Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வறட்டு இருமலால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...உடனே சரியாகிடும்!
வறட்டு இருமலுக்கு சிகிச்சையளிக்க பூண்டு மற்றொரு சிறந்த மூலிகையாகும். ஒரு பல் பூண்டு சேர்த்து பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்கவும். இந்த பானத்தை சூடாக உட்கொள்ளலாம்.
சமீபகாலமாக, வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், பருவகாலம் மாறும்போது பலர் உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். ஆதலால், நம் ஆரோக்கியம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சலுடன் அதிக இருமல் இருந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். சில நேரங்களில் காய்ச்சல் குறைந்து, இருமல் குறையாமல் இருக்கலாம். பொதுவாக இருமல் ஒரு வாரத்தில் குறைந்துவிடும். ஆனால், 4-6 வாரங்களுக்குப் பிறகும் இருமல் நீடித்தால், நீடித்த மற்றும் வறட்டு இருமலாக இருக்கலாம். இந்த நீடித்த இருமல், வழக்கமான இருமல் மருந்துகளுக்குக் கூட சரியாகாத பிந்தைய காய்ச்சல் அறிகுறிகளின் ஒரு பகுதியாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நீடித்த இருமல் மாசுபாடு அல்லது காற்றின் தரம் காரணமாகவும் உங்களுக்கு ஏற்படலாம்.

இவை அதிக நாட்கள் இருக்கும்போது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம். நீண்ட நாட்களாக உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், உங்களுக்காக ஆயுர்வேதத்தால் நிரூபிக்கப்பட்ட சில வீட்டு வைத்தியங்கள் உள்ளது. அவை என்னென்ன வீட்டு வைத்தியங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேன் மற்றும் இஞ்சி தேநீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அதே சமயம் உங்கள் வறட்டு இருமலை போக்க தேன் ஒரு இயற்கையான தீர்வாக உள்ளது. தேன் மற்றும் இஞ்சி இரண்டும் தனித்தனியே அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. இந்த இரண்டு பொருட்களும் நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உங்கள் வறட்டு இருமலை போக்க தேன் இஞ்சி தேநீரை அருந்துங்கள். புதிய இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் தேநீரை வடிகட்டி, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். சிறந்த முடிவுகளுக்கு இந்த தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும்.

மஞ்சள் பால்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால், நீடித்த இருமலில் இருந்து விடுபட மஞ்சள் பால் உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலுடன் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். பல அதிசய நன்மைகள் நிறைந்த மஞ்சள் பால் கோல்டன் பால் என்றும் அழைக்கப்படுகிறது.

பூண்டு
வறட்டு இருமலுக்கு சிகிச்சையளிக்க பூண்டு மற்றொரு சிறந்த மூலிகையாகும். ஒரு பல் பூண்டு சேர்த்து பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்கவும். இந்த பானத்தை சூடாக உட்கொள்ளலாம். வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சையாகும். ஏனெனில் இது உங்கள் தொண்டையை குணப்படுத்தவும் ஆற்றவும் உதவுகிறது.

துளசி தேநீர்
துளசியில் ஆண்டிடிஸ்யூசிவ் (இருமல் அடக்கி) மற்றும் வறட்டு இருமலைக் குறைக்க உதவும் எக்ஸ்பெக்டோரன்ட் பண்புகள் உள்ளன. ஒரு சில புதிய துளசி இலைகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, தேநீரை வடிகட்டி, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது
உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது என்பது காலங்காலமாக இருமலுக்கு சிறந்த தீர்வாக இருந்து வருகிறது, மேலும் இது பல் மற்றும் ஈறு வலிக்கும் சிறந்த சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. வெதுவெதுப்பான உப்புநீருடன் வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மற்றும் வறட்டு இருமலைக் குறைக்க உதவும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து 30 விநாடிகள் வாய் கொப்பளிக்க வேண்டும்.

அதிமதுரம் வேர்
அதிமதுர வேர் வறண்ட தொண்டையை ஆற்றவும், இருமலைக் குறைக்கவும் உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் இந்த வேரை வெறுமனே மென்று சாப்பிடலாம் அல்லது சில நிமிடங்களுக்கு அதிமதுர வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேநீராக அருந்தலாம். இதன் சுவையை அதிகரிக்க தேன் சேர்த்து அருந்தலாம். இந்த தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உட்கொள்ள வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications