Latest Updates
-
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்...
இந்தியாவில் இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தான் அதிகமானோர் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?
பெரும்பாலானோர், நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் தான் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையால் இரத்தசோகை, எலும்பு இழப்பு போன்ற வித்தியாசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பொதுவாக ஆரோக்கியமான வாழ்விற்கு, ஆரோக்கியமான உணவு பழக்கம் தேவை. இது அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான் என்றாலும் கூட, பலர் அதை பின்பற்ற தவறிவிடுகின்றனர். உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆரோக்கியமான உடலியக்கத்திற்கு ஊட்டச்சத்து தேவை. இருப்பினும், ஒவ்வொரு ஊட்டச்சத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் அல்லவா? அதைப்பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்....

ஊட்டச்சத்துக்களில் 2 வகை உள்ளன. ஒன்று, நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள். இவை தான் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட உதவுகின்றன. ஒவ்வொரு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மிகவும் தேவைப்படக்கூடியவை. அவற்றை, வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது.
அதனால், சீரான, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகின்றனர். கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை ஊட்டச்சத்துக்கள் வகையை சேர்ந்தது. நாம் உண்ணும் உணவில் அவை அதிக அளவில் இடம் பெறக்கூடியவையும், நம் உடலுக்கு அதிகம் தேவைப்படக்கூடியவையும் அவை தான். தினசரி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவது மிகவும் சுலபம்.
ஆனால், உண்மையான பிரச்சனையே நுண்ணூட்டச்சத்துக்கள் குறித்து தான். பெரும்பாலானோர், இத்தகைய நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் தான் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையால் இரத்தசோகை, எலும்பு இழப்பு போன்ற வித்தியாசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி, பொதுவாக ஏற்படக்கூடிய 4 ஊட்டச்சத்து குறைபாடு குறித்து தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்...

வைட்டமின் டி
சூரிய வெளிச்சத்தில் நின்றால் வைட்டமின் டி கிடைத்து விடும் என்று பலர் கருதுகின்றனர். அது உண்மை என்றால், இந்தியாவில் பெரும்பாலானோர் வைட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. நமது சருமம் மீது சூரிய ஒளி படும் போது, உடலில் உள்ள கொழுப்புகள் வைட்டமின் டி-ஐ உருவாக்கின்றன. உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு இந்த வைட்டமின் டி மிகவும் தேவையான ஊட்டச்சத்தாகும். இவை, பற்கள், எலும்புகள் போன்றவற்றை பாதுகாத்திட உதவும். சில இயற்கை பொருட்களில் மட்டுமே வைட்டமின் டி கிடைக்கிறது. அதுவும், மிக மிக குறைந்து அளவில் தான் உள்ளது. வெண்டைக்காய், பால் பொருட்கள் மற்றும் காளான் போன்றவற்றில் சிறிது வைட்டமின் டி காணப்படுகிறது. வைட்டமின் டி இன் ஆர்.டி.ஐ 70 வயதிற்குட்பட்டவர்களுக்கு 600 IU, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 800 IU ஆகும்.

வைட்டமின் பி12
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சைவ பிரியர்களாக உள்ளனர். அதனால், அவர்களுக்கு தேவையான வைட்டமின் பி12 கிடைக்கப்பெறுவதில்லை. இந்த வைட்டமின் பி12 ஊட்டச்சத்தானது, நரம்புகள், மூளை இயக்கம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி ஆகியவற்றிற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். ஆனால், இந்த வைட்டமின் பி12 ஊட்டச்சத்தானது, பொதுவாக அசைவ உணவுகளில் தான் அதிகம் காணப்படுகிறது. அதாவது, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை மற்றும் கிளிஞ்சல் போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. அதுதவிர, பால் பொருட்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளிலும் வைட்டமின் பி12 சிறிதளவு காணப்படுகிறது. வைட்டமின் பி 12 க்கான ஆர்.டி.ஐ 2.4 எம்.சி.ஜி.

ஃபோலேட்
வைட்டமின் பி9 ஊட்டச்சத்தில் இருந்து இயற்கையாக உருவாகக்கூடிய ஒன்று தான் ஃபோலேட். பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், கிட்னி பீன்ஸ், முட்டை மற்றும் பயறு வகைகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மற்றும் இரத்த செல்களின் கட்டுமானத்திற்கு ஃபோலேட் இன்றியமையாதது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. வயிற்றில் இருக்கும் குழந்தைகளை ஸ்பைனா பிஃபிடா போன்ற பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். ஃபோலேட்டுக்கான ஆர்.டி.ஐ பெரியவர்களுக்கு 400 எம்.சி.ஜி, கர்ப்பிணிப் பெண்கள் 600 எம்.சி.ஜி. ஆகும்.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் பொதுவானது ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஒன்றாகும். இந்த குறைபாடு கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கினால் ஏற்படக்கூடியவை. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக இரும்பு சத்து தான் பொறுப்பு. இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு பலவீனம் மற்றும் வெளிறிய தோல் ஆகிறவற்றிற்கு வழிவகுக்கும். இரும்பு சத்துக்கான ஆர்.டி.ஐ 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8.7 மி.கி. அளவும் மற்றும் 19 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு நாளொன்றிற்கு 14.8 மி.கி. அளவுமாகும். கீரை, டார்க் சாக்லேட், மாதுளைப்பழம், மீன், இறைச்சி போன்றவை இரும்புச்சத்துக்கான சில பொதுவான ஆதாரங்களாகும்.



Click it and Unblock the Notifications
