For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கனை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்?... அப்போ இத நீங்கதான் படிக்கணும்...

பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப் பிதுங்க அடைத்து வைப்பது வழக்கம்.

|

பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப் பிதுங்க அடைத்து வைப்பது வழக்கம். அப்படி ஃபிரிட்ஜில் அடைத்து வைத்துவிட்டால் அந்த பொருள் கெட்டுப் போகாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுதானா?...

 Never store chicken on the top shelf of the fridge

அதிலும் இப்போதெல்லாம் தினமும் கடைக்குப் போய் சிக்கன் வாங்கிவர முடியாது என்று சோம்பேறித்தனப்பட்டு, சிக்கனை வாங்கி வந்து அப்படியேவோ அல்லது மசாலாக்கள் தடவியோ ஃபிரிட்ஜில் வைத்துவிடுகிறோம். ஆனால் அது பேராபத்தை விளைவிக்கும் என்பது நமக்குத் தெரிவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிரிட்ஜில் சிக்கன்

ஃபிரிட்ஜில் சிக்கன்

அதிலும் குறிப்பாக, சிக்கன் மற்ற பொருள்களோடு கலந்து விடக்கூடாது என்பதற்காக சிக்கனை தூக்கி ஃபிரிட்ஜின் முதல் டிரேயில் மேலே தூக்கி வைத்துவிடுவோம். ஆனால் அது மிக மிக டேஞ்சரஸ் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஏன் வைக்கக்கூடாது. அதனால் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் உண்டாகும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். அதற்கான காரணங்களை கீழே காணலாம்.

கழுவாமல் சமைத்தல்

கழுவாமல் சமைத்தல்

பொதுவாக நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டுதான் ஃபிரிட்ஜில் வைப்போம். ஆனாலும் மேல் டிரேயில் வைத்திருந்தால், கட்டாயம் சிக்கனை கழுவி பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒரு சிறு துளி பாக்டீரியா அதன்மீது விழுந்தால் கூட, சிக்கன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையும் பாக்டீரியா பரவத் தொடங்கிவிடும்.

பேப்பர் டவல்

பேப்பர் டவல்

அப்படியே ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தபின், கழுவிவிட்டு சமைத்தாலும்கூட, கழுவியவுடன் முதலில் பேப்பர் டவலால் அதில் இருக்கும் ஈரத்தைத் துடைத்துவிட்டு, சிக்கனை வெட்டி சமைக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவும் அப்படி துடைத்தவுடன் உடனடியாக சமைக்க ஆரம்பித்துவிட வேண்டும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்வது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான்

பாக்டீரியா

பாக்டீரியா

பாக்டீரியா தொற்றுகள் சிக்கனை சுற்றி இருக்கும் என்பதால் தான் ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தபின் கழுவுகிறார்கள். அப்படி கழுவுவதால் அதன்மேல் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி சிக்கனை சுற்றியுள்ள பாக்டீரியாக்கள் எதுவும் அழிவதில்லை. அப்படியே அழிந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியவே அழியாது.

ரத்த செல்கள்

ரத்த செல்கள்

இப்படி ஃபிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன. அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.

ஃபிரஷ் சிக்கன்

ஃபிரஷ் சிக்கன்

நமக்கு பிடித்த சிக்கனை எதற்கு இவ்வளவு பாடு. ஏற்கனவே வாங்கி, ஃபிரிட்ஜில் வைத்து பாக்டீரியாக்களோடு சமைத்து சாப்பிடுவதைவிட, எப்போது சாப்பிட வேண்டும் என்ற தோன்றுகிறதோ அப்போதே 10 நிமிடம் செலவு செய்து கடைக்குப் போய், ஃபிரஷ்ஷாக வாங்கி வந்து சமைத்தால் இந்த பிரச்னையே கிடைக்காது. நாமும் திருப்தியாக, சுவையான சிக்கனை சாப்பிட்டு மகிழ முடியும்.

கல்லீரல் வீக்கம்

கல்லீரல் வீக்கம்

சிக்கனை் மட்டுமல்ல ஃபிரக்கோலி, மீன் போன்ற பல உணவுப்பொருள்களை பச்சையாகவோ அல்லது சமைத்தோ ஃபிரிட்ஜில் வைத்து, பின் அதை சாப்பிடுவதால்,அதிலுள்ள பாக்டீரியாகக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.

சரும அலர்ஜி

சரும அலர்ஜி

பொதுவாக, சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சிலருக்கு சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாகும். அதனால் தான் ஏற்கனவே சரும அலர்ஜி இருப்பவர்களை கத்தரிக்காய், சிக்கன், கருவாடு ஆகியவற்றை தவிர்க்கச் சொல்வார்கள்.

MOST READ: இந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்

பாக்டீரியா தொற்று

பாக்டீரியா தொற்று

தலை முதல் பாதம் வரை பாக்டீரியா தொற்றுக்கள் ரத்தத்தின் வழியாக ஊடுருவுகிறது. இதன்மூலம் உடல் உள்ளுறுப்புகள், தொண்டை, கணையம், கல்லீரல், குடல் மற்றும் பிறப்புறுப்புகள் ஆகியவற்றில் பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.

 தொண்டை பிரச்னைகள்

தொண்டை பிரச்னைகள்

பாக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு, டான்சில், தைராய்டு போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இந்த தைராய்டு பிரச்னை உண்டாவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை தான்.

 மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த சிக்கனை சாப்பிடுவதே ஜீரணக்கோளாறுகளை உருவாக்கும். அதிலும் ஃபிரிட்ஜில் வைத்து, பாக்டீரியாக்களால் சூழப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால், உடலின் சீரான மெட்டபாலிசம் தடைபடுகிறது.

 சுவாசப் பிரச்னைகள்

சுவாசப் பிரச்னைகள்

பதப்படுத்தப்பட்ட, குறிப்பாக, ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாக்கப்பட்ட பாக்டீரியாக்கள் சூழ்ந்த சிக்கனை சாப்பிடுவதன் மூலம், தொண்டையில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும். அந்த பாக்டீரியா தொற்று நரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்னைகளை உண்டாக்குகிறது.

 கருக்குழாய் நோய்

கருக்குழாய் நோய்

பிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. ஏன் சில சமயங்களில் கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளையோ அல்லது பாக்டீரிய தொற்றுக்கள் ஏற்படுத்தும் உணவுகளையோ சாப்பிடுவதால் அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாது, கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாகும் வாய்ப்புதான் அதிகம்.

MOST READ: பலே, பலே! நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கற்பிக்கும் உறவுப் பாடங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never store chicken on the top shelf of the fridge

Chicken is one of the riskier meats to handle and prepare, and there are a couple of things many of us are doing incorrectly.
Desktop Bottom Promotion