வாக கருதப்படுவார்கள். இந்நிலையில் மற்றொரு சோதனை அவசியமில்லை. மேலும் சோதனை கருவியில் பாசிட்டிவ் முடிவைப் பெற்றவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தும் நெறிமுறையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

கோவிட்-19 சோதனை கருவியை எவ்வாறு பயன்படுத்துவது?
கோவிட்-19 சோதனை கருவியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் சோதனை செய்யலாம். 2 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வயதில் பெரியவர் மாதிரியை சேகரிக்க வேண்டும். இந்த கோவிட் சோதனைக் கருவியைப் பயன்படுத்த, முதலில் ஒருவர் கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து "Mylab Coviself" என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த சோதனைக் கருவியில் ஒரு முன் நிரப்பப்பட்ட பிரித்தெரித்தல் குழாய் (Pre-filled Extraction Tube), ஒரு சுத்தமான நாசல் ஸ்வாப், ஒரு சோதனை அட்டை மற்றும் ஒரு பயோஹேஸார்ட் பை ஆகியவை இருக்கும்.
இந்த "Mylab Coviself" என்ற செயலி, சோதனைக் கருவியை எப்படி பயன்படுத்துவது மற்றும் சோதனை முடிவை எவ்வாறு பார்ப்பது என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.
* முதலில் சோதனை செய்வதற்கு ஒரு சுத்தமான இடத்தைக் கண்டுபிடித்து இருக்கவும்.
* பின் சோதனை கருவியை வைத்து சோதனை செய்யும் மேற்பரப்பை சுத்தப்படுத்தவும்.
* பின்பு கைகளை நன்கு சுத்தமாக சோப்பு பயன்படுத்தி கழுவி, கைகளை நன்கு உலத்திக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சோதனை கருவி பையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்துள்ள மேற்பரப்பில் வைக்கவும்.
* பிறகு சுத்தமான நாசல் ஸ்வாப்பை 2-4 செ.மீ வரை இரண்டு மூக்கிலும் செருக வேண்டும் அல்லது எதிர்ப்பை உணரும் வரை செருக வேண்டும். இப்போது நாசல் ஸ்வாப்பில் உள்ள துணியை இரண்டு நாசியிலும் 4-5 முறை சுழற்ற வேண்டும்.
* பின்னர் அந்த நாசல் ஸ்வாப் முன் நிரப்பப்பட்ட பிரித்தெடுத்தல் குழாயில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
* அடுத்து சோதனை அட்டை எடுத்து, குழாயில் இருந்து இரண்டு துளி திரவத்தை ஊற்றி, 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
* வழக்கமாக ஒரு பாசிட்டிவ் வழக்கை கண்டறிய 5-7 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஐசிஎம்ஆர் 15 நிமிடங்கள் காத்திருக்க அறிவுறுத்துகிறது.

கோவிட் முடிவை எவ்வாறு காண்பது?
* சோதனை அட்டையில், கட்டுப்பாடு மற்றும் சோதனை பிரிவு என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். அதில் திரவத்தை ஊற்றிய பிறகு, கட்டுப்பாட்டு பிரிவில் (C) மட்டும் கோடு தென்பட்டால், அது நெகட்டிவ் என்று அர்த்தம். ஒருவேளை கட்டுப்பாட்டு பிரிவு (C) மற்றும் சோதனை பிரிவு (T) என இரண்டிலும் கோடுகள் தென்பட்டால், வைரஸ் உள்ளது என்று அர்த்தம். அதாவது கோவிட் பாசிட்டிவ் என்று பொருள்.
* சோதனைக்கு பிறகு, சோதனை அட்டையை செயலியில் போட்டோ எடுக்க வேண்டும். 15 நிமிடங்கள் முடிந்ததும், செயலி ஒலிக்கும், இதன் விளைவாக செயலியில் முடிவு கிடைக்கும்.

கோவிட் வீட்டு சோதனை காயப்படுத்துமா?
Mylab-இன் கூற்றுப்படி, இந்த சோதனை ஒருவரை பாதிக்கக்கூடாது. மூக்கில் ஸ்வாப் குச்சியை விடும் போது, அசௌகரியமாக அல்லது கூச்சமாக உணரலாம். ஆனால் நீங்கள் வலியை சந்தித்தால், உடனே நறுத்தி, சுகாதார நிபுணரை ஆலோசிக்க வேண்டும்.

கோவிட் சோதனை முடிவுகள் பாசிட்டிவ்/நெகட்டிவ் என்றால் என்ன செய்வது?
கோவிட் சோதனையில் பாசிட்டிவ் பெறுபவர்கள், ஐ.சி.எம்.ஆர் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) நெறிமுறைகளின் படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிகுறிகள் இருந்து சோதனையில் நெகட்டிவ் பெற்றவர்கள், உடனடியாக RT-PCR சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த RT-PCR சோதனையில் இவர்களுக்கு பாசிட்டிவ் பெற்று, கோவிட் நோயாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











