For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு! வைரலான செய்தி!

|

உலக அளவில் பல்வேறுபட்ட சடங்குகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல சடங்குகள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் சில சடங்குகள் மனித இனத்திற்கு நன்மை தருவதாக உள்ளது. இந்த வகையில் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும் என்கிற சடங்கும் அடங்கும். பெரும்பாலும் இந்த வகை சடங்குகளை இஸ்லாமியர்கள் "சுன்னத்" என்கிற பெயரில் செய்து வருகின்றனர்.

ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு! வைரலான செய்தி!

அதே போன்று சில பழங்குடி இனத்தவர்களும் இந்த வகை சடங்குகளை இன்றும் கடைபிடித்து வருகின்றனர். மிகுந்த வலிமிக்க இந்த செயலை ஆண்கள் கட்டாயம் செய்தாக வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், நாடாளுமன்றத்தில் உள்ள ஆண்கள் முதலில் இந்த சடங்கை இப்போதே செய்ய வேண்டும் என்கிற முறையில் அவர் வலியுறுத்து உள்ளார்.

ஏன் இப்படி அந்த பெண் எம்.பி கூறினார்? இதன் பின்னணி என்ன? இதனால் ஏதேனும் நன்மைகள் உண்டா? அல்லது பாதிப்பு ஏற்படுமா..? போன்ற பல கேள்விகளுக்கு விடையை இந்த தொகுப்பில் அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தரங்க உறுப்பு!

அந்தரங்க உறுப்பு!

சில மோசமான சடங்குகளை பல ஆயிரம் ஆண்டுகளாக மத சடங்குகள் என்கிற பெயரில் செய்து வருகின்றனர். பெரும்பாலும் இது போன்ற சடங்குகள் பெண்களுக்கே அதிக அளவில் இருந்து வருகிறது.

இருப்பினும் ஆண்களின் ஆண்குறியின் நுனி தோலை நீக்கவதும் முதன்மையான சடங்காக ஆண்களுக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இதை ஒரு விழா போலவே கொண்டாடியும் வருகின்றனர்.

ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு! வைரலான செய்தி!

பலவித வைரலான பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பெண்ணே ஒரு ஆணின் ஆண்குறியின் நுனி தோலை நீக்க வேண்டும் என கூறியது தான் இங்கு பலரை அதிர வைத்துள்ளது. அதுவும் ஒரு பெண் எம். பி இவ்வாறு பகிரங்கமாக சொன்னதை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பகிரங்கம்!

பகிரங்கம்!

பலவித வைரலான பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பெண்ணே ஒரு ஆணின் ஆண்குறியின் நுனி தோலை நீக்க வேண்டும் என கூறியது தான் இங்கு பலரை அதிர வைத்துள்ளது. அதுவும் ஒரு பெண் எம். பி இவ்வாறு பகிரங்கமாக சொன்னதை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

யார் அவர்?

யார் அவர்?

தான்சானியா நாட்டின் நாடாளுமன்ற பெண் உறுப்பினரான ஜேக்லைன் நோங்யானி என்பவர் தான் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.

முதலில் நாடாளுமன்றத்தில் உள்ள ஆண் உறுப்பினர்கள் உடனடியாக இதை செய்தாக வேண்டும் என்றும் அழுத்தமாக கூறியுள்ளார். ஒரு பெண் உறுப்பினர் இவ்வாறு சொல்வதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?!

காரணம்?

காரணம்?

ஒரு பெண் எம்.பி இவ்வாறு சொல்வதற்கு மிக முக்கிய காரணம் உள்ளது. தான்சானியா நாட்டில் எச்.ஐ.வி நோய் மிக பெரிய அளவில் பரவி வருகிறது.

உலகில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் தான்சானியா 13-ஆம் இடத்தில் உள்ளது. இந்த பாதிப்பை குறைக்கவே பெண் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.

MOST READ:100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..!

ஆண்குறி!

ஆண்குறி!

ஆண்குறியின் நுனி தோலை நீக்குவது ஒரு சடங்காக கருதப்பட்டாலும் இதனால் பல வகையில் நன்மை உள்ளது. குறிப்பாக எச்.ஐ.வி பரவும் பாதிப்பை இந்த ஆண்குறியின் மேல் தோலை நீக்கும் சடங்கு 60% குறைக்கும் என உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது.

இதை போன்ற மேலும் சில நன்மைகள் ஆண்குறியை நீக்குவதால் ஆண்களுக்கு உண்டாகும். இதனாலேயே தான்சானியா நாட்டில் 70% ஆண்கள் ஆண்குறியின் நுனி தோலை நீக்கியுள்ளனர்.

அரசியல்வாதிகள்!

அரசியல்வாதிகள்!

இதே போன்று தான்சானியாவின் அண்டை நாடான கென்யாவிலும் இந்த சடங்கை அந்நாட்டு முன்னணி அரசியல்வாதிகளே முன்னின்று செய்துள்ளனர்.

காரணம் இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கம் என அவர்கள் விளக்கி உள்ளனர்.

பாலியல் நோய்கள்

பாலியல் நோய்கள்

ஆண்கள் இந்த வகை சடங்கை செய்வது அவசியம் என மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர். காரணம் உடலுறவின் போது பரவ கூடிய பாலியல் நோய்களை இந்த ஆண்குறி மேல் தோலை நீக்குவதால் தடுத்து விடலாம்.

அந்தரங்க உறுப்பு

அந்தரங்க உறுப்பு

இப்படி ஆண்குறியின் மேல் தோலை நீக்குவதால் ஆண்களின் அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 45% குறையுமாம்.

தற்போது அதிக அளவில் படையெடுத்து வரும் புற்றுநோய்களில் இது அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: இந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..?

உடலுறவு

உடலுறவு

ஆண்குறியின் மேல் தோலை நீக்கப்பட்ட ஆண்கள், தனது இணையுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்களுக்கு உண்டாகின்ற கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பலவிதத்தில் பயனை தரும்.

தொற்றுகள்

தொற்றுகள்

ஆண்களுக்கு அடிக்கடி ஏற்பட கூடிய நோய் தொற்றுகளையும் இந்த செய்முறையின் மூலம் தடுக்க இயலும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பில் உண்டாக கூடிய பாதிப்புகளை இந்த சடங்கு தடுத்து விடும். இதை பற்றிய விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: men body ஆண் உடல்
English summary

Health Benefits of Male Circumcision

Health Benefits of Male Circumcision
Desktop Bottom Promotion