Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இதன் அறிகுறிகள், எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும்.
பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயின் தீவிரம் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலை 0 அல்லது தொடக்க நிலையில் இருந்து தொடங்கி 4 ஆம் நிலை அல்லது முற்றிய நிலை வரை உள்ளது. இந்த புற்றுநோயை குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அனைத்து வயதினருக்கும் இந்த வகை புற்றுநோய் வரக்கூடும் என்றாலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாகவே உள்ளனர். இந்த புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள், அது எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும். அந்த வகையில் தமிழ் போல்ட்ஸ்கை மக்களிடையே பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருசில முக்கியமான தகவல்களை கீழே கொடுத்துள்ளது.

பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணங்கள்
பெருங்குடலின் சுவர்களில் செல்கள் குவியும் போது கட்டிகள் உருவாவதால் பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது. இந்த கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும். ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் உடல் பருமன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மரபியல் காரணங்கள், முதுமை, சர்க்கரை நோய் அல்லது புகை/மது பழக்கம் போன்ற காரணிகளால் ஏற்படக்கூடும்.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்
பெருங்குடல் புற்றுநோயின் பொதுவாக அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை
* சோர்வு
* ஆரோக்கியமற்ற எடை இழப்பு
* மலக்குடலில் இரத்தப்போக்கு
* தொடர்ச்சியான குடல் பிரச்சனைகள்
* அடிவயிற்றில் தொடர்ச்சியான அசௌகரியம்
இப்போது பெருங்குடப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் சில வழிகளைக் காண்போம்.

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் வழிகள்:
சீரான உணவு
சீரான உணவை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடலை கவனிக்கவும்
உடலில் ஏதேனும் அசௌகரியம் அல்லது மாற்றங்கள் தென்பட்டால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். எனவே அதை சற்றும் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

உடற்பயிற்சி
உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் இருந்தால், அது பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வாருங்கள்.

புகை, மதுவை கைவிடவும்
புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் எலும்பு பிரச்சனைகள் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்து, உடலுக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். நீங்கள் நீண்ட நாட்கள் நோயின்றி வாழ நினைத்தால், இந்த கெட்ட பழக்கங்களுக்கு உடனடியாக குட்-பை சொல்லுங்கள்.

எடையைப் பராமரிக்கவும்
பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான முக்கியமான காரணிகளுள் உடல் பருமனும் ஒன்று. உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரக்கூடாது என்று விரும்பினால், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்ற வழிகள் மூலம் உடல் எடையைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications