Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
பழுத்த மிளகாயை கொண்டு காய்ச்சலை விரட்டும் பழங்காலத்து அகோர முறைகள்...!
மழை காலம் வர தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் அதிக கவனத்துடன் நிச்சயம் இருக்க வேண்டும். சளி, இரும்பல், காய்ச்சல் ஆகியவை வந்தால் நம்மால் ஒரு வேலையையும் செய்ய இயலாது. காய்ச்சல் வந்தால் மருந்து மாத்திரைகள் என வரிசையாய் நாம் போட்டு கொள்வோம்.

இப்போதுதான், இது போன்ற நிலைமை. ஆனால், அந்த காலத்தில் இதற்கு மாற்றாக பல வகையான கை வைத்தியத்தை வைத்திருந்தனர். அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

கொடுமையான காலம்..!
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அவ்வளவு தான். நமது முழு பலமும் குறைந்து விடும். உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் இந்த காய்ச்சல் எளிதில் நமக்கு வர கூடும். மேலும், இது வந்தால் நம்மால் எந்த வேளையிலும் கவனம் செலுத்த இயலாது. நம்மால் எழுந்து கூட உட்கார முடியாத அளவிற்கு காய்ச்சல் வர கூடும்.

ரத்த சரித்திரம்..!
சுமார் இரண்டாயிர வருடத்திற்கு முன்னர் ஒரு மோசமான முறையை அமெரிக்கர்கள் கடைபிடித்து வந்தனர். காய்ச்சல் வந்தவர்களின் ரத்தத்தை வெளியேற்றினால் காய்ச்சல் போய் விடும் என நம்பினர். இது முற்றிலும் முட்டாள் தன்மான ஒரு முறையாகும். இது பலரின் உயிரை காவு வாங்கியதே தவிர, காய்ச்சலை சரி செய்யவில்லை.

வெங்காய மந்திரம்..!
பல வீடுகளில் பழங்காலத்தில் காய்ச்சல் வர கூடாது என்பதற்காக வெங்காயத்தை அரிந்து வீடுகளில் பல இடங்களில் வைத்து கொள்வார்கள். இது காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளை தடுக்கும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் அப்போது இருந்தது. ஆனால், இது உண்மையில் வேலை செய்யாது.

நச்சு புகை வைத்தியம்..!
1918-களில் காய்ச்சல் கொண்ட ஆங்கில நாட்டு மக்கள் அருகில் இருந்த தொழிற்சாலையில் வெளிவந்த புகையை சுவாசித்தல் காய்ச்சல் குணமாகும் என பெரிய மூட நம்பிக்கை கொண்டனர். ஆனால், பிறகு தான் அது கொடிய நச்சு புகை என்றும், இதனால் வேறு சில நோய்கள் வர கூடும் என ஆய்வுகள் சொல்லியது.

விஸ்கி
காய்ச்சல் வந்தால் அந்த காலத்தில் விஸ்கியை கூட வைத்தியத்திற்காக பயன்படுத்தினார்களாம். விஸ்கியில் இஞ்சியை கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகி விடும் என மக்கள் நம்பினர். ஆனால், இது தூக்கத்தை கெடுத்து காய்ச்சலை குறைக்காது என பின் நாளில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பழுத்த சிவப்பு மிளகாய்...
ஸ்பெயின் நட்டு மக்கள் ஒரு காரசாரமான முறையை கடைபிடித்தனர். அது என்னவென்றால், பழத்தை சிவப்பு மிளகாயை வேக வைத்து சாப்பிடும், வீடுகளில் ஒரு சில இடங்களில் போட்டு வைத்தால் காய்ச்சல் பறந்து விடும் என நம்பினார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து.

ஆரஞ்ச் தோலும், விஷ வாயுவும்..!
19களில் ஒரு பயங்கர முறையை மக்கள் கடைபிடித்து வந்தனர். ஆரஞ்ச் தோளில் சல்பர் என்கிற வாயுவை சேர்த்து முகர்ந்தால் காய்ச்சல், சளி குணமாகி விடும் என்றனர். ஆனால், இந்த சல்பர் ஒரு வகையான நச்சு தன்மை கொண்ட புகையாகும். இது உடலுக்கு பக்க விளைவை மட்டும் தான் தரும்.

ஷின்ஸோனா மரம்
ஐரோப்பியர்கள் ஷின்ஜோனா மரத்தை காய்ச்சலுக்காக பயன்படுத்தினர். உண்மையில் இந்த மரம் மலேரியாவை குறைக்கும் ஆற்றல் கொண்டது என விஞ்ஞானிகள் பின்னாளில் கண்டறிந்தனர். மேலும், இந்த மூலிகை மரம் ஒட்டுண்ணிகளையும் அழிக்க கூடியதாம்.

பெருங்காய வைத்தியம்
பெருங்காயத்தை முகர்ந்து பார்த்து கொண்டிருந்தாலே காய்ச்சல் குணமாகி விடும் என ஒரு சில மக்கள் எண்ணம் கொண்டனர். மேலும், இதை கழுத்து கீழும் இவர்கள் கட்டி கொள்வார்களாம். ஆனால், இது சளியை வேண்டுமானால் சிறிது சரி செய்யலாம், மற்றபடி காய்ச்சல் சரியாகாது.

சிக்கன் சூப்
ஒரு சில நாட்டு மக்கள் சூடாக எதையாவது சாப்பிட்டால் அது காய்ச்சலை போக்கி விடும் என நம்பினர். இது ஒரு வகையில் உண்மையும் கூட. சிக்கன் சூப்பை பழங்காலத்து மக்கள் காய்ச்சலை போக்குவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

மூட நம்பிக்கைகள்..!
இப்படிப்பட்ட பல வகையான வினோத மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவி கிடந்ததாம். இது பலரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. இது போன்ற மூட நம்பிக்கைகளை இனி நாம் நம்பாமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications