For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நோய்கள் இருப்பவர்களுக்கு எய்ட்ஸ் நோயும் கூடவே இருக்கிறது என்று அர்த்தமாம்!

|

பல்வேறு நோய்கள் நம்மை சுற்றி வலம் வருகின்றன. அவற்றில் ஒரு சில நோய்கள் அதிக வீரியத்துடன் செயல்படுகின்றன. முன்பெல்லாம் நோய்களை பற்றி நம் முன்னோர்கள் கொஞ்சம் கூட கவலை படமால் இருந்தார்கள். ஆனால், இப்போது இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. இதற்கு மூல காரணமே எதிர்ப்பு சக்தி குறைபாடு தான்.

மக்களுக்கு நாளுக்கு நாள் உடலில் எதிர்ப்பு சக்தி மண்டலம் பலவீனம் அடைந்து வருகிறது என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதற்கு எதிர் முனையில் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே போகிறது. இவை இரண்டிற்கும் நடுவில் நாம் தான் மாட்டி கொண்டு முழிக்கின்றோம்.

இதில் மோசமான நிலை என்னவென்றால், சில நேரங்களில் சாதாரண நோய்கள் வந்தால் கூட அவற்றுடனே வேறு சில பயங்கர நோய்களும் வந்து விடுகின்றன. இனி, எந்தெந்த நோய்கள் எய்ட்ஸ் நோயுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதி பயங்கர நோய்கள்!

அதி பயங்கர நோய்கள்!

நோய்கள் பல இருக்கலாம். ஆனால், ஒரு சில நோய்கள் மட்டுமே மிக மோசமான விளைவை நம்முள் ஏற்படுத்தும். இதில் முதல் இடத்தில் இருப்பவை புற்றுநோய், எய்ட்ஸ், பாலியல் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கூறலாம். இந்த வகை நோய்களால் பாதிக்கப்படுவோர் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ்!

எய்ட்ஸ்!

மற்ற நோய்களை விட எய்ட்ஸ் என்கிற பெயரை கேட்டதுமே நம்மில் பலர் நிச்சயம் ஒரு வித உணர்வை வெளிப்படுத்துவோம். ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் வந்து விட்டால் அவ்வளவு தான்.

அவரை தீண்டத்தகாதவர் போன்றே நடத்துவோம். ஆனால், இது மிகவும் தவறான விஷயம் என்பதே நிதர்சனம். எய்ட்ஸ் நோயுடன் நேரடி தொடர்பு கொண்ட நோய்களின் மூலம் இதன் அபாயத்தை நம்மால் உணர முடியும்.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

பலருடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தான் இந்த வகை பாலியல் நோய்களை உருவாக்குகின்றன. இவை ஒருவரை உயிருடன் கொல்லும் அளவிற்கு மோசமான ஆளுமை கொண்ட நோய்கள் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. பால்வினை நோய்கள் உள்ளோருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

MOST READ: மாத்திரை சாப்பிடும்போது வெந்நீரை பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் விஷமாக மாறி விடுமா?

காசநோய்

காசநோய்

சாதாரணமாக இரும்பினாலே நாம் கொஞ்சம் படபடப்போம். இதுவே காசநோயாக இருந்தால் அவ்வளவு தான். முன்பெல்லாம் காசநோய் சற்று பயங்கர நோயாக கருதப்பட்டது.

காசநோய் உங்களுக்கு இருந்தால் அதன் தொடர்புடைய எய்ட்ஸ் நோயும் உங்களுக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆதலால் இதை பரிசோதித்து கொள்வது சிறந்தது.

பிறப்புறுப்பில் தொற்றுகள்

பிறப்புறுப்பில் தொற்றுகள்

சிலருக்கு அந்தரங்க உறுப்பில் ஏதேனும் தொற்றுகள் உண்டாகும். அதை வேறு ஏதோ நோயென கருதி விடுவார்கள். இப்படிப்பட்ட நோய்கள் கூட எய்ட்ஸ் நோயுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பிறப்பிருப்பில் ஏற்பட கூடிய தொற்றுகள் பல்வேறு ஆபாயங்களை நமக்கு உண்டாக்குமாம்.

கல்லீரல் நோய்

கல்லீரல் நோய்

கல்லீரலை பாதிக்கும் நோயான மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் கூட நாம் எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஏனெனில், சில சமயங்களில் கல்லீரல் பாதிப்புகள் கூட எய்ட்ஸ் நோயுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் உடலில் பரவ தொடங்கி புற்றுநோய் உங்களை ஆட்கொண்டு விட்டால் நிச்சயம் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். சிலருக்கு இது வெறும் புற்றுநோயுடன் சென்று விடும்.

ஆனால், சிலருக்கு இதனுடனும் எய்ட்ஸ் நோயின் தொடர்பு ஏற்பட கூடும். இது பெரும்பாலும் கருப்பை புற்றுநோய் கொண்டோருக்கே பெரும்பாலும் ஏற்படும்.

MOST READ: சைக்கோ குணத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா? இது உங்கள் காதலன்(அ) காதலிக்கு கூட ஏற்படலாம்..!

நரம்பியல் நோய்கள்

நரம்பியல் நோய்கள்

உடலில் நரம்பு சார்ந்த நோய்கள் இருந்தால் நீங்கள் உங்களை பரிசோதித்து கொள்வதில் தவறில்லை. காரணம் எய்ட்ஸ் நோய் மூளையை பாதிக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆதலால், நரம்பியல் சார்ந்த நோய்கள் இருந்தால் அதனுடன் எய்ட்ஸ் நோயும் தொடர்ப்பு கொண்டிருக்கும்.

பெருங்குடல் நோய்கள்

பெருங்குடல் நோய்கள்

நீண்ட நாட்களாக உங்களின் பெருங்குடலில் ஏதேனும் நோய் தொற்றுகளினால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக விட்டு விடாதீர்கள்.

இவை கூட எய்ட்ஸ் நோயின் தொடர்பால் ஏற்பட்டிருக்க கூடும். குறைந்தபட்சம் 1 மாதத்திற்கு மேல் இவ்வாறு இருந்தால் பரிசோதிப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common types of diseases associated with HIV

Here we listed some of the diseases that are associated with HIV.