For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்த அழுத்தம் வெள்ளையாக இருப்பவருக்கு அதிகம் வருமா? கருப்பா இருக்கிறவங்களுக்கா?

உயர் ரத்த அழுத்தங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதுபற்றிய விரிவான தொகுப்பு தான் இது.

|

இரத்தக் குழாயை நோக்கி பாயும் இரத்தத்தின் வேகத்தை அளவிடுவது இரத்த அழுத்தமாகும். இருதயம் இரத்தத்தை உறிஞ்சி, இரத்தக் குழாய்களுக்குள் செலுத்துகிறது . இந்த இரத்த குழாய்கள் உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. ஹைப்பர் டென்சன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது.

Blood Pressure

ஏனென்றால், இந்த நிலை உண்டாகும்போது இதயம் இரத்தத்தை உறிஞ்சி உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இதனால் தமனிகள் இறுக்கம், தமனி தடிப்பு, வாதம், சிறுநீரக நோய் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை உண்டாக நேரிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

வழக்கமான இரத்த அழுத்த குறியீடு என்பது 120/80. மேலே குறிப்பிட்டுள்ள எண் சிஸ்டாலிக் என்று அழைக்கப்படும். கீழே உள்ள எண் டயஸ்டாலிக் என்று அழைக்கப்படும். இதன் விவரம் பின்வருமாறு..

. வழக்கமான இரத்த அழுத்த குறியீடு - 120/80

. சற்று அதிகரித்த அளவு குறியீடு 12-129/80 க்கு குறைவு

. உயர் இரத்த அழுத்தம் முதல் நிலை - 130-139/80-89

. உயர் இரத்த அழுத்தம் இரண்டாம் நிலை - 140க்கு மேல் / 90 க்கு மேல்

. ஹைப்பர் டென்ஷன் அபாயம் - 180க்கு அதிகம் / 120 க்கு அதிகம் (உடனடியாக மறுத்த சிகிச்சை தேவை என்பதை உணர்த்தும்)

உங்கள் இரத்த அழுத்த நிலை வழக்கமான அளவை விட அதிகமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற்று அதனைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

MOST READ: சாய்பாபாவோட முழு ஆசிர்வாதத்தோட ஜம்முனு வாழப்போற ராசிக்காரர் இவர்தான்

என்ன காரணம்?

என்ன காரணம்?

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுதான் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் பல வித காரணங்களால் இரத்த அழுத்தம் உயர்கிறது. அவை,

. புகை பிடிப்பது

. அதிகரித்த எடை அல்லது உடல் பருமன்

. உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பது

. உணவில் அதிகம் உப்பு சேர்த்து கொள்வது

. அதிகமாக மது அருந்துவது (ஒரு நாளைக்கு 1 முதல் 2 ட்ரின்க் எடுத்துக் கொள்வது)

. மனஅழுத்தம்

. வயது முதிர்வு

. மரபணு அல்லது பாரம்பரியம்

. நமது குடும்பத்தில் முன்னோர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது

. நாட்பட்ட சிறுநீரக வியாதி

. அட்ரினல் கோளாறு அல்லது தைராய்டு கோளாறு

. குறட்டை விடுபவர்கள்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

அமெரிக்காவில் உள்ள உயர் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட 95% நோயாளிகளில், அடிப்படைக் காரணம் கண்டறியப்படவில்லை. உயர் இரத்த அழுத்தத்தில் இந்த வகையை "அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம்." என்று அழைக்கின்றனர். அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் சற்றே மர்மமானதாக இருந்தாலும், அது சில ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

குடும்பத்தினரிடையே அதிகமாக உண்டாகும் இந்த உயர் இரத்த அழுத்தம் குறிப்பாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. வயது மற்றும் நிறம் இதன் பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவில் வெள்ளையர்களை விட கருப்பு நிறத்தவர்கள் இதனால் இரண்டு மடங்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் 44 வயதை எட்டுபோது, இந்த இடைவெளி சற்று குறைகிறது. 65 வயதிற்கு மேல், கருப்பு இனப் பெண்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பை அடைகின்றனர்.

MOST READ: 4 நாளில் இந்த கொடூரமான பாதவெடிப்பை கூட சரிசெய்யும் இரண்டு பொருள்கள் இவைதான்...

வாழ்க்கை முறைகள்

வாழ்க்கை முறைகள்

உணவு மற்றும் வாழ்க்கை முறை இந்த அத்தியாவசிய இரத்த அழுத்த பாதிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக உப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த நிலைக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஜப்பானின் வட தீவுகளில் வசிக்கும் மக்கள் உலகின் மற்ற இடங்களில் வசிப்பவர்களை விட மிக அதிக அளவு உப்பு சேர்த்து உணவை எடுத்து கொள்கின்றனர். இவர்களுக்கு இந்த அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக, தங்கள் உணவில் சிறிதளவும் உப்பு சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு அத்தியாவசிய ஹைப்பர் டென்ஷன் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

உப்பு

உப்பு

உயர் இரத்த அழுத்த நோயாளிகளில் பலருக்கு உப்பு உணர்திறன் பாதிப்பு உண்டாகிறது. அதாவது, உடலுக்கு குறைந்தபட்சம் தேவையான உப்பு அளவு கூட அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகிறது. அத்தியாவசிய உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாவதற்கான இதர காரணிகள், உடல் பருமன், நீரிழிவு, மன அழுத்தம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவற்றை அளவு குறைவாக எடுத்து கொள்ளுதல், உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பது , நாட்பட்ட மது பழக்கம் ஆகியவை ஆகும்.

செகண்டரி ஹைப்பர் டென்ஷன்

செகண்டரி ஹைப்பர் டென்ஷன்

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான நேரடி காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போகும் நிலையை செகண்டரி ஹைப்பர் டென்ஷன் என்று கூறுவர். இந்த நிலை பாதிப்பு உண்டாவதற்கு முக்கிய காரணம், சிறுநீரக நோய். மேலும் ட்யுமர் கட்டிகள் மற்றும் இதர அசாதாரண நிலைகள் அட்ரினல் சுரப்பியை அதிக அளவு ஹார்மோன் சுரக்க வைப்பதால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. கருத்தடை மாத்திரைகள் குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளவை, மற்றும் கர்ப்பம் ஆகியவற்றின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். காரணம், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்வதால் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.

MOST READ: தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை

யார் யாருக்கு வரும்?

யார் யாருக்கு வரும்?

உயர் இரத்த அழுத்தம் யாருக்கெல்லாம் உண்டாகும் வாய்ப்பு அதிகம்?

. உயர் இரத்த அழுத்த பாதிப்பு கொண்ட குடும்ப உறுப்பினர்கள் கொண்ட மக்கள்

. புகை பிடிப்பவர்கள்

. ஆப்ரிக்கர் - அமெரிக்கர்

. கர்ப்பிணி பெண்கள்

. கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள்

. 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள்

. உடல் எடை அதிகம் உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள்

. சோம்பேறியாக உள்ளவர்கள்

. அதிக மது அருந்துபவர்கள்

. உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் சேர்த்த உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள்

. தூங்கும்போது குறட்டை விடுபவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes of High Blood Pressure

Blood pressure is the measure of the force of blood pushing against blood vessel walls. The heart pumps blood into blood vessels, which carry the blood throughout the body. High blood pressure, also called hypertension.
Story first published: Friday, March 8, 2019, 12:47 [IST]
Desktop Bottom Promotion