For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சாதாரண அறிகுறிகள் உயிர்க்கொல்லி நோயான லிம்ஸ் நோயின் அறிகுறியாக கூட இருக்காலம்

சில ஒட்டுண்ணிகள் உங்களை கடித்து அதற்கு நீங்கள் சரியான நேரத்தில், சரியான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

|

இயற்கை படைத்துள்ள பொருட்களில் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும் என்று கூற இயலாது. ஏனெனில் மிகப்பெரிய விலங்குகளில் இருந்து மிகச்சிறிய ஒட்டுண்ணி வரையில் அனைத்திலுமே மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியதும், தீமை செய்யக்கூடியதும் சேர்ந்தே உள்ளது. அந்த வகையில் உண்ணிகளால் ஏற்படும் லிம்ஸ் நோயை பற்றித்தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.

symptoms of lyme disease

சில ஒட்டுண்ணிகள் உங்களை கடித்து அதற்கு நீங்கள் சரியான நேரத்தில், சரியான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தி இறுதியில் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். இந்த நிலையை தவிர்க்க ஆரம்பத்திலேயே அதனை கண்டறிய வேண்டியது அவசியமாகும். உங்களுக்கு லிம்ஸ் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடிப்புகள்

தடிப்புகள்

உங்கள் உடலில் எந்த இடத்திலாவது சிவப்பு நிற தடிப்புகள் அல்லது கடிகள் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது உங்களை ஒட்டுண்ணிகள் கடித்துள்ளதற்கான அறிகுறியாகும். இந்த கடிகள் உங்கள் சருமத்தில் தடிப்புகளை உண்டாக்கும், இதில் முக்கியமானது லிம்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 சதவீதத்தினர் இந்த அறிகுறியை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக இது பொதுவாக அரிப்பை ஏற்படுத்தாது அதனால்தான் நம்மால் இந்த பாதிப்பை உணரமுடிவதில்லை.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள்

காய்ச்சல் போன்ற அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை கூட லிம்ஸ் நோயின் ஆரம்பநிலை அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் அது பருவமாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள் என்று நினைக்கலாம். ஆனால் உண்ணிகள் கடித்தபிறகு இந்த அறிகுறி ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுகவேண்டும்.

சோர்வு

சோர்வு

தற்போதுள்ள காலகட்டத்தில் சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் எண்ணற்றவையாக உள்ளது. ஆனால் இது லிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. லிம்ஸ் நோய் தாக்கிய பிறகு சில வாரங்களுக்கு உங்களின் உடல் எப்பொழுதும் சோர்வாகத்தான் இருக்கும். இதனை சரியான நேரத்தில் குணப்படுத்தாமல் விட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தலைவலி மற்றும் கழுத்து பிடிப்பு

தலைவலி மற்றும் கழுத்து பிடிப்பு

Centre Of Disease Control(CDC) அமைப்பின் கருத்துப்படி கழுத்து பிடிப்புடன் கூடிய கடுமையான தலைவலி லிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒட்டுண்ணியால் கடிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் இந்த அறிகுறி ஏற்படும்.

MOST READ: உள்ளாடை முதல் செருப்பு வரை காலாவதி தேதி என்ன..? அதற்கு மீறி பயன்படுத்தினால் என்ன நடக்கும்..?

மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி

மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் லிம்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் தங்கள் மூட்டுகள் மற்றும் எலும்புகளில் கடுமையான வீக்கம் மற்றும் வலிக்கு ஆளாகின்றனர். அடிக்கடி கைகள் செயலிழந்து போவது கூட லிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இரவில் வியர்த்தல் மற்றும் தூக்க பிரச்சினைகள்

இரவில் வியர்த்தல் மற்றும் தூக்க பிரச்சினைகள்

இரவில் நன்கு வியர்த்து தூக்கத்தில் இருந்து நீங்கள் விழித்தால் உங்களுக்கு லிம்ஸ் நோய் உள்ளதற்கான அறிகுறி வலுவாக உள்ளது என்று அர்த்தம். லிம்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 45 சதவீதத்தினருக்கு தூக்க பிரச்சினைகள் இருக்கிறது, அதேபோல 60 சதவீத்தினருக்கு 9இரவில் வியர்க்கும் பிரச்சினை உள்ளது.

நரம்பியல் அறிகுறிகள்

நரம்பியல் அறிகுறிகள்

லிம்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களுக்கு காய், கால்கள் பலவீனமாக இருக்கும், மூளையில் வீக்கம் மற்றும், வாதம் போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இது ஒட்டுமொத்த நரமபியல் அமைப்பிலும் வலியை ஏற்படுத்தக்கூடும்.

ஒழுங்கற்ற இதய துடிப்பு

ஒழுங்கற்ற இதய துடிப்பு

CDC யின் அறிக்கைபடி லிம்ஸ் தொற்று உங்கள் இதய தசைக்குள் நுழைந்து விட்டால் அது இதயத்தின் செயல்பாடுகளை பாதிக்கும், இதற்கு லிம்ஸ் கார்டிட்டிஸ் என்று பெயர். இந்த பாக்டீரியா இதயத்தின் சிக்னல்களில் தலையிடுவதோடு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மயக்கம், மார்பு வலி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

MOST READ: டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

symptoms of lyme disease

yme disease is a potentially life-threatening condition that is transmitted to humans by blacklegged ticks. Check out the symptoms of lymes disease.
Desktop Bottom Promotion