Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...!
நோய்களை மருத்துவர்கள் மூலம் கண்டறியாமல் நமது உடலில் இருக்கும் அறிகுறிகளை கொண்டு நாமாக தீர்மானிக்கும் போது அது நமக்கு ஆபத்தைத்தான் உண்டாக்கும்.
இன்று உலக அளவில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நோய்கள் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வதால் நம்முடைய பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண நோய்கள் எது ஆபத்தான நோய்கள் எது என்பதில் இன்னும் நமக்கு சரியான புரிதல் இல்லை.

நோய்களை மருத்துவர்கள் மூலம் கண்டறியாமல் நமது உடலில் இருக்கும் அறிகுறிகளை கொண்டு நாமாக தீர்மானிக்கும் போது அது நமக்கு ஆபத்தைத்தான் உண்டாக்கும். உங்களுக்கு நீங்கள் இருக்கிறது என்று நினைக்கும் சில நோய்கள் உண்மையில் உங்களுக்கு இருக்காது. இந்த பதிவில் உங்களுக்கு இல்லாமல் நீங்கள் இருக்கிறது என்று எண்ணி பயப்படும் நோய்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

க்ளுட்டன் சென்சிட்டிவ்
அனைவரும் கூறுவது போல க்ளுட்டன் அல்லது பசையம் மோசமானது அல்ல. உண்மையில் தங்களுக்கு க்ளுட்டன் உணர்திறன் இருக்கும் என்று நினைப்பவர்களில் 86 சதவீதத்தினருக்கு அந்த பிரச்சினை இல்லை. இரைப்பை குடல் பிரச்சினைகள், வீக்கம், வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, சோர்வு போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இந்த எண்ணத்தை ஏற்படுத்தலாம். வெறும் 6 சதவீத்தினர் மட்டுமே இந்த புரோட்டினால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் இந்த கோளாறுகள் ஏற்பட காரணம் லாக்டோஸ் அல்லது பிரக்டோஸ் சகிப்பின்மை, சிறுகுடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி, நீரிழிவு நோயிலிருந்து வரும் காஸ்ட்ரோபரேசிஸ் போன்றவையாக இருக்கலாம்.

உணவு அலர்ஜிகள்
ஆய்வுகளின் படி, ஐந்தில் ஒருவருக்கு உணவு அலர்ஜிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரைப்பை மற்றும் குடல் சகிப்பின்மையால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். உணவு அலர்ஜிகளுக்கும், இந்த பிரச்சினைகளுக்கும் வேறுபாடு உள்ளது. உணவு அலர்ஜிகள் என்பதன் அறிகுறிகள் நாக்கில் வீக்கம், தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் சிக்கல், வாந்தி மற்றும் மார்பில் வலி போன்றவையாகும்.

ஈஸ்ட் தொற்று
பெண்களை பொறுத்தவரை யோனி அரிப்பு மற்றும் அசாதாரண வெளியேற்றம் போன்றவை இருந்தால் உங்களுக்கு ஈஸ்ட் தொற்று இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஈஸ்ட் தொற்று இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே ஈஸ்ட் தொற்று இருந்தது. தவறாக அனுமானம் செய்து கொள்வது உங்களுக்குள் பயத்தை அதிகரிக்கும். இந்த அறிகுறிகளோடு எரிச்சல், வீக்கம், சிவந்து போகுதல் போன்றவை இருந்தால் உங்களுக்கு பாக்டீரியா வஜினோசிஸ், கிளமிடியா அல்லது கோனோரியா நோய்களாக இருக்கலாம்.

குறைந்த டெஸ்டோஸ்டிரோன்
வயது அதிகரிக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையத்தான் செய்யும். 30 வயதிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் டெஸ்டோஸ்டிரோன் குறையும். இது அதிகமானால் ஆண்களுக்கு எடை அதிகரிப்பு, விறைப்பு பிரச்சினைகள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகள் எழலாம். டெஸ்டோஸ்டிரோனை வேறு எந்த முதன்மை நிலைகளிலும் சேர்ப்பது உங்கள் அறிகுறிகளை மோசமாக்கும். டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது உங்கள் மாரடைப்பு மற்றும் இரத்த உறைவு அபாயத்தையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்ளும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.

ADHD
பொதுவாக ADHD என்பது குழந்தைகளிடையே காணப்படும் நோயாகும் ஆனால் இது இளைஞர்களிடையேயும் காணப்படுகிறது. கவனமின்மை, வேகமாக செயல்படுவது, மனக்கிளர்ச்சி போன்ற குறைபாடுகள் உங்களின் வேலை மற்றும் உறவுகளையும் பாதிக்கலாம். இந்த குறைபாடுகள் எழ இது மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை, அதேசமயம் இது மனஅழுத்தத்தால் கூட ஏற்படலாம். இதனாலும் மறதி, கவனமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ADHD என்று உறுதி செய்துகொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

நாள்பட்ட சோர்வு
நீங்கள் எப்பொழுதும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு நாள்பட்ட சோர்வு இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. இந்த நோய் இருந்தால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சோர்வை அனுபவிப்பதைத் தவிர்த்து, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் விவரிக்கப்படாத தசை அல்லது மூட்டு வலி ஆகியவையும் இருக்கலாம். மேலும் சிறிது நேரம் வேலை செய்த பிறகு சோர்வாக உணர்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வெறும் சோர்வை மட்டும் வைத்துக்கொண்டு நாள்பட்ட சோர்வு என்று நினைக்காதீர்கள்.

முடக்கு வாதம்
உங்களுக்கு முடக்கு வாதம் ஏற்பட காரணம் உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் மூட்டுகளில் உள்ள ஆரோக்கியமான செல்களை தவறாக தாக்கி, வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் உடலின் சிறிய மூட்டுகளையும், சமச்சீராக, இடது மற்றும் வலதுபுறத்தையும் உள்ளடக்கியது. இதனால் பல மூட்டுகள் ஒரே சமயத்தில் பாதிக்கப்படுகிறது. ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் முதலில் அதிக பயன்பாட்டில் இருக்கும் மூட்டுகளைத் தாக்கும். எனவே நீங்கள் முடக்கு வாதத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்முன் அது என்ன குறைபாடு என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications