இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி- இதன் விலை என்ன?

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, இந்தியாவின் முதல் குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசியான செர்வாவாக்கை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.

உலகளவில் பெண்களை அதிகம் தாக்கும் பொதுவான புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். 2018 ஆம் ஆண்டில் 570,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் உலகளவில் சுமார் 311,000 இறப்புகளுக்கு இந்த வகை புற்றுநோய் காரணமாக இருந்தது. இந்த கொடிய புற்றுநோய்க்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து தான் தடுப்பூசி வாங்கி போடப்பட்டது. ஆனால் இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, இந்தியாவின் முதல் குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசியான செர்வாவாக்கை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எப்படி வருகிறது?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எப்படி வருகிறது?

மனித பாப்பிலோமா வைரஸ் பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது மற்றும் பெரும்பாலானோருக்கு பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட சிறிது நேரத்திலேயே மனித பாப்பிலோமா வைரஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், குணப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஒரு பெண்ணின் கருப்பை வாயில் உருவாகிறது. பெரும்பாலான HPV நோய்த்தொற்றுகள் சுய-கட்டுப்பாட்டு மற்றும் அறிகுறியற்றவை என்றாலும், தொடர்ச்சியான தொற்றுகள் பெண்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சொல்லப்போனால் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோயில் நான்காவது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கடுமையான இடுப்பு வலி, யோனியில் அசாதாரண வெளியேற்றம், நீண்ட மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியத்தை சந்திப்பது, சிறுநீரை அடக்கமுடியாமை, உடலுறவின் போது வலி, தொடர்ச்சியான உடல் சோர்வு, திடீர் எடை இழப்பு, கால் வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

யாருக்கு இந்த புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

யாருக்கு இந்த புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

மனித பாப்பிலோமா வைரஸ் 95%-க்கு அதிகமான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. பொதுவாக இனப்பெருக்க மண்டலத்தை அடிக்கடி தாக்கும் வைரஸ் தொற்று மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகும். பாலுறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒரு கட்டத்தில் இந்த மனித பாப்பிலோமா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 90% பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருகிறார்கள். மனித பாப்பிலோமா வைரஸ் உடன் தொடர்புடைய மிகவும் பரவலான நிலை தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகும்.

மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகவே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாக 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். அதுவே ஓரளவு நோயெதிர்ப்பு அமைப்புக்களைக் கொண்ட பெண்களில் சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில், இது 5 முதல் 10 ஆண்டுகளில் நிகழலாம்.

இந்தியாவின் முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

இந்தியாவின் முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியான "CERVAVAC" 2022 செப்டம்பர் 01 ஆம் தேதி மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது குவாரிவலண்ட் மனித பாப்பிலோமா வைரஸ்க்கு (qHPV) எதிராக உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) உருவாக்கியது.

எப்போது போட வேண்டும்?

எப்போது போட வேண்டும்?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட செர்வாவாக் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இந்த தடுப்பூசி HPV தொற்றுகள், உயர்தர புற்றுநோய்க்கு முந்தைய புண்கள் மற்றும் பரவக்கூடிய புற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளது என்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த HPV தடுப்பூசியைப் போடுவதற்கான சிறந்த காலம் என்றால் அது HPV வெளிப்பாட்டிற்கு முன் ஆகும். எனவே கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசியை போடுமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியின் விலை என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியின் விலை என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும். அதுவும் ரூ. 200 - ரூ. 400 வரையில் விற்கப்படும். இருப்பினும், இந்த தடுப்பூசியின் இறுதி விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும், இது நடுத்தர மக்களும் போட்டுக் கொள்ளும் வகையிலான விலையில் மட்டுமே விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 3, 2022, 15:22 [IST]
Desktop Bottom Promotion