Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
Break-up ஆன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த சில சுவாரசியமான விஷயங்கள்..!
"காதல்" ஒரு அற்புதமான உணர்வு; காதலில் விழுந்தால் விண்ணில் பறப்பது போன்ற உணர்வு இருக்கும்; காதலில் ஊடும் இருவரும் காதலை சுவாசிப்பார்கள்... இப்படி பல வசனங்களை காதலில் விழுந்தர்வர்கள் ஸ்டேட்டஸ் ஆகவோ, டி.பி.யாகவோ வைப்பது இப்போது பெரிய ட்ரெண்டாகவே உள்ளது. காதலை பற்றி பேசுவதற்கு பலர் உள்ளனர். ஆனால், இந்த காதல் முறிவு பற்றி பேசுவதற்கு யாருமே இல்லை என்றே சொல்லலாம்.

காதல் முறிவு ஏற்பட்ட பின்னர் பலர் என்னென்னவோ வசை பாடுவார்கள். "அவ என் அஞ்சலடா", அவ இல்லாம என்னால இருக்க முடியாதுடா; காதல்ல எப்படி விழுந்தேன்னு தெரில மச்சா...ஆனா, இப்போ ரொம்ப வலிக்குது" இப்படி தொடர்ச்சியாக பலவித உரையாடல்கள் காதல் முறிவை பற்றி நாம் பேசுவதுண்டு.
காதலில் இருக்கும் போது நமது உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இதுவே காதலில் பிரிவு ஏற்பட்டதும் நம் உடலில் பலவித ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். இவை தான் உங்களின் இந்த நிலைக்கு காரணமாம். எப்படிப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும் என்பதையும், இதற்கான தீர்வையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

காதல் கசக்குதோ..!
காதலில் இருக்கும் போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. ஆனால், காதல் முறிவு ஏற்பட்டதும் அதன் வலியும் வேதனையும் அதிகமாகவே உள்ளது.
காதலில் பிரிவு ஏற்பட்டவுடன் நம்மை பாதிப்பது ஹார்மோன்கள் தான். இது குறிகிய காலத்திலே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விடும் தன்மை உடையது.

டோபோமைன் ஹார்மோன்
காதலில் இருக்கும் போது நமது உடலையும் மனதையும் சந்தோஷமாக வைத்து கொள்ளும் ஹார்மோன் தான் டோபோமைன் (Dopamine).
ஆரம்ப நிலை காதலில் இதன் அளவு அதிகமாக இருப்பதால், எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்போம். காதல் முறிவு ஏற்பட்டவுடன் இதன் அளவு குறைந்து, எப்போதுமே துக்கமாக இருப்போமாம்.

நெஞ்சு வலி
காதலில் பிரிந்த எல்லோருக்கும் வர கூடிய உணர்வு தான் இது. நமது நெஞ்சை ஏதோ குத்துவது போன்ற உணர்வு உண்டாகும்.
இது உடல் ரீதியாகவும் இல்லாமல் மன ரீதியாகவும் இல்லாமல், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வலி போன்று தோன்றும். இதற்கு காரணம் அட்ரீனலின் என்கிற ஹார்மோன் தான்.

எடை கூடுதல்
காதல் முறிவு ஏற்பட்ட பலருக்கும் இந்த உணர்வு இருந்திருக்கும். உடல் எடையில் அதீத மாற்றம் உண்டாகும். உடல் எடை கூடவோ அல்லது குறையவோ செய்யும்.
இதற்கு காரணம் இந்த டோபோமைன் ஹார்மோன் தான். இவை உடலில் குறைந்தால் பசியின்மை ஏற்பட்டு உடல் எடை கூடி விடுமாம்.

கலவி
காதல் முறிவு ஏற்பட்ட பல மாதங்களுக்கு கலவியை பற்றிய எண்ணம் கூட நமக்கு வராது. அப்படியே மீறி வந்தாலும், அதன் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும்.
இது ஆண், பெண் என இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வை தான் தர கூடும்.

இந்த ஹார்மோனும் காரணம்..!
யாருக்கெல்லாம் காதல் பிரிவு ஏற்படுகிறதோ, அவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கார்டிசோல் என்கிற ஹார்மோன் தான்.
இதன் அளவு உடலில் சீராக இல்லையென்றால் மன அழுத்தம் அதிகரித்து எப்போதுமே அழ தோன்றும்.

தசை வலி
பொதுவாக காதல் பிரிவு ஏற்பட்ட பலருக்கும் தசைகள் வலிப்பது இயல்பு. தசை இறுகுவது போன்றும், எதை செய்தாலும் வலி தருவது போன்று இருக்க கூடும். சிலருக்கு இதனால் அதிக தலைவலியும் உண்டாகும்.

மறந்து விடுவீர்கள்..!
காதலில் இருக்கும் போதும் காதலில் இருந்து பிரியும் போதும், நம்மையே நாம் மறந்து விடுகின்றோம். சிலருக்கு மூளையின் திறன் குறைய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு இதனால் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும்.

தற்கொலை..!
காதலில் பிரிவோ, தோல்வியோ அடைந்தால் பலர் செய்ய கூடிய மிக பெரிய அறியாமைத்தனம் தற்கொலை தான். இது போன்ற தற்கொலையில் இந்தியா தான் முதன்மையான இடத்தில் உள்ளது. காதல் முறிவிற்கு தற்கொலை எந்த விதத்திலும் தீர்வாகாது என்பதை உணருங்கள்.

தீர்வு!
காதல் என்பது ஒரு முறை தான் வர வேண்டும் என்றில்லை. காதல் ஓர் உணர்வு, அவ்வளவுதான். அழுகை, சிரிப்பு, கோபம் ஆகிய உணர்வுகளை போன்றது தான் காதலும்.
"நிற்பது வீழும் நகர்வது வாழும்" என்பதை நினைவில் வைத்து நம்பிக்கையுடன் நடை போடுங்கள். உங்களுக்கான நல்ல துணை உங்களை வந்து சேருவார்.



Click it and Unblock the Notifications