Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
ஆண்களே! தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்படுணுமா..? அப்போ இந்த பழத்த பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..!
நாம் அன்றாடம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவு வகையிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. இவை அனைத்துமே அந்தந்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில உணவுகள் ஆண்களின் உடலுக்கு அதிக வலுவை தரும். ஒரு சில உணவுகள் பெண்களுக்கு எண்ணற்ற நலன்களை தர வல்லது.

அந்த வகையில் ஆண்களின் பல வித பிரச்சினைகளை தீர்க்க கூடிய தன்மை ஒரு பழத்தில் அதிக அளவிலே உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. தாம்பத்தியில் சிறப்பாக செயல்படவும், ஆண்களுக்கான கலவி பிரச்சினைகளை தீர்க்கவும், ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்யவும் ஒரு பழம் உதவுகிறது.
அது வேற எந்த பழமும் இல்லை, நம்ம வீட்டிலே இருக்க கூடிய வாழைப்பழம் தான். வாழைப்பழத்தை ஒரு சில ஆயுர்வேத உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சரி, வாங்க வாழைப்பழம் எப்படியெல்லாம் ஆண்களுக்கு உதவுகிறது என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

காரணம்..?
வாழைப்பழத்தில் உள்ள தாதுக்களும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் தான் ஆண்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.
குறிப்பாக வைட்டமின் எ, பி, ஈ, இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை தான் இதன் மகிமைக்கு மூல காரணம். இவை அந்தரங்க உறுப்பு முதல் மூளை வரையிலும் பயன்களை தருகிறது.

ஆணுறுப்பு பலப்பட..
பொதுவாகவே ஆண்கள் பலருக்கும் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சினைகளும் குறைபாடுகளும் ஆணுறுப்பில் உருவாகிறது.
சுற்றுப்புற சூழல், அன்றாட உணவு முறை, மரபணு மாற்றம் போன்றவற்றல் உடலில் ஆண்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் உண்டாகுகிறது.

அதிக நேரம்...
வாழைப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் ஆண்கள் தங்களது தாம்பத்திய வாழ்வில் அதிக நேரம் நீடித்திருக்கலாம்.
மேலும், ஆண்களுக்கான ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைத்து அதிக இன்பத்தை ஏற்படுத்தும் என தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண்களும் வாழையும்..!
ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் 1 சாப்பிட்டு வருதால் எளிதாக நல்ல உடல் அமைப்பை பெற்று விடலாம்.
இவற்றில் உள்ள tryptophan என்கிற அமினோ அமிலங்கள் உங்களது மனநிலையை மகிழ்வாக மாற்றும். மேலும், மன அழுத்தத்தை போக்கி கலவியில் சிறப்பாக செயல்பட செய்யும்.ஆண்மை குறைவு பிரச்சினைக்கும் இது தீர்வை தரவல்லது.

ரத்த ஓட்டம் எப்படி..?
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் ஆண்களின் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக உற்பத்தி செய்து அனுப்பும்.
1 வாழைப்பழத்தில் சராசரியாக 400 mg பொட்டாசியம் இருப்பதால், தாராளமாக தினமும் ஒன்றை ஆண்கள் சாப்பிட்டு வரலாம் என இயற்கை மருத்துவத்திலும் கூறப்படுகிறது.

வாழைப்பழ தோல்
ஆண்களை மட்டுமே குறி வைத்து தாக்க கூடிய இந்த பிறப்புறுப்பு புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மை வாழைப்பழத்தின் தோலில் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மேலும், இதனை பற்றிய தெளிவான ஆராய்ச்சி மேற்கொள்ள பட்டு வருகிறது.

காரணம் என்ன..?
வாழைப்பழ தோலில் அதிக அளவில் மெலட்டோனின் உள்ளது. இவை ஆண்களுக்கு மிகவும் தேவையான ஒரு மூல பொருளாகும்.
இது தான் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறதாம். மேலும், மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளதாம்.

சிறுநீரகம்
பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதால் சிறுநீரகம் சிறப்பாக செயல்படும். மேலும், எலும்புகளின் தேய்மானத்தையும் இது தடுக்கிறதாம்.
வாழைப்பழத்தில் இருக்க கூடிய தாதுக்கள் தான் இவற்றிற்கு முக்கிய காரணமாம்.

ஆற்றலை அதிகரிக்க
வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் உங்களின் ஆற்றல் பல மடங்காக உயரும். இதனால் நீண்ட நேரம் உங்களால் தாம்பத்தியத்தில் செயல்பட இயலும். மேலும், இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதில் உள்ளது.

நார்சத்து
வாழைப்பழத்தை தினமும் 1 சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்கிற பிரச்சினையே நமக்கு ஏற்படாதாம். மேலும், செரிமான கோளாறுகளையும் இது சரி செய்ய வல்லது. இதற்கெல்லாம் காரணம் இதிலுள்ள நார்ச்சத்துக்கள் தான். இவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் அதிகம் உதவும்.



Click it and Unblock the Notifications