For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான உணவு சாப்பிடும்போது மூக்கில் தண்ணி வர காரணம் என்ன தெரியுமா? இப்படி தண்ணி வரது நல்லதா?

|

அனைவருக்குமே காரமான உணவுகள் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஏனெனில் காரமானது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் காரமான உணவுகள் சாப்பிடும்போது மூக்கில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதுதான்.

Why does your nose run when you eat spicy food

வீட்டில் சாப்பிடும்போது கூட சமாளித்து விடலாம் வெளியிடங்களில் சாப்பிடும்போது ஒரு கையில் கர்ச்சீப் வைத்து கொண்டேதான் சாப்பிடும் நிலை இருக்கும். சிலசமயம் மூக்கு மட்டுமின்றி கண்களிலும் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும். இவ்வாறு காரமான உணவுகள் சாப்பிடும்போது மூக்கில் நீர்வழிய காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகள் என்னதான் நம் நாக்கை பதம் பார்த்தாலும் அதனை சாப்பிடும் ஆசை எப்பொழுதும் நமக்கு குறையாது, ஏனெனில் அது வழங்கும் சுவை அப்படி. ஆனால் இது நமது மூக்கில் தண்ணீரை வரவைக்க காரணம் அதிலிருக்கும் காரமான மசாலா பொருட்கள் குறிப்பாக அதில் சேர்க்கப்படும் மிளகாய்.

ஏன் கண்ணீர் வருகிறது?

ஏன் கண்ணீர் வருகிறது?

மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது அதில் உள்ள பொருட்கள் உங்கள் மூக்கை சிவக்க வைப்பதோடு, கண்ணில் தண்ணீரையும் வரவைக்கிறது. காரம் ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நம் உடலில் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள்தான்.

கேப்சைசின்

கேப்சைசின்

கேப்சைசின் என்பது குடைமிளகாய் வகை செடிகளில் காணப்படும் ஒருவகையான இராசயன கலவை ஆகும். நீங்கள் சாப்பிடும் மிளகாய் முதல் அனைத்து மசாலா பொருட்களிலும் இந்த பொருள் இருக்கும். உங்கள் நாக்கு மற்றும் உடலின் பிற பாகங்களில் கார உணவுகள் சாப்பிடும்போது எரிச்சல் ஏற்பட மூலக்காரணம் இந்த பொருள்தான்.

MOST READ: இந்த பழக்கம் உள்ளவர்கள் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவதை தவிர வேறு வழியே இல்லையாம் தெரியுமா

மிளகாயில் மட்டும் ஏன் கேப்சைசின் உள்ளது?

மிளகாயில் மட்டும் ஏன் கேப்சைசின் உள்ளது?

கேப்சைசின் என்பது மிளகாயின் பாதுகாப்பு கவசம் போன்றதாகும். ஏனெனில் இதுதான் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்குதல்களில் இருந்து மிளகாயை பாதுகாக்கிறது. இதனை நாம் சாப்பிடும்போது நமது உடலின் பாதுகாப்பு கவசம் இதற்கு எதிராக போராடுகிறது, இதன் விளைவாகத்தான் காரமான உணவு சாப்பிடும்போது நமது கண்கள் மற்றும் மூக்கில் நீர் வருகிறது. இந்த இரசாயனம் சளி சவ்வுகளின் மீது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஏற்படும் எரிச்சலால்தான் நமது கண்கள் மற்றும் மூக்கில் தண்ணீர் வருகிறது.

நன்மைகள்

நன்மைகள்

இந்த இரசாயனம் நமது உடலுக்கு தீங்கானதல்ல, சொல்லப்போனால் இது நமது வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. மிதமான அளவில் கேப்சைசின் இருக்கும் உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். இது உங்கள் பசியுணர்வை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்தும் இதனால் இது உங்கள் எடையை பராமரிப்பதில் உதவியாக இருக்கும். மேலும் இது உங்கள் கண்கள் மற்றும் மூக்கை சுத்தம் செய்கிறது.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

யாரெல்லாம் சாப்பிடலாம்?

சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம், இது அவர்களுக்கு இருக்கும் சளிஅடைப்பை சரிசெய்யும். அதேசமயம் காரத்தால் ஏற்படும் எரிச்சலை சமாளிக்க பலரும் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது காரத்திற்கு சரியான தீர்வல்ல. இதற்கு சரியான தீர்வு ஆறவைத்த பால் குடிப்பதுதான். காரத்திலிருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழி இதுதான்.

வலிநிவாரணி

வலிநிவாரணி

கேப்சைசினை சிறந்த வலிநிவாரணியாக பயன்படுத்தலாம். கேப்சைசின் இருக்கும் பொருட்கள் முதுகுவலி, ஆர்திரிடிஸ், நரம்புகளில் ஏற்படும் வழி போன்றவற்றை சரி குணப்படுத்த பயன்படுகிறது. இது வலியை முழுமையாக குணப்படுத்தது ஆனால் உடனடி நிவாரணத்தை வழங்கும்.

MOST READ: துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாகிருவீங்க...!

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

பொதுவாக கேப்சைசின் ஆபத்தில்லாத பொருள்தான் ஆனால் அது குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளும் போது மட்டும்தான். அதிகளவு கேப்சைசின் உணவில் சேர்த்து கொள்ளப்படும்போது அது வயிற்றில் எரிச்சல், வலி, வீக்கம், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தலாம். அதிகளவு கேப்சைசின் சேர்த்து கொள்வது உங்களுக்கு இரைப்பை புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why does your nose run when you eat spicy food

Check out the reasons for why your nose run when you eat spicy food.
Story first published: Thursday, May 16, 2019, 12:53 [IST]
Desktop Bottom Promotion