Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
தூங்க போகும் முன்னர் இதை கொஞ்சம் சாப்டுட்டு தூங்குங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..!
ஒவ்வொரு உணவு பொருளுக்கும் ஒரு தனி தன்மை உண்டு. சில உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம், சில உணவுகளை காலை நேரத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை இரவில் ஒரு போதும் சாப்பிடவே கூடாது... இப்படி பல தன்மைகள் உணவுகளுக்குள் இருக்கும். அந்த வகையில் நாம் சாப்பிட கூடிய உணவுகளின் நேரம் மிக அவசியம்.

குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவுகளில் நாம் மிக கவனமாக இருத்தல் வேண்டும். ஆனால், உண்மையிலே சில உணவுகளை இரவில் சாப்பிடுவதால் பலவித மாற்றங்களும், நன்மைகளும் உடலில் நடக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. குறிப்பாக யோகர்ட்டை படுக்கைக்கு முன் சாப்பிட்டால் நீங்கள் எதிர் பார்ப்பதை விட பல்வேறு நன்மைகள் கிடைக்குமாம்.
யோகர்ட்டை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, இதனை எவ்வாறு சாப்பிட்டால் பலன் அதிகம், எந் நேரத்தில் யோகர்ட் சாப்பிட்டால் சிறந்தது போன்ற ஏராளமான தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

தயிரா? யோகர்ட்டா..?
பலருக்கும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதாவது, யோகர்ட்டும் தயிரும் ஒன்று என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது.
யோகர்ட் வேறு, தயிர் வேறு என்பதே உண்மை. காரணம் இவை இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் பெரிய அளவில் வேறுபட கூடும். அதே போன்று இவை தயாரிக்கும் முறையும் மாறுபடும்.

யோகர்ட் சத்துக்கள்
தயிரை காட்டிலும் யோகர்ட் அதிக ஆரோக்கியம் நிறைந்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் இதில் உள்ளது. உடல் எடையை விரைவாக குறைக்க யோகர்ட் உதவும்.

ஹார்மோன்
தூங்க போகும் முன் யோகர்ட் சாப்பிட்டால் ஹார்மோன் சிறப்பாக உற்பகுதி ஆகும். குறிப்பாக tryptophan என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இதனால் இரவில் நிம்மதியான மன நிலையை பெற இயலும். அத்துடன் மூளையும் அமைதியான தன்னைக்கு வந்து விடும்.

உடல் எடை
உடல் எடை பிரச்சினைக்கு என்னென்னவோ வழிகளை தேடுவோருக்கு சிறந்த வழியாக இருப்பது யோகர்ட் தான். தூங்க போகும் முன் யோகர்ட் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள உணவுகளை விரைவாக செரிக்க செய்து உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும்.

தசைகளுக்கு
யோகார்ட்டில் உள்ள அதிக படியான புரதசத்து தசை வளர்ச்சிக்கு உதவும். தசைகள் தேய்மானம் அடைவதையும், வலுவில்லாமல் இருத்தல், தசை பாதிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தர யோகர்ட் உள்ளது. அத்துடன் புரதசத்து குறைபாட்டையும் இது குறைக்க வழி செய்கிறது.

செரிமான பிரச்சினைகளுக்கு
எதை சாப்பிட்டாலும் செரிமான கோளாறு உண்டாகினால், அதை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருப்பது யோங்கர்ட் தான்.
இரவு நேரத்தில் சிறிதளவு யோகர்ட் சாப்பிட்டால் மிக விரைவாக செரிமானம் நடைபெறும். மேலும், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிக காலம் உயிர் வாழ வைக்கும்.

யார் யாருக்கு?
எந்த ஒரு உணவாக இருந்தாலும் அது ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் பொருத்தே மாறுபடும். அதே போன்று தான் யோகர்டும். சிலருக்கு யோகர்ட்டை காலையில் சாப்பிட்டால் ஒத்து கொள்ளும்.
சிலருக்கு இரவில் சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும். சளி, இரும்பல், பிரச்சினை கொண்டோரை தவிர்த்து மற்றவர்களுக்கு இது சிறந்த உணவாக தான் இருக்கும்.

தூக்கம்
தூங்க போகும் முன்னர் யோகர்ட் சாப்பிட்டால் மூளையின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து தூங்கும் மனநிலைக்கு வந்து விடும்.
அத்துடன் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் சுரந்து ஆழ்ந்த தூக்க நிலையை உண்டாக்கும். நிம்மதியான தூக்கத்தை தருவர்க்கு யோகர்ட் அற்புதமான தேர்வாகும்.

எவ்வளவு
இரவில் தூங்க போகும் முன் 3 ஸ்பூன் யோகர்ட் சாப்பிட்டு தூங்கினால் மேற்சொன்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் உடல் மற்றும் மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
இதை பழங்கள், பாதாம் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால் மேலும் பல நன்மைகள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications
