Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆயுர்வேதப்படி நீங்க இப்படி தண்ணீர் குடிச்சீங்கனா...உங்க உடலுக்கு பல அதிசய நன்மைகள் கிடைக்குமாம்!
ஆயுர்வேதம் காலை எழுந்தவுடன் உங்களை தண்ணீர் குடிக்க அறிவுறுத்துகிறது. காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது ‘உஷாபன்’ என்று அழைக்கப்படுகிறது
குடிநீர் என்பது நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும், அதை நாம் அதிகம் கவனிக்காமல் தன்னிச்சையாக செய்கிறோம். ஆனால் நீங்கள் சரியான முறையில் தண்ணீர் குடிக்கிறீர்களா? என்று என்றாவது சரிபார்த்து இருக்கிறீர்களா? இல்லையெனில், இனி நீங்கள் கவனிக்க தொடங்குங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், அதை சரியான வழியில் உட்கொள்வதும் உங்களுக்கு நன்மைகளை வழங்கும். உங்கள் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.

தண்ணீர் குடிப்பது பாதிப்பில்லாத செயல், ஆனால் நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறை, உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். ஆயுர்வேதத்தின்படி, அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு தண்ணீர் குடிக்கும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உட்கார்ந்து குடிக்கவும்
மூட்டுகளில் வலி ஏற்படும் என்பதால் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று வீட்டு பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது பெரியவர்கள் சொல்வது மட்டுமல்ல, அதற்கு ஆயுர்வேத ஆதரவு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஆயுர்வேதத்தின்படி, நின்றுகொண்டு எதையும் குடிப்பது உடலில் திரவங்களின் சமநிலையை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது. இது மூட்டுகளில் அதிகப்படியான திரவம் குவிவதற்கு வழிவகுக்கும் மற்றும் கீல்வாத ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டாம்
ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைப் பருகுங்கள். அவசரமாக தண்ணீர் குடிப்பதால் வயிற்று உப்புசம் ஆற்றும் வீக்கம் ஏற்படும். ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடியுங்கள். இப்படி குடிப்பது உங்கள் செரிமானத்திற்கு நன்மையளிக்கும்.

குளிர்ந்த நீரை தவிர்க்கவும்
சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் ஒரு கிளாஸ் குளிரூட்டப்பட்ட தண்ணீர் குடிப்பது உங்களுக்கு சிறிது நிவாரணத்தை தரலாம். ஆனால் குளிர்சாதன பெட்டியில் இருந்து நேராக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். அதை சமநிலைப்படுத்த அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரை தண்ணீரில் கலக்கவும். குளிர்காலத்தில், எப்போதும் அறை வெப்பநிலை தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். குளிர்ந்த நீர் செரிமானத்தை சீர்குலைத்து மலச்சிக்கலை ஏற்படுத்தும், அதே நேரத்தில் வெதுவெதுப்பான நீர் செரிமானத்திற்கு மேலும் உதவுகிறது மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

காலையில் முதல் விஷயம்
ஆயுர்வேதம் காலை எழுந்தவுடன் உங்களை தண்ணீர் குடிக்க அறிவுறுத்துகிறது. காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது ‘உஷாபன்' என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இது குடல்களை சுத்தப்படுத்தவும், உங்கள் உடலை நன்கு ஹைட்ரேட் செய்யவும் உதவும்.

உடல் சமிக்ஞைகளை அடையாளம் காணவும்
உங்கள் உடல் நீரிழப்புடன் இருக்கும்போது, உங்கள் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் சமிக்ஞைகளை அனுப்புகிறது. உதடுகள் வெடிப்பு, குழி விழுந்த கண்கள், வறண்ட வாய், குறைவான அளவு சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரின் கருமை போன்ற அறிகுறிகள் அனைத்தும் நீங்கள் உங்கள் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

நீர் சேமிப்பு
செம்பு அல்லது வெள்ளி பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. செம்பு அல்லது சில்வர் கிளாஸில் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளி, தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பதால், கபம், விட்டா மற்றும் பித்தம் போன்ற உடலின் தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த உலோகங்களில் சேமிக்கப்படும் நீர் நேர்மறையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. செரிமான செயல்முறைக்கு உதவுகிறது மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications
