Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிக்காமல் இருக்க பெருங்காயத்தை நீரில் கலந்து குடித்து வந்தனர். அதுமட்டுமின்றி, இப்பொருள் அஜீரண பிரச்சனைகளை போக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பழங்காலம் முதலாக இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலாப் பொருள் தான் பெருங்காயம். இது உணவிற்கு நல்ல மணத்தை தரக்கூடியது. மேலும் இந்தியாவில் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிக்காமல் இருக்க பெருங்காயத்தை நீரில் கலந்து குடித்து வந்தனர். அதுமட்டுமின்றி, இப்பொருள் அஜீரண பிரச்சனைகளை போக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில பகுதிகளில் பெருங்காய பேஸ்ட் மெதுவாக மார்பைச் சுற்றிலும், மூக்குப் பகுதியின் கீழும் பூசப்படுவதால் அதன் நறுமணம் உடலில் நுழைந்து சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும்; இது சில நேரங்களில் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

ஆயுர்வேதத்தில் பெருங்காயம்
ஆயுர்வேதத்தில் பெருங்காயம் செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய்வுத் தொல்லையை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக இது நீரில் வேக வைக்கப்பட்டு, பேஸ்ட் செய்து, அடிவயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய வயிறு மற்றும் குடல் பகுதியைச் சுற்றி பூசப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நன்மை #1
பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்வதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

நன்மை #2
ஆயுர்வேதத்தின் படி, பெருங்காயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரைக் குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குடித்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.

நன்மை #3
பெருங்காயத்தை நீரில் போட்டு வேக வைக்கும் போது, அதில் நீர்ப்பெருக்கி பண்புகளை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நீரைப் பருகும் போது, அது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்து, அனைத்துவிதமான சிறுநீரக தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பளிக்கும்.

நன்மை #4
ஒருவர் தினமும் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், அவர்களின் எலும்புகள் வலிமையடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நன்மை #5
பெருங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. ஆகவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

நன்மை #6
பெருங்காயத்தில் உள்ள பீட்டா-கரோட்டீன், கண்களைப் பராமரிக்க உதவுவதோடு, கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தினமும் பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடித்து வந்தால், கண் வறட்சி தடுக்கப்பட்டு, கண்கள் பளிச்சென்று பிரகாசமாக தெரியும்.

நன்மை #7
பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடி பாதுகாக்கும், பற்களை வலுவாக்கும் மற்றும் இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு உட்பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications
