Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
இனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்! காரணம் தெரியுமா..?
இந்த உலகம் ஒரு சில கால கட்டத்தில் மட்டுமே சில மனிதர்களையும், சில நிகழ்வுகளையும் உற்று நோக்கும். அந்த வகையில் ஒரே நோய் உலகை உலுக்கிய பல வரலாறுகள் இன்றும் உண்டு. ஒரு கால கட்டத்தில் அம்மை நோய் பாதிப்பால் கும்பல் கும்பலாக மக்கள் இறந்தனர். சில காலங்களில் தொழு நோய்களால் ஊரே அவரவர்களை மாய்த்து கொண்டும் உள்ளனர். இப்படி பலவித நோய்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறி கொண்டே வருகின்றன.

இன்றைய கால சூழலில் நம்மை ஆட்டி படைக்கும் கொடிய நோய் என்றால் எல்லோருமே புற்றுநோயை தான் கைகாட்டுவோம். இதற்கு காரணம், மற்ற நோய்களை விட இதன் வீரியம் மிக அதிகம் என்பதாலே. அறிவியல் எவ்வளவு வளர்ச்சிஅடைந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் வந்த பாடில்லை.
ஆனால், இதை பற்றிய பொய்யான ஆய்வுகள் தகவல்களை மட்டும் நாம் தெளிவாக நினைவில் வைத்துள்ளோம். இப்படிப்பட்ட ஒரு சர்ச்சையில் தான் ஆண்களுக்கு மட்டுமே இனி புற்றுநோய் வரும் என்கிற கருத்தும் உள்ளது. உண்மையில் இது சாத்தியமா? மார்பக புற்றுநோய் ஏன் ஆண்களை மட்டுமே தாக்கும்? மார்பக புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் என்னென்ன? இப்படி பல தகவல்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

பரம்பரை நோய்!
மரபணு ரீதியாக கடத்தப்படும் நோய்களை பரம்பரை நோய்கள் என்று கூறுவர். மார்பக புற்றுநோயும் ஒரு வகையில் இதில் அடங்கும்.
இருப்பினும் 5%-10% என்கிற மிக குறைந்த அளவிலே இது ஒரு பரம்பரையில் இருந்து அடுத்த பரம்பரைக்கு அப்படியே பின் தொடரும். ஆனால், இதன் தாக்கம் முழுமையாக இருக்காது.

உள்ளாடை
உள்ளாடை அணிந்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும் என்கிற கட்டுக்கதை பல ஆண்டுகளாக உலவி வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய். உள்ளாடை அணிவதால் மார்பக புற்றுநோய் உருவாகும் என அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்க படவில்லை.
உள்ளாடை அணியலாமா? கூடாதா? என்பது உங்கள் விருப்பம் மட்டுமே. தவிர இதற்கும் புற்றுநோயிற்கும் சம்பந்தம் கிடையாது.

கட்டிகள்
மார்பு பகுதியில் கட்டிகள் உருவாகினால் நிச்சயம் அதை சாதாரணமாக எடுத்த கொள்ள கூடாது. சிலர் இதனை சூடு கட்டி என நினைத்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்.
மார்பக பகுதியில் கட்டிகள் இருந்தால் மார்பக புற்றுநோயிற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு மட்டும்!
மார்பக புற்றுநோய் என்றால் அது பெண்களை மட்டுமே குறி வைக்கும் என பல ஆண்கள் நினைத்துள்ளனர். ஆனால், இது அப்படி கிடையாது.
ஆண்கள் பெண்கள் என இருவரையும் இது தாக்க கூடிய வீரியம் கொண்டது. சொல்ல போனால், பெண்களை விட ஆண்களே மார்பக புற்றுநோயின் பாதிப்பால் அதிகம் இறக்கின்றனர் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பால்
பல ஆண்டுகளாக இந்த கட்டுக்கதை திரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, தினமும் பால் குடித்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும் என பலர் நம்பி வருகின்றனர்.
ஆனால், இது உண்மை இல்லை. பால் குடிப்பதால் எந்த வகையிலும் மார்பகத்தை பாதிக்காது என்பதே உண்மை.

பரவ கூடிய நோய்
பரவ கூடிய நோய்களின் வரிசையில் இந்த மார்பக புற்றுநோயையும் சேர்த்து விட்டனர் சிலர். ஆனால், இது முற்றிலும் தவறான புரிதல்.
இந்த வகை புற்றுநோய்கள் எப்போதுமே மற்றவர்களுக்கு பரவாது. இவை நம் உடலில் உற்பத்தியாகும் புற்றுநோய் செல்களின் மூலம் நம் உடலில் மட்டுமே பரவும்.

ஆண்களுக்கு மட்டுமே!
மார்பக புற்றுநோய் 25 வயதை தாண்டிய ஆண்களுக்கு மட்டுமே உருவாகும் என்பது சுத்த பொய். எப்படி எல்லா வயது பெண்களுக்கும் புற்றுநோய் வருகிறதோ அதே போன்று தான், எல்லா வயதுடைய ஆண்களுக்கும் இதன் தாக்கம் ஏற்பட கூடும். இதில் வயது வித்தியாசம் கிடையாது.

பாடி ஸ்பிரே
மார்பக புற்றுநோய் வருவதற்கும் பாடி ஸ்பிரே பயன்படுத்துவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. டியோடரண்ட், பாடி ஸ்பிரே போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கான சான்றுகள் இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யவில்லை.

மமோகிராம்
சிலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர். மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மமோகிராம் என்கிற கருவியின் மூலம் x-ray எடுத்தால் புற்றுநோய் மேலும் பரவும் என நினைத்துள்ளனர்.
ஆனால், இந்த கருவி புற்றுநோயை கண்டறியவே, தவிர நோயை பரப்புவதற்கு இல்லை. இதன் x-ray தாக்கம் மிக குறைந்த அளவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கட்டுக்கதைகள்!
எப்போதுமே எந்த நிலையிலும் கட்டு கதைகளை நம்பி விடாதீர்கள். கட்டுக்கதைகள் என்றுமே வெறும் கட்டுக்கதைகள் மட்டுமே. இதை நம்பினால் பாதிக்கப்படுவது நாம் மட்டும்தான் என்பதை நினைவில் வைத்து, கட்டுக்கதைகளை நம்பாதீர்கள். அதே போன்று அதை நீங்களும் பரப்ப செய்யாதீர்கள்.



Click it and Unblock the Notifications











