For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை மட்டும் தாக்கும் ரெட் சின்ட்ரோம் நோய்க்கான முக்கிய அறிகுறிகள்

ரெட் சின்ட்ரோம் என்பது பெண்களுக்கு மரபணு குறைபாட்டால் ஏற்படும் மூளையை தாக்கும் ஒரு நோயாகும். இதனால் பேச்சு குறைபாடு, உடல் இயக்கங்களில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

|

ஆண், பெண் இருவரின் உருவமும் ஒரே போல இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. செய்லபாடுகளை போலவே அவர்களை தாக்கும் நோய்களில் கூட பெரும்பாலானவை வித்தியாசமானவைதான். அந்த வகையில் பெரும்பாலும் பெண்களை மட்டும் தாக்கும் ஒரு மரபணு நோய் உள்ளது அதுதான் ரெட் சின்ட்ரோம். இதனை குழந்தையாக இருக்கும்போதே கண்டறிய வேண்டியது கட்டயாம்.

Symptoms of Rett syndrome

ரெட் சின்ட்ரோம் என்பது பெண்களுக்கு மரபணு குறைபாட்டால் ஏற்படும் மூளையை தாக்கும் ஒரு நோயாகும். இதனால் பேச்சு குறைபாடு, உடல் இயக்கங்களில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் மோசமான செய்தி என்னவென்றால் இந்த நோயை குணப்படுத்த எந்த மருந்துகளும் இல்லை. எனவே இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அதன் பாதிப்பை குறைக்க உதவும். ரெட் சின்ட்ரோமின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

குழந்தை பிறந்த பிறகு அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும். வழக்கமான அளவை விட குழந்தைகளின் தலையின் அளவு சிறியதாக இருக்கும். இதுதான் ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டதற்கான முதல் அறிகுறி ஆகும். குழந்தைகள் வளர வளர மற்ற பாகங்களின் வளர்ச்சியும் குறைவாக இருப்பது அடுத்தகட்ட அறிகுறி.

இயக்கங்களில் கோளாறுகள்

இயக்கங்களில் கோளாறுகள்

அடுத்தகட்ட அறிகுறியானது கைகளின் இயக்கங்கள் குறைதல் மற்றும் சரியாக நடக்க முடியாமல் போகுதல் போன்றவை ஆகும். முதலில் இந்த அறிகுறிகள் எப்போதாவதுதான் தோன்றும் நாளடைவில் அடிக்கடி தோன்ற ஆரம்பிக்கும். இறுதியில் தசைகள் பலவீனமாகி அசாதாரண இயக்கங்கள் ஆரம்பிக்கும் மேலும் நிலைப்பாடுகள் சீர்குலையும்.

தொடர்பு கொள்ளும் திறன் இழப்பு

தொடர்பு கொள்ளும் திறன் இழப்பு

ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆர்மபத்திலிருந்தே பேச சிரமப்படுவார்கள் அதுமட்டுமின்றி அவர்களின் கை, கண் வழி தொடர்புகள் கூட சீராக இருக்காது. அவர்கள் மற்றவர்களுடன் விளையாடவோ, பொம்மைகளுடன் விளையாடவோ ஆர்வம் காட்டமாட்டார்கள். சில குழந்தைகள் திடீரென பேசும் தன்மையை இழப்பார்கள், சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து தொடர்பு கொள்ளும் முறைகளையும் இழப்பார்கள்.

அசாதாரண கை இயக்கங்கள்

அசாதாரண கை இயக்கங்கள்

ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவசியமில்லாத, தேவையற்ற கை இயக்கங்களில் ஈடுபடுவார்கள். இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். திடீரென கை தட்டுதல், கைகளை தேய்த்தல், அருகிலிருப்பவர்களை அடித்தல் போன்றவை அந்த அறிகுறிகளாகும்.

MOST READ: கணவர்களிடம் மறைத்த பரம ரகசியங்கள் - மனைவியர் கூறும் அதிர்ச்சி வாக்கு மூலம்!

அசாதரண கண் இயக்கங்கள்

அசாதரண கண் இயக்கங்கள்

ரெட் சின்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கு அசாதரண கண் இயக்கங்கள் இருக்கும். அதாவது அடிக்கடி கண் சிமிட்டுதல், கண் அடித்தல், மாறு கண், ஒரு கண்ணை மட்டும் அடிக்கடி மூடுதல் போன்ற செயல்பாடுகள் இருக்கும்

சுவாச பிரச்சினை

சுவாச பிரச்சினை

மூச்சை அடக்குதல், வேகமாக மொச்சு விடுதல், அழுத்தத்துடன் காற்றை வெளியேற்றுதல் இது போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் குழந்தைகள் எழுந்திருக்கும் நேரத்தில் தோன்றும். மேலும் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் தூங்கும்போது ஏற்படும்.

எரிச்சல் மற்றும் அழுகை

எரிச்சல் மற்றும் அழுகை

ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எரிச்சல் உணர்வு அதிகம் இருக்கும் இது அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும். காரணமே இன்றி திடீரென அழவும், கத்தவும் தொடங்குவார்கள். இந்த அழுகை அதிக நேரம் நீடிக்கும். சில குழந்தைகள் அதிக பதட்டமும், பயமும் கொள்வார்கள்.

MOST READ: காலையில் இதையெல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பை போடும்..!

இதய துடிப்பு

இதய துடிப்பு

இது மிகவும் ஆபத்தான பிரச்சினை ஆகும். இது குழந்தைகள் மட்டுமின்றி, வயதான பெண்களுக்கும் ஏற்படக்கூடும்.ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திடீரென இதய துடிப்பு நின்றுவிட கூடிய அபாயம் உள்ளது. இதனால் மரணம் கூட ஏற்படலாம்.

முதுகெலும்பு வளைவு

முதுகெலும்பு வளைவு

ஸ்கோலியோசிஸ் என்னும் முதுகெலும்பு வளைவு ரெட் சின்ட்ரோமுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 8 முதல் 11 வயது வரை பெண் குழந்தைளை தாக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் பாதிப்பும் அதிகரிக்கும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை செய்வது நல்லது.

தூக்க கோளாறுகள்

தூக்க கோளாறுகள்

திடீரென தூக்கத்தில் விழுதல், இரவு நேரம் விழித்திருத்தல், பகல் நேரம் முழுவதும் தூங்குதல் போன்றவை குழந்தைக்கு ரெட் சின்ட்ரோம் இருப்பதற்கான அறிகுறி ஆகும். சில குழந்தைகள் காரணமே இல்லாமல் தூக்கத்தில் எழுந்து அழவும், கத்தவும் தொடங்குவார்கள்.

MOST READ: பிரம்மாவின் ஐந்தாவது தலையை சிவபெருமான் ஏன் வெட்டினார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms of Rett syndrome

Rett syndrome is a rare genetic neurological and developmental disorder that affects the way the brain develops, causing a progressive loss of motor skills and speech. This disorder primarily affects girls.
Desktop Bottom Promotion