Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சால்ட் ரூம் தெரப்பியின் பயன்பாடுகள்
சுவாச பிரச்சனை என்பது மிகவும் கொடிய ஒன்று.அதனை சரிசெய்ய சிறந்த வழி சால்ட் ரூம் தெரப்பி.
தினமும் நாம் பல்வேறு வகையான பிரச்சனைகளை கடந்து வருகிறோம்.அதில் மிகவும் கடினமான ஒன்று சுவாச பிரச்சனை. இதனை குணப்படுத்த ஒரு அற்புதமான வழி "சால்ட் ரூம் தெரப்பி".
இந்த நவீன உலகின் புதிய மருத்துவ கண்டுபிடிப்பே இந்த தெரப்பி.

" சால்ட் ரூம் தெரப்பி" பற்றி தெரியுமா..?
சால்ட் ரூம் தெரப்பி- இதனை ஹாலோ தெரப்பி என்றும் கூறுவார்கள். கிரேக்க மொழியில் ஹாலோ' என்றால் உப்பு' என்று அர்த்தம். இது முழுக்க முழுக்க இயற்கை முறையால் செய்யப்படும் ஒருவகை வைத்தியம். இதில் எந்தவித பக்கவிளைவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"சால்ட் ரூம் தெரப்பி" என்றால் என்ன..?
கனிமங்களிலிருந்து முற்றிலும் பிரித்தெடுக்கப்பட்ட உப்புக்கள் மற்றும் குறிப்பிட்ட சில தாது உப்புக்களிலிருந்து பெறப்பட்ட உப்பை ஒரு அறை முழுவதுமாக நிரப்பிக்கொள்வர். இதன் காரணமாக, காற்று மண்டலத்தில் வலுவான எதிர்மறை அயனியாக்கம் ஏற்பட்டு நிறைவான சுவாச சூழலை ஏற்படுத்தி தருவதே "சால்ட் ரூம் தெரப்பி ".
சால்ட் ரூம் தெரப்பியின் வேலைப்பாடு :-
ஹாலோ ஜெனெரேட்டர் என்ற இயந்திரத்தில்
99.9% சுத்தமான சோடியம் குளோரைடு உப்பை அதனுள் சேர்த்துவிடவும். அதனுடன் சில அளவு தாது உப்புக்களை சேர்த்து அந்த அறை முழுவதுவும் நிரப்பிவிடவும். அதோடு ஒரு குறிப்பிட்ட மைக்ரோ காலநிலையில் ஏரோசோல்கள் வடிவில் உள்ள சிகிச்சை அறையில் 2 முதல் 4 மைக்ரான் அளவுடைய பார்மா தர துகள்கள் சேர்த்துக்கொள்வர். இதன்மூலம் உப்பானது எதிர்மறை அயானியாக்கம் செய்யப்படும். பின்பு இந்த உப்பு நிறைந்த அறையில் இருந்தால் நமது உடலில் ஏற்பட்டுள்ள நோயுற்ற செல்கள் குணப்படுத்தப்படும்.
சால்ட் ரூம் தெரப்பியின் பயன்கள்:-
1.பொதுவாக இந்த சால்ட் ரூம் தெரப்பி ஆஸ்துமா பிரச்சனை உள்ளோர்க்கு மிகுந்த பலனை தரும்.
2.எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த முறை நன்கு பயன்படும்.
3.சால்ட் ரூம் தெரப்பியானது, நம் சுவாச மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சளி மற்றும் பிற பிரச்சனைகளை குணப்படுத்தும். மேலும், அங்குள்ள பாக்டீரியாக்களை கொல்லும்.
4.புகை பழக்கத்தால் சுவாச பிரச்சனை உள்ளோர்க்கு இஃது ஒரு புதிய தீர்வாக இருக்கும்.
5.குறட்டை தொல்லையால் பாதிக்கப்பட்டோர்க்கும் இந்த சால்ட் ரூம் தெரப்பி ஒரு வரப்பிரசாதமே.
6.சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் சால்ட் ரூம் தெரபியை மேற்கொண்டால் விரைவில் குணமடையும்.
7.தோல் நோயால் அவதிப்படுவோருக்கு இந்த சால்ட் ரூம் தெரப்பியை செய்யலாம்.
8.குறிப்பாக இந்த சால்ட் ரூம் தெரப்பி விளையாட்டு வீரர்களின் நுரையீரலின் செயல்பாட்டை சீர்படுத்தி, அதிக ஸ்டாமினாவை தருகிறது.
சால்ட் ரூம் தெரப்பியை கீழ்கண்டவற்றால் பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ளக்கூடாது:-
காய்ச்சல் உள்ளோர் இந்த முறையை செய்யக்கூடாது.
புற்றுநோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும்.
அதீத இரத்த அழுத்தம் உள்ளோர் இந்த தெரப்பியை மேற்கொள்ளக்கூடாது.
சிறுநீரக பிரச்சனை,காச நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனை கொண்டவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
மேலும், இந்த முறை அனைத்து வகையான வயதினருக்கும் பொருந்தும்.
எனவே, சுகமான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை தேடுவோர்க்கு இந்த சால்ட் ரூம் தெரப்பி ஒரு அரிய மருத்துவ பொக்கிஷமே.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications





