Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தினமும் 1 முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமாம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் நன்மை தீமைகள் என இரு பிரிவுகள் உள்ளது. சாப்பிட கூடிய உணவின் தன்மை அறிந்து உண்ண வேண்டியது மிக அவசியம். எந்த வகை உணவாக இருந்தாலும் கால நேரம் மிக முக்கியம். கண்ட நேரத்தில் நாம் உணவை சாப்பிடுவதால் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகும்.

அதே போன்று தான் முட்டையும். முட்டையை பற்றிய பல வித ஆய்வுகள் ஏராளமான தகவல்களை சொல்கின்றன. முட்டை சாப்பிட்டால் நல்லது, முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது, முட்டையால் ஏற்படும் பாதிப்புகள், முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு உண்டாகும்... இப்படி எக்கசக்க செய்திகள் பரவி வருகிறது.
முட்டையில் இருக்க கூடிய ஊட்டச்சத்துக்களை காட்டிலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம் என சிலர் நம்பி வருகின்றனர். உண்மையில் இதனால் எதாவது பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை இந்த பதிவில் தெளிவாக அறிந்து கொள்வோம்.

முட்டை
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் எ, ஜின்க், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து போன்றவை முட்டையில் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு இருக்க இதனால் பாதிப்பு ஏற்படுமா!?

ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
பலருக்கும் இந்த சந்தேகமும் இதை பற்றிய வதந்தியும் உள்ளது. முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் இதனால் பாதிப்புகள் ஏற்பட கூடும். காரணம் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான்.
3 நாட்களுக்கு மேல் வெளியில் உள்ள முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் பாக்டீரியாக்களினால் ஒவ்வாமை உண்டாகும்.

சர்க்கரை நோயை தடுக்குமா?
முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் முழுமையாக தடுக்க படாது. ஆனால், இதுவும் ஒரு காரணியாக சர்க்கரை நோயை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சாப்பிட கூடிய உணவுடன் தினமும் 1 முட்டை சேர்த்து கொண்டால் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

மஞ்சள் கருவா!?
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது என ஒரு கும்பல் அலப்பறை செய்யும். ஆனால், அது அப்படி கிடையாது. மஞ்சள் கருவில் வைட்டமின் எ, கே, டி, பி பல்வேறு வைட்டமின் உள்ளன. ஆகையால் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.

பாலும் முட்டையும்!
பாலுடன் முட்டையை கலந்து சாப்பிட்டால் அது விஷ தன்மை பெற்று விடும் என கூறப்படுகிறது. இது ஒரு வகையில் உண்மை தான்.
பாலையும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் அவை செரிமான கோளாறு, வாந்தி, மயக்கம், வாயு தொல்லை ஆகிய பிரச்சினைகளை உண்டாகி விடும். எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
முட்டையை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலின் அளவு உயரும் சில நம்புகின்றனர். ஆனால், இது ஒரு வகையில் உண்மையும் கூட. கொலஸ்ட்ரால் பிரச்சினை கொண்டோர் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை சாப்பிட்டு வரலாம். இது ஆரோக்கிமானது தான்.

முட்டையும் கிருமியும்!
முட்டையில் சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா உள்ளது. ஆதலால், முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பாதிப்பை உண்டாக்க கூடும்.
எனவே, நன்றாக சமைத்து சாப்பிட்டால் இந்த பாக்டீரியா இறந்து விடும். மேலும், முட்டையை கழுவுவதால் இந்த பாக்டீரியா முட்டையை விட்டு செல்லாது என்பதை உணருங்கள்.

ஆண்மை குறைவா?!
முட்டையை தினமும் சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படும் என்கிற பேச்சு உள்ளது. தினமும் முட்டை சாப்பிட்டால் ஆண்மை பலம் அதிகரிக்குமே தவிர, குறையாது என ஆய்வுகளே சொல்கின்றன. எனவே, தினமும் 1 முட்டையை ஆண்கள் சாப்பிடுவது நல்லது தான்.

தினமும் 1 முட்டையா?
தினமும் 1 முட்டை சாப்பிடலாமா என்கிற கேள்விக்கு பதில் "ஆம்" என்பதே. ஆனால், முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே சிறந்தது. இது உங்களுக்கு முழு ஊட்டச்சத்துக்களையும் அப்படியே தரும். மேலும், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



Click it and Unblock the Notifications