Latest Updates
-
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
இப்படி தொண்டை வலி வருவது பால்வினை நோய் அறிகுறியாகவும் இருக்கலாம்... ஜாக்கிரதை...
STD என்று அறியப்படும் பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள் பிறப்புறுப்பில் மட்டும் காணப்படுவது அல்ல.tags - health, STD, ஆரோக்கியம், பால்வினை நோய்கள்
STD என்று அறியப்படும் பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள் பிறப்புறுப்பில் மட்டும் காணப்படுவது அல்ல.

அவை முழு உடலிலும் காணப்படலாம். பாலியல் நோய்களுக்கான வழக்கமான அறிகுறிகளான பிறப்புறுப்பில் கறைபடுதல் , புண்கள், எரிச்சல், வலி போன்றவை மட்டுமல்ல, மேலும் சில அறிகுறிகள் தென்பட்டால் அவற்றையும் புறக்கணிக்காமல் உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம். அந்த அறிகுறிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

கிளமிடியா
இதன் அறிகுறிகள்,
சிறுநீர் கழிக்கும்போது வலி
அடி வயிற்று வலி
தொண்டையில் புண்கள்
வீங்கிய டான்சில் அல்லது நிணநீர் முனைகள்
வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

மேகவெட்டை நோய்
இதன் அறிகுறிகள்,
வீங்கிய மூட்டுகள், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்ற கீல்வாதம் அறிகுறிகள்
குடல் இயக்கங்களில் வலி
ஆசன வாய் அரிப்பு
தொண்டை புண்
தொண்டை வீக்கம்
வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

எச் ஐ வி
இதன் அறிகுறிகள்,
காய்ச்சல்
தலைவலி
தொண்டைப் புண்
வீங்கிய நிணநீர் சுரப்பிகள்
தடிப்பு
சோர்வு
வயிற்றுப்போக்கு
எடைக் குறைப்பு
இரவில் வியர்வை
அசாதாரணமான தொற்று
அடிக்கடி தலைவலி

பிறப்புறுப்பு அக்கி
இதன் அறிகுறிகள்,
தொடை அல்லது பிட்டப் பகுதிகளில் அரிப்பு
தலைவலி
தசைவலி மற்றும் காய்ச்சல்

ஹெபடிடிஸ்
இதன் அறிகுறிகள்,
சோர்வு
குமட்டல் மற்றும் வாந்தி
அடி வயிற்று வலி
பசியின்மை
காய்ச்சல்
அடர்ந்த சிறுநீர்
தசை மற்றும் மூட்டு வலி
கண்களின் வெள்ளை பகுதி மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக தோன்றுதல் (மஞ்சள் காமாலை )

சிபிலிஸ் அல்லது மேகப்புண்
இதன் அறிகுறிகள்,
உள்ளங்கை மற்றும் பாதங்களில் அல்லது உடலின் மற்ற இடங்களில் தடிப்புகள் அல்லது திட்டுக்கள் தோன்றுவது
காய்ச்சல்
நிணநீர் முனைகள் வீக்கம்
சோர்வு
வலி



Click it and Unblock the Notifications
