Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?... இத படிங்க... அப்புறம் குளிங்க...
காலை நேரக் குளியல் மற்றும் மாலை நேரக் குளியல் இவற்றில் எதில் ஆரோக்கியம் என்று இங்கு விளக்கமாக விவாதித்துள்ளோம்.
சில பேருக்கு காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளித்து விட்டு செல்லும் பழக்கம் மட்டும் இருக்கும். சில பேர்கள் மாலையில் குளிப்பதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். சில பேர்களுக்கு இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களை தினசரி மேற்கொண்டு வருகிறோம்.

இப்படி காலையில் மாலையில் குளிப்பது நமக்கு என்ன நன்மைகளை தருகிறது. எந்த நேரத்தில் குளிப்பது மிகச் சிறந்தது போன்ற தகவல்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நன்றாக தூங்குவதற்கு
நிறைய பேர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். மாலையில் குளிப்பதால் இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரும்.
"தூக்க கண்ணோட்டத்தின் வகையில் பார்த்தால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது நல்லது. இது உடலுக்கு ஒரு வித புந்துணர்வை கொடுக்கிறது என்று ந்தேகம் இல்லை" என்று பில் ஃபிஷ் என்ற தூக்க விஞ்ஞான பயிற்சியாளர் டக்.காம் என்ற இணையதளத்தில் கூறுகிறார்.

ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சி படி பார்த்தால் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடல் வெப்ப நிலையை ஓரளவு சீராக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும். எனவே தூங்குவதற்கு ஒரு 30 நிமிடங்கள் முன்னாடி வெதுவெதுப்பான நீரில் சின்ன குளியல் போட்டு செல்லலாம்.
"இன்ஸோமினியா போன்ற தொந்தரவு உடையவர்கள் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி குளிக்க செல்லலாம். இது என் உடல் வெப்பநிலையை சீராக்கி நல்ல உறக்கத்தை தருகிறது என்கிறார்.

குளியல்
மறுபுறம் காலையில் எழுந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. காரணம் நீர் நமது உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களை தெரிவிக்கிறார்.
தீர்வு: உங்கள் தூக்க பிரச்சினைக்கு இரவு நேர குளியல் என்பது மிகச் சிறந்தது. காலையில் சுறுசுறுப்பாக செயல்பட நீங்கள் காலை குளியலையும் எடுத்து கொள்ளலாம்.

சரும உணர்வு
சரும நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் காலையில் குளிப்பதற்கும் மாலையில் குளிப்பதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறார்கள். இந்த குளியல்களால் சருமத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஆழ்ந்த உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த நல்ல தூக்கம் உங்கள் சருமத்திற்கு நல்லது.

வியர்வை
சிலர் நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்பு, சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். அப்படியே படுக்கைக்கு செல்வதை அசெளகரியமாக உணர்கிறார்கள். இதனால் படுக்கைக்கு முன் குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்து விட்டு வியர்வை நீங்க குளிப்பது நல்லது. இது நமக்கு நாள் முழுவதும் ஒரு செளகரியத்தை ஏற்படுத்தும்.
தீர்வு: மாலை நேர குளியல் ஆஸ்துமா மற்றும் அழற்சி உடையவர்களுக்கு மற்ற படி எப்பொழுது வேண்டும் என்றாலும் குளித்து கொள்ளலாம்.

கூந்தலின் தன்மையை பொருத்து
உங்கள் கூந்தலின் தன்மையை பொருத்து கூட நீங்கள் குளியலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எண்ணெய் பசை உடைய கூந்தல் உடையவர்களுக்கு காலை குளியல் மேற்கொள்ளலாம். இது உங்கள் கூந்தலை களையிழக்காமல் வைத்திருக்க உதவும்.

ஹேர் டிரையர்
மற்றபடி அடர்ந்த கூந்தலுக்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குளித்து கொள்ளலாம். இரவு நேர குளியலுக்கு பிறகு கூந்தலை உலர வைக்கும் கருவிகளை பயன்படுத்துவதை தவிருங்கள். வாரத்திற்கு ஒரு தடவைக்கு மேல் சாம்பு பயன்படுத்தாதீர்கள்.

பொடுகு
நீங்கள் இரவு நேர குளியலுக்கு பிறகு உங்கள் கூந்தலை நன்றாக காய வையுங்கள். இல்லையென்றால் இது மைக்ரோபஸ்களை உண்டாக்கி பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தி விடும்.
தீர்வு: எனவே உங்களுக்கு எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் காலையில் குளிப்பது நல்லது.



Click it and Unblock the Notifications