For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்களது அதீத பதட்டத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்!

  |

  அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்திற்கு மத்தியில் திடீரென்று அந்த ஓட்டத்தை சீர்குலைக்கும் விதமாக ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் சற்றே தடுமாற்றமடைவர். பலரும் இது பிரச்சனை என்று எதிர்கொள்வதை விட்டுவிட்டு அது தான் தன்னுடைய இயல்பு என்றே ஏற்றுக் கொள்கின்றனர் .

  இதனால் அதற்குரிய அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடிவதில்லை. இங்கே அப்படிப்பட்ட ஓர் பிரச்சனையைப் பற்றியும் அது ஏற்பட காரணம் மற்றும் அதை தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள இருக்குறீர்கள்.

  என்றைக்காவது திடீரென்று உட்சபட்சமாக பதட்டம்டைந்ததை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த நிகழ்வை ஏதேனும் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சொல்லாமல் தனியாக நினைவு கூறுங்கள். ஒரு மாதத்தில் எத்தனை முறை, எந்தெந்த காரணத்திற்காக அப்படி பதட்டமடைந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள் எல்லாமே மிக அற்பமான காரணமென்றால் உங்களுக்கு GAD என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சின்ன சின்ன விஷயங்கள் :

  சின்ன சின்ன விஷயங்கள் :

  இதனை ஜென்ரலைஸுடு அனெக்ஸிட் டிஸ்ஸார்டர் என்பார்கள்.இது அன்றாட நிகழ்வுகளான மிகச் சாதரண விஷயங்களுக்கு கூட பதட்டம் கொள்ளச் செய்யும். எளிதில் தீர்க்கக்கூடிய அல்லது சற்றே தாமதமாக நடக்கிற விஷயங்களுக்கு எல்லாம் அதீதமாக பதட்டமடைவீர்கள்.

  இதனை சிலர் போபியா என்று சொல்வார்கள். இது போபியா அல்ல.ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த அதீத பதட்டமடையும் பிரச்சனை இருக்கிறது.

  எல்லாருக்கும் :

  எல்லாருக்கும் :

  இந்த பாதிப்பு இருப்பவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் மற்றும் நோயின் பாதிப்பு இருக்காது. ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும், அவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நோயின் தன்மை வேறுபடும்.ஆரம்ப கால அறிகுறிகள் கூட அப்படித்தான்.

  இப்போது இதன் வெளிப்பாடு மற்றும் அறிகுறிகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பார்க்கலாம்.

  வெளிப்பாடு :

  வெளிப்பாடு :

  உங்களுக்கு அதீத பதட்டமடையும் பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால் அதனை உங்களது செய்கைகளாலேயே எளிதாக கண்டுபிடித்து விடலாம்.உங்களுக்கு அடிக்கடி உடலில் வலி, தசை இறுக்கம் ஆகியவை உண்டாகும். பலரும் இது அதீதமாக வேலை செய்வதினால் ஏற்படுகிறது ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

  அதே போல இவர்களுக்கு அமைதியாக உட்காருவதற்கும், தூங்குவதிலும் பிரச்சனை ஏற்படும். அவ்வளவு எளிதாக தூங்கிட மாட்டார்கள். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். இதைத்தவிர வயிறு தொடர்பான கோளாறுகள் அடிக்கடி வரும்.

  செய்கைகள் :

  செய்கைகள் :

  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் செய்கைகளிலும் மாற்றங்கள் தெரிந்திடும். இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தில் கூர்ந்து கவனிக்கிற ஆற்றல் அந்த நிதானம் இவர்களிடம் இருக்காது. மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்படுவர்.

  கவலை :

  கவலை :

  எப்போதும் மனதில் எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். கவலை என்றால் சாதரணமானது அல்ல ஏதோ நகர்கிற ஒவ்வொரு நொடிக்கும் தன்னுடைய உயிரே கரைவது போல அதனை மீட்டெடுக்க வழியே இல்லை என்பது போல மிக அதீதமாக கவலை கொள்வர். அந்த கவலை அவர்களது அன்றாட வாழ்க்கையில் அப்படியே பிரதிபளிக்கும்.

  குழந்தைகள் :

  குழந்தைகள் :

  இந்த பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு கூட ஏற்படக்கூடும். பள்ளியில் நடக்கும் சம்பவங்கள், வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வது. பெற்றோர் அதீத கண்டிப்புடன் நடந்து கொள்வது, வீட்டில் அல்லது பள்ளியில் தொடர்ந்து பயமுறுத்தப்படுவது ஆகியவை இதற்கு காரணம்.

  குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் அதனை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

  வீட்டுப்பாடம் :

  வீட்டுப்பாடம் :

  இந்த பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் தங்களுடைய வேலைகளை செய்து கொள்வதிலேயே சிரமங்களை சந்திப்பர் உதராணத்திற்கு குளிப்பது, சாப்பிடுவதில் கூட தடுமாற்றங்களை சந்திப்பர். இதைத்தவிர தங்களுக்கான வீட்டுப்பாடங்களை முடிப்பதில் பிரச்சனை ஏற்படும். தங்களைத் தாங்களே அதிகமாக குற்றம் சுமத்திக் கொள்வர்.

  மரபணு :

  மரபணு :

  மேற்ச்சொன்ன காரணங்களைத் தவிர்த்து இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு சில காரணங்கள் என்னென்று பார்க்கலாம். இதற்கு முதன்மையானதாக சொல்லப்படுவது மரபணு தான். இந்த பாதிப்பிற்கு மரபணு தான் காரணமாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் அந்த பாதிப்பு இருந்தால் அந்த வீட்டு குழந்தைக்கும் இதே பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு.

  சூழல் :

  சூழல் :

  நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு சுற்றுச்சூழல் முக்கியமான பங்கு வகிக்கிறது. இளவயதிலேயே அதாவது பக்குவப்படுவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய கடினமான நிகழ்வுகளை சந்திப்பது உதாரணத்திற்கு கோரமான கொலை,சாலை விபத்து,மரணம் போன்றவை இவைத் தவிர தங்களைச் சுற்றியிருக்கும் நபர்கள்.

  மூளை நரம்புகள் :

  மூளை நரம்புகள் :

  மூளையில் ஏற்படுகிற ரசாயன மாற்றங்கள் கூட இதற்கு காரணமாக கூறப்படுகிறது.மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். இதைத்தவிர அதிகமாக காபி குடுப்பவர்கள், செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகியோருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

  தீர்வு :

  தீர்வு :

  இதற்கான ஒரே தீர்வு அதைவிட முதன்மையானது உடற்பயிற்சி தான். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலுக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சி என்பது ஏதோ உடல் எடையை குறைப்பதற்கான ஓர் வழி என்று பார்க்கப்படுகிறது அதை மாற்றி உங்களுடைய ஆரோக்கியமான வாழ்விற்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமானது. குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

   டெக்னிக்ஸ் :

  டெக்னிக்ஸ் :

  பதட்டமடையும் போது தீவிரமாக பயம் கொள்ளும் போது உங்கள் கவனத்தை திசை திருப்ப கற்றுக் கொள்ளுங்கள்,மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவை தினமும் செய்திடுங்கள். தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கும் மேலும் ஒரே விஷயத்தை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருப்பதாக தோன்றினால் சட்டென்று இருக்கும் இடத்தை விட்டு வெளியே வாருங்கள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

  உங்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பது அவசியம். தெரிந்து கொண்டு நான் இப்படித்தான் என்று ஒரேயிடத்தில் நிற்காமல் அதிலிருந்து வெளிவருவது எப்படி என்று யோசியுங்கள்.

  வாழ்க்கை முறை :

  வாழ்க்கை முறை :

  எதுவாக இருந்தாலும் சட்டென்று வெளிப்படுவதில்லை பல நாட்களாக ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே இந்த பிரச்சனை வெளிப்படுகிறது. இதனால் ஒரே நாளில் இந்த பிரச்சனை தீர்ந்திட வேண்டும் என்று நினைப்பதும் முட்டாள்தனமானது.

  உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். அதிகமாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.கொழுப்பு, சர்க்கை நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள். சீரான தூக்கம் அவசியம். இவற்றையும் மீறி உங்களுக்கு இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் மருந்துகள் கொடுக்கப்படும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Symptoms And Treatments for Generalized Anxiety Disorder

  Symptoms And Treatments for Generalized Anxiety Disorder
  Story first published: Saturday, May 5, 2018, 16:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more