Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
உங்கள் உணவு விஷமாக மாற காரணம் என்ன தெரியுமா? அதை எப்படி தடுக்கலாம்?
அசுத்தமான உணவை சாப்பிடுவது உணவு நோய்த்தொற்று அல்லது உணவை விஷமாக மாற்றுவது உணவுப்பழக்க நோய் என்று அழைக்கப்படுகிறது.
மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவாகும். மனிதர்களை வாழவைப்பதுதான் உணவின் வேலை ஆனால் சிலசமயம் நாம் செய்யும் தவறுகளால் அந்த உணவே விஷமாக மாறிவிடுகிறது. சாப்பிட்ட உடனேயே குமட்டல், அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படியென்றால் உங்கள் உணவு விஷமாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

அசுத்தமான உணவை சாப்பிடுவது உணவு நோய்த்தொற்று அல்லது உணவை விஷமாக மாற்றுவது உணவுப்பழக்க நோய் என்று அழைக்கப்படுகிறது. உணவை சமைக்கும்போதோ அல்லது சேமிக்கும்போதோ அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தொற்றுக்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாகும். இந்த பதிவில் உணவுநோய்த்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உணவு மாசு
உணவு மாசுபாடு என்பது அதற்கான மூலப்பொருட்களை வளர்ப்பது, அறுவடை செய்வது, சேமிப்பது அல்லது சமைப்பது போன்ற எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நடக்கலாம். மேலும் வெளிப்புற தூண்டுதல்களாலும் உணவில் அசுத்தம் ஏற்படலாம்.

எந்த உணவுகளில் அதிக மாசு இருக்கும்?
பொதுவாக சமையலுக்கு உட்படுத்தாத பொருட்கள்தான் அதிக அசுத்தத்திற்க்கு ஆளாகிறது. உடனடியாக சாப்பிடக்கூடிய பொருட்களான சாண்ட்விச், சாலட் போன்ற பொருட்களில் அதிக மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. பாலை குடிப்பதற்கு முன் கொதிக்க வைக்கிறோமோ ஏன் தெரியுமா? ஏனெனில் இந்த வெப்பமாக்கல் முறையில் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது.

உணவு விஷமாவதற்கான காரணங்கள்
உணவு நோய்த்தொற்றுக்கு பாக்டீரியாக்களே மிகவும் பரவலான காரணமாக உள்ளது, அதே நேரத்தில் ஒட்டுண்ணிகளும் காரணமாக இருக்கிறது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. பொதுவாக இது இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பாலை அதிகம் தாக்குகிறது. இது கத்தியின், காய்கறி வெட்ட பயன்படுத்தும் பலகை மற்றும் சமைப்பவன் கை போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
உணவுநோய்த்தொற்றின் அறிகுறிகள் 1 முதல் 3 நாட்கள் வரை தோன்றலாம். ஒட்டுண்ணிகள் உங்கள் செரிமான மண்டலத்தில் உங்களுக்கே தெரியாமல் பல ஆண்டுகள் வாழக்கூடும். கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மோசமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். அதேபோல 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும்.

எப்போது ஏற்படும்?
உணவு நோய்த்தொற்று பெரும்பாலும் கோடைகாலத்தில் அதிகம் ஏற்படும். அதற்கு காரணம் கோடைகாலத்தில் உணவுகள் விரைவில் கெட்டுவிடும். மேலும் வெளியிடங்களுக்கு செல்லும்போது பச்சையாகவே அல்லது சரியாக வேகவைக்கப்படாத உணவுகளை சாப்பிடும்போது இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

எப்படி தடுக்கலாம்?
கிருமிகளும், பாக்டீரியாக்களும் கைகளின் மூலம் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே சாப்பிடுவதற்கு முன்னரும், சமைப்பதற்கு முன்னரும் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியமாகும். அதேசமயம் மீதமான உணவுகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

என்ன செய்ய வேண்டும்?
உணவு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வயிற்றுப்போக்கால் அவர்கள் குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்தை இழந்திருப்பார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன் சுத்தமாக கழுவ வேண்டும். அதேபோல நீங்கள் உணவு வைக்க போகும் இடத்தை முன்னரே சுத்தம் செய்ய வேண்டும். இந்த அறிகுறிகள் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications