பாத எரிச்சல் அதிகமா இருக்கா? அப்ப உங்க உடம்புல இது அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. கவனமா இருங்க..

சர்க்கரை நோய் மட்டுமின்றி ஒருவரது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் போதும் பாதங்களில் எரிச்சல் ஏற்படும்.

பாத எரிச்சல் என்றதும் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று என்று தான் பலரும் நினைப்போம். ஆனால் பாத எரிச்சல் சில தீவிரமான பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிலருக்கு இரவு நேரத்தில் பாதங்களை நெருப்பில் வைத்தது போன்று கடுமையான எரிச்சல் ஏற்படும். இதற்கு சர்க்கரை நோய் மட்டும் காரணமாக இருக்காது. ஒருவரது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் போதும் பாதங்களில் எரிச்சல் ஏற்படும்.

Burning Feet Can Be A Symptom Of High Uric Acid In Tamil

பொதுவாக அதிகளவு யூரிக் அமில அளவால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனையைக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல் கீல்வாதம். பெரும்பாலும் கீல்வாதமானது கால்களைத் தான் பாதிக்கிறது. எப்போது ஒருவரது உடலில் ப்யூரின் என்ற புரோட்டீன் அதிகரிக்கிறதோ, அது யூரிக் அமில அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த புரோட்டீன் நமது உடலால் தானாக உருவாக்கப்படுகிறது மற்றும் சில உணவுப் பொருட்களிலும் உள்ளது.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, நமது சிறுநீரகங்கள் அதை இரத்தத்தில் இருந்து வடிகட்டி பிரித்தெடுக்கும் செயல்முறை கடினமாக்கப்பட்டு, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆகவே நீங்கள் உங்கள் கால்களில் கமுமையான எரிச்சல் உணர்வை உணர்ந்தால், அதற்கு அதிகளவு யூரிக் அமில அளவு காரணமாக இருக்கலாம். இப்போது யூரிக் அமில அளவு அதிகரிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் இப்பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைவ உணவைத் தவிர்க்கவும்

அசைவ உணவைத் தவிர்க்கவும்

உடல்நல நிபுணர்களின் படி, அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு தான் யூரிக் அமில அளவு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் பாத எரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், கடல் உணவுகள், இறைச்சிகள் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

அதிகமான புரோட்டீனைத் தவிர்க்கவும்

அதிகமான புரோட்டீனைத் தவிர்க்கவும்

அதிகளவு யூரிக் அமிலத்தைக் கொண்டவர்களைப் பார்த்தால், வழக்கமாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களாகத் தான் இருப்பர். ஏனெனில் புரோட்டீனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, கல்லீரலால் அவற்றை சிறப்பாக செரிக்க முடியாமல், அது உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே புரோட்டீனை மிதமான அளவில் சாப்பிடுங்கள்.

மது பானங்களைத் தவிர்க்கவும்

மது பானங்களைத் தவிர்க்கவும்

பொதுவாக மது அருந்தினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதை கவனித்ததுண்டா? ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்வதோடு, உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க தூண்டும். எப்படியெனில், ஆல்கஹால் அருந்தும் போது, சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் மற்றும் இதர கழிவுகளை வெளியேற்றுவதற்கு பதிலாக, இரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலை பிரித்தெடுப்பதில் பிஸியாகி விடுவதால், இது நிகழ்கிறது.

இன்சுலின் அளவை நிர்வகிக்கவும்

இன்சுலின் அளவை நிர்வகிக்கவும்

உடலில் அதிகப்படியான இன்சுலின் இருந்தால், அது அதிகளவு யூரிக் அமிலத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். எனவே உங்கள் மருத்துவரை சந்திக்கும் போது உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும், உங்கள் இன்சுலின் அளவை சரிபார்க்க மறவாதீர்கள்.

இப்போது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் உணவுகளைக் காண்போம்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. இதனால் அதிக யூரிக் அமில நிலையுள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது நல்லது. ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து குடிக்கலாம். அதுவும் ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கலாம். ஆப்பள் சீடர் வினிகரைக் குடிப்பது, அதிக யூரிக் அமில நிலைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க சொல்வதற்கான மற்றொரு முக்கிய காரணம், தண்ணீரை அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றப்படும். ஆகவே தினமும் குறைந்தது 8-9 டம்ளர் நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக கூறப்படும் அந்தோசையனின்கள் உள்ளன. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவக்கூடியது. மேலும் இந்த பழம் யூரிக் அமிலம் மூட்டு இணைப்புக்களில் படிவதைத் தடுக்கும். எனவே தான் கீல்வாத பிரச்சனை உள்ளவர்களை செர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள்

பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைத் தடுக்க உதவும்.

நற்பதமான காய்கறி ஜூஸ்கள்

நற்பதமான காய்கறி ஜூஸ்கள்

கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்- இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமில அளவு குறையும். ஒருவேளை இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து குடிக்க பிடிக்காவிட்டால், ஏதேனும் ஒரு ஜூஸை தேர்ந்தெடுத்து குடியுங்கள்.

கொழுப்பு குறைவான பால் பொருட்கள்

கொழுப்பு குறைவான பால் பொருட்கள்

அதிகளவு யூரிக் அமில நிலைக்கு சிகிச்சை அளிக்க உதவும் மற்றொரு உணவுப் பொருள் தான் கொழுப்பு குறைவான பால் பொருட்களை உண்பது. எனவே அன்றாடம் கொழுப்பு குறைவான பால், தயிரை உட்கொள்ளுங்கள். இதனால் விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமில அளவை சரியான அளவில் பராமரிக்கக்கூடியது. ஆகவே வைட்டமின் சி உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

அதிகளவு யூரிக் அமில அளவைக் கொண்டவர்கள், சமையலில் கோல்ட்-பிரஸ்டு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவி புரியும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

உணவில் நார்ச்சத்துள்ள உணவுகளில் அதிகம் சேர்ப்பதால், இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம். ஏனெனில் இவை இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை உறிஞ்சி, சிறுநீரகங்கள் வழியாக உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. உங்களுக்கு அதிக யூரிக் அமிலம் இருப்பது கண்டறியப்பட்டால், ஓட்ஸ், ஆப்பிள், ப்ராக்கோலி, பேரிக்காய், வெள்ளரிக்காய், செலரி, பார்லி, வாழைப்பழம் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion