For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருந்து வாங்கும் போது உங்களிடமிருந்து மறைக்கும் எந்த 8 இரகசியங்கள் என்னென்ன?

|

நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு. சில சமயங்களில் அவை நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும். ஆனால், பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய கால கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மருந்து வாங்கும் போது உங்களிடமிருந்து மறைக்கும் எந்த 8 இரகசியங்கள் என்னென்ன?

சில நேரங்களில் நாம் சாப்பிட கூடிய மருந்துகளின் வீரியம் நமக்கு தெரிவதில்லை. பல டிகிரிகளை வாங்கிய பலரும் இதை கவனிப்பது கூட கிடையாது. இப்படி இருக்க எதையும் அறியாத பாமர மக்கள் இதனால் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

இப்படி இதற்குள் பல்வேறு விஷயங்கள் மறைந்துள்ளது என்றே கூறலாம். மருந்து கடையில் மருந்து வாங்கும் போது நம்மிடம் இருந்து மறைக்கப்படும் சில முக்கியமான ரகசியங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாத்திரைகள்

மாத்திரைகள்

நாம் வாங்க கூடிய மாத்திரைகள் என்னது என்பதை நம்மிடம் தெளிவாக கூற மாட்டார்கள். பொதுவாக மருத்துவர்களை விட மருந்து விற்போருக்கே மாத்திரைகளை பற்றி தெளிவாக தெரிந்திருக்கும்.

ஆனால், நம்மிடம் அந்த மாத்திரை எதற்காக, அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா, உடல் நல கோளாறுகள் உண்டாகுமா? போன்ற தகவல்கள் அவர்களுக்கு தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள்.

தரமற்றது

தரமற்றது

சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து அதற்கு ஏற்றாற்போல மாத்திரைகளை கொடுப்பார்கள். அந்த மாத்திரை தர குறைந்ததாக இருந்தாலும் அதை சில மருந்து கடைகளில் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இது போன்ற நிலை நமது உடல் நலத்தை தான் பாதிக்கும். மேலும், நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மருந்து சீட்டு

மருந்து சீட்டு

மருத்துவ சட்டத்தின் படி மருத்துவர் எழுதி தந்த மருந்து சீட்டை கொண்டு தான் நாம் மாத்திரைகளை வாங்க வேண்டும். இது காய்ச்சல் முதல் பெரிய நோய்கள் வரை விதிகளுக்குள்ளானது.

ஆனால், இன்று பல மருந்து கடைகளில் இதை பின்பற்றுவதே கிடையாது. இதனால் பல உயிர் இழப்புகள் கூட ஏற்படுகிறது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

MOST READ:முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா? ஏன் தெரியுமா?

காலாவதி மாத்திரைகள்

காலாவதி மாத்திரைகள்

ஒரு சில மருந்து கடைகளில் காலாவதியான மாத்திரைகளை விற்று அதில் இருந்து லாபம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக படிப்பறிவு இல்லாதவர்களிடம் இது போன்ற காலாவதி மாத்திரைகளை விற்று ஏமாற்றுகிறார்கள். இதை பலரும் நம்மிடம் வெளிப்படுத்துவது இல்லை.

Pc:Artix Kreiger 2

காய்ச்சல்

காய்ச்சல்

சில மருந்து கடைகளில் காய்ச்சலுக்காக நாம் மாத்திரைகளை கேட்டு போனால் மேலும் சில பாதிப்புகளுக்கான மாத்திரைகளையும் சேர்த்து கொடுப்பார்கள்.

இந்த நிலை உண்மையிலே மோசமானது தான். இதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் மாத்திரைகளை பற்றி தனித்தனியாக விசாரித்து கொள்ள வேண்டும்.

பணம்

பணம்

பல மாத்திரைகள் ஒரே வேலையை தான் செய்யும். ஆனால், நம்மிடம் அந்த மாத்திரையை விட இன்னொரு மாத்திரை தான் சிறப்பாக செயல்படும் என கூறி விற்று விடுவார்கள்.

இந்த ரகசியத்தை பல மருந்து கடைகள் நம்மிடம் கூறுவதில்லை. வெவ்வேறு விலைகளில் ஒரே வேலையை செய்ய கூடிய மருந்துகளை பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் பெற்றதா.?

அங்கீகாரம் பெற்றதா.?

நீங்கள் வாங்கும் மருந்து கடைகள் அங்கீகாரம் பெற்றதாக உள்ளதா? என்பதை முதலில் பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையெனில் அவை பல்வேறு போலி மருந்துகள் விற்கப்படும் கடைகளாக இருக்கலாம். எனவே, எதிலும் எப்போதும் ஜாக்கிரதையாக செயல்படுங்கள்.

MOST READ:ஆண்மை குறைவு முதல் புற்றுநோய் வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் இஞ்சி எண்ணெய்!

தேவைக்கு அதிகமாக!

தேவைக்கு அதிகமாக!

உங்கள் மருத்துவர் எழுதி கொடுத்திருக்கும் அளவிற்கு மட்டும் மாத்திரைகளை வாங்கி கொள்ளுங்கள். ஏனெனில், சில மருந்து கடைகளில் லாபம் பார்க்க வேண்டும் என்கிற பெயரில் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொடுத்து விடுவார்கள். இது ஏராளமான பக்க விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets Your Pharmacist Won't Reveal To You

Here we listed some of the secrets that your pharmacist won't reveal to you.
Desktop Bottom Promotion