Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்கள் மருத்துவரிடம் கேட்க மறுக்கும் 'அந்த' 10 கேள்விகள் இதோ..!
"தடைசெய்யப்பட்ட பகுதி" என்பதை போல "தடை செய்யப்பட்ட விஷயங்கள்" என்கிற தனி லிஸ்டே நம்மிடம் இருக்கும். பொது வெளியில் இன்னும் நாம் பேச தயங்கும் விஷயங்கள் ஏராளம். இதை பேசினால் யாராவது தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். சிலர் தனது அந்தரங்கமான பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கே மிகவும் தயங்குவார்கள்.

அதிலும் குறிப்பாக மருத்துவரிடம் சென்றதுமே தனக்கான அந்தரங்க பிரச்சினைகளை பேசுவதற்கு ஏனோ ஒரு தயக்கம். சிலர் இதை பற்றி எதையுமே கேட்காமல் நாள் கணக்காக 'அந்த' பிரச்சினையுடனே வாழ்கின்றனர். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனக்கான அந்தரங்க பிரச்சினைகளை கட்டாயம் மருத்துவரிடமாவது தெரிவிக்க வேண்டும்.
பெண்கள் கூட சில அந்தரங்க விஷயங்களை மகப்பேறு மருத்துவர்களிடம் தயங்காமல் கேட்டு விடுகின்றனர். ஆனால், ஆண்கள் இதை பற்றி கொஞ்சமும் வாயை திறப்பதே இல்லை என மருத்துவர்களே கூறுகின்றனர். இந்த பதிவில் ஆண்கள் கேட்ட தயங்கும் அந்த 10 அந்தரங்க கேள்விகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உறுப்புகள் வளைந்துள்ளதா..?
தனக்கான அந்தரங்க பிரச்சினைகளை யாரிடம் பேசி தீர்வு காண்பது என்கிற மன குழப்பத்தில் பல ஆண்கள் உள்ளனர். அதிலும் தனது பிறப்புறுப்பு வளைந்த தன்மையுடன் இருப்பது சரியா தவறா என்பதை கூட கேட்க தயங்குகின்றனர்.
பொதுவாக இது போன்று வளைந்து இருந்தால் உடலுறவு கொள்ளும் போது அதிக வலி ஆண்களுக்கு உண்டாகும். ஆதலால், இது போன்றே கேள்விகளை கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.

விந்து வெளியேற்றம்
உறவில் இணைவதற்கு முன்னரே விந்து வெளியேறினால் அதை ஆண்கள் மிக மோசமானதாக கருதுகின்றனர். இது தனது பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள கோளாறோ என்கிற சந்தேகத்துடனே பல ஆண்கள் வாழ்கின்றனர்.
இது போன்ற நிலை ஏற்பட்டால் உங்கள் இணை கருத்தரிப்பது கடினமே. எனவே, இந்த சந்தேகத்தை அவசியம் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள்.

ஆண்மை இருக்கா..? இல்லையா..?
இன்று பல ஆண்கள் தயங்க கூடிய விஷயம் இது தான். தான் ஆண்மையுடன் தான் இருக்கிறேனா..? என்னால் உறவில் ஈடுபட முடியுமா..? என்கிற கேள்வியை மருத்துவரிடம் பலர் கேட்க தயங்குகின்றார்கள்.
இது பிரச்சினையாக இல்லாமல் இருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் சந்தேகப்பட்டது உண்மையானால்.?! ஆகவே எதுவாக இருந்தாலும் தயக்கம் இல்லாமல் கேட்டு விடுங்கள்.

விரைகளில் பிரச்சினையா..?
சில ஆண்களுக்கு தனது விரைகளில் முன்பை விட சில மாற்றங்கள் தென்பட தொடங்கும். ஆரம்ப நிலையில் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
அதன் பின் பெரிய அறிகுறிகள் ஏற்பட்டதும் இதை பற்றி யாரிடம் கேட்பது என தயங்கி நிற்பார்கள். இதற்கான சிறந்த நபர் உங்கள் மருத்துவரே.

அளவு சிறியதா..?
உடலுறவின் போது தந்து பிறப்புறுப்பு சிறியதாகவே உள்ளது; இதனால் எனது துணையை திருப்தி படுத்த முடியவில்லை என பல ஆண்கள் மன உளைச்சலில் புழுங்கி உள்ளனர்.
இது போன்ற நிலை உங்களுக்கும் இருந்தால் சற்றும் தயங்காமல் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள்.

விறைப்பு தன்மை
காலை நேரத்தில் விறைப்பு தன்மை பல ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. இது பிரச்சினையா..? இல்லை இதுதான் சரியா..? என்கிற குழப்பம் பல ஆண்களுக்கு உள்ளது.
பெரும்பாலும் இந்த நிலை ஏற்படுவதற்கு அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடு, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக இருக்கலாம். இந்த கேள்வியை தவறாமல் கேட்டு விடுங்கள். இல்லையேல் பிரச்சினை உங்களுக்கு தான்.

பெரிய மார்பகங்களா..?
மார்பகம் என்பது ஒரு மட்டுமே. அதை பெரிய அளவில் நினைத்து கொண்டு பல ஆண்கள் தனது மார்பக பிரச்சினைகளை பற்றியும் பேசுவதில்லை.
மார்பகங்கள் பெரிதாக இருந்தால் டெஸ்டோஸ்டெரோன் என்கிற ஹார்மோன் குறைவாக உடலில் சுரக்கிறது என்றே அர்த்தம். இதை தவிர நீங்கள் நினைப்பது போன்று வேறு எதுவுமில்லை.

ஆர்வம் குறைவா..?
பல ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை உண்டு. இதில் இருக்க கூடிய முக்கிய பிரச்சினையே உறவில் நாட்டம் இல்லாதது தான். இதை தனது துணையுடன் கூட தெரிவிக்க மாட்டார்கள்.
இது போன்ற நிலை உங்களுக்கு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், இது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றி விட கூடும்.

பிறப்புறுப்பில் துர்நாற்றமா..?
பல ஆண்கள் இந்த கேள்வியை கேட்க அதிகம் தயங்குவார்கள். தனது பிறப்புறுப்பில் ஒரு விதமான நாற்றம் ஏற்பட்டால் அது உடல் நலத்தில் குறைபாடு உள்ளதை குறிக்கிறதாம்.
துர்நாற்றம் பிறப்புறுப்பில் அதிகமாக வீசினால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது. எனவே, தயக்கம் இல்லாமல் இதை பற்றி மருத்துவரிடம் கேளுங்கள்.

ஏன் இரத்தம் வருகிறது..?
தனது ஆணுறுப்பில் ஏற்பட கூடிய உதிர போக்கை பற்றி ஆண்கள் பல வித கேள்விகள் வைத்துள்ளனர். சில ஆண்கள், தான் ஆண்தானா..? என்கிற அளவுக்கு யோசித்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளுகின்றனர்.
இது போன்ற உதிர போக்கு இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள். ஏனெனில், இது குடல் வகை புற்றுநோயாக கூட இருக்கலாம்.



Click it and Unblock the Notifications