உடற்பயிற்சி செய்த பின் கட்டாயம் குடிக்கக்கூடாத பானங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று பலருக்கும் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் ஏராளமானோர் அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நல்ல பழக்கம் தான். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

அதில் இதய ஆரோக்கியம் மேம்படுவது, சர்க்கரை நோயின் அபாயம் குறைவது, மெட்டபாலிசம் அதிகரிப்பது, தசைகள் வளர்வது, மனநிலை மேம்படுவது, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது, உடலின் ஆற்றல், வலிமை மேம்படுவது மற்றும் நினைவாற்றல் அதிகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், பலருக்கும் அதிகமாக தாகம் எடுக்கும். பொதுவாக உடற்பயிற்சியை செய்யும் போது, அடிக்கடி சிறிது நீரைப் பருகலாம். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடற்பயிற்சியால் பாதிக்கப்பட்ட தசைகள் சரியாவதோடு, உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.

சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எனர்ஜி பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் என்று வாங்கிப் பருகுவார்கள். ஆனால் இம்மாதிரியான பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. சரி, உங்களுக்கு உடற்பயிறற்சிக்கு பின் எந்த பானங்களைப் பருகக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்போர்ட்ஸ் பானங்கள்

ஸ்போர்ட்ஸ் பானங்கள்

மார்கெட்டுகளில் ஸ்போர்ட்ஸ் பானங்கள் உடற்பயிற்சிக்கு பின் குடிக்க ஏற்ற பானமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை நம்பிக் கொண்டு பலரும் உடற்பயிற்சிக்குப் பின் இந்த பானங்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பானங்களில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாமலும் உள்ளது. வேண்டுமானால் சில பிராண்டுகளில் சில வைட்டமின்களும், எலக்ட்ரோலைட்டுகளும் இருந்தாலும், அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை ப்ளேவர்கள் இருப்பதால், இம்மாதிரியான பானங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

மது

மது

மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், இரவில் ஒரு டம்ளர் ஒயின் குடிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். பொதுவாக மது பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதை உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு பதிலாக, வறட்சியை உண்டாக்கும். மேலும மது பானங்களில் வெற்று கலோரிகள் அதிகமாகவும், எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை. இப்படி வெற்று கலோரிகள் நிறைந்த பானங்களைக் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவைத் தான் அதிகரிக்கும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்களை உடற்பயிற்சிக்கு பின் மட்டுமின்றி, எப்போதுமே குடிக்கக்கூடாது. சோடா பானங்களைக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு தான் அதிகரிக்கும். இதனால் தான் இந்த பானங்களைக் குடித்து முடித்த பின் சுறுசுறுப்பாக இருப்பது போன்று உள்ளது. அதே சமயம் எவ்வளவு வேகமாக உடலின் ஆற்றல் அதிகரிக்கிறதோ, அதே வேகத்தில் உடலின் ஆற்றல் சட்டென்று குறையும். அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஏறிய வேகத்திலேயே இறங்கிவிடும் என்றால் பாருங்கள். எனவே இம்மாதிரியான பானங்களைக் குடிக்காதீர்கள்.

டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்

டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்

டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் ஆரோக்கியமானது போன்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி டப்பாவில் விற்கப்படும் பழச்சாறுகள் நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது அல்ல. முழுமையாக செயற்கை ப்ளேவர்களைக் கொண்டது. இத்தகைய கெமில்லல் கலந்த பானங்களை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பது நல்லதல்ல. சொல்லப்போனால் இந்த பானங்களில் சுக்ரோஸ் கார்ன் சிரப் தான் அதிகம் உள்ளது. இவை உடல் பருமனை உண்டாக்கி, மெட்டபாலிச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

காபி

காபி

உடற்பயிற்சிக்கு பின் பலருக்கு ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இப்படி குடித்தால், ஏற்கனவே உடற்பயிற்சியின் போது வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம், காபி குடித்த பின் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும். இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். உடற்பயிற்சிக்குப் பின் காபி குடித்தால், அது இதய படபடப்பை உண்டாக்குவதோடு, தூக்க பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் காபி உடல் வறட்சியையும் ஏற்படுத்தும்.

உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!

உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!

உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானம் தண்ணீர் தான். இது தான் உடலை புதுப்பிக்க உதவும். அதிலும் குளிர்ச்சியான நீரைக் குடிக்கக்கூடாது. அறை வெப்பநிலையிலான நீரைத் தான் குடிக்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சியான நீர் குடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, உணவை செரிக்கத் தேவையான நொதிகளில் இடையூறை உண்டாக்கி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒருவேளை உங்களுக்கு வெறும் தண்ணீரைக் குடிக்க பிடிக்காவிட்டால், அந்நீரைக் கொண்டு ஆரோக்கியமான பானங்களைத் தயாரித்தும் குடிக்கலாம். கீழே உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இயற்கை பானம்

இயற்கை பானம்

சுவைமிக்க நீரை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாகவே நறுக்கி, ஒரு பெரிய ஜாடியில் போட்டு, நீரை நிரப்பி, பல மணிநேரம் ஊற வையுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி வேண்டிய நேரம் குடித்து மகிழுங்கள்.

சால்லேட் மில்க்

சால்லேட் மில்க்

மற்றொரு சுவையான பானம் சாக்லேட் மில்க். அதிலும் வீட்டிலேயே சாக்லேட் மில்க்கை தயாரித்து குடிப்பது நல்லது. இந்த பானத்தில் சாதாரண பாலை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானங்களுள் ஒன்றாகும்.

இளநீர் அல்லது தேங்காய் நீர்

இளநீர் அல்லது தேங்காய் நீர்

இளநீரில் எலக்ட்ரோலைட்டுகளான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவு உள்ளது. இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கவும், உடற்பயிற்சிக்குப் பின் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் செய்யும்.

செர்ரிப் பழ ஜூஸ்

செர்ரிப் பழ ஜூஸ்

செர்ரிப் பழ ஜூஸ் உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற அற்புதமான பானங்களுள் ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் ஏற்பட்ட காயங்களைக் குறைத்து, தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புத்துயிர் பெறச் செய்யும்.

க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ

க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ

நீங்கள் டீ பிரியரா? அப்படியானால் க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ குடியுங்கள். இவற்றில் உள்ள உட்பொருட்கள், கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு உடற்பயிற்சிக்குப் பின் டீ குடிக்கத் தோன்றினால், க்ரீன் அல்லது ப்ளாக் டீயைக் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Never Drink After a Workout

Hydrating your body is important. Drinking a glass or two of water right after your workout is healthy. But many times, instead of water, we reach for other beverages that are not healthy at all. Here are some of the things you should never drink after a workout.
Story first published: Saturday, February 17, 2018, 9:30 [IST]