Latest Updates
-
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா -
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம் -
ஜூன் 30-ல் நிகழும் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்
உயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா?
இரத்தத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதே ப்ளட் பாய்சனிங் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். ப்ளட் பாய்சனிங் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
உணவு விஷமாவதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இரத்தம் விஷமாவதை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிலை . ஆனால் நமது இரத்தம் விஷமாகவும் வாய்ப்புள்ளது. இதனை ப்ளட் பாய்சனிங் என்று மருத்துவர்கள் கூறுகிறீர்கள். இரத்தத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதே ப்ளட் பாய்சனிங் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும்.

இதன் பெயரில் உள்ளது போல இதற்கும் விஷத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் அந்த அளவிற்கு ஆபத்தாய் இருப்பதால் மருத்துவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள். இதனை ஆரம்பத்திலியே கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது அவசியம். இது உங்கள் உடலில் செப்ஸியை அதிகரித்துக்கொண்டே செல்லும். ப்ளட் பாய்சனிங் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

காரணங்கள்
உடலின் ஏதாவதொரு பாகத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் பாக்டீரியாக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தில் பாக்டீரியாக்கள் கலந்திருப்பது பாக்டீர்மியா அல்லது செப்டிகெமியா என்று அழைக்கப்படுகிறது. இது செப்ஸிஸ் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. செப்சிஸ் என்பது குணப்படுத்த இயலாத உயிரை பறிக்ககூடிய நோயாகும். பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை எந்த தொற்றாய் இருந்தாலும் அது செப்ஸிசை ஏற்படுத்தும்.

பாதிக்கும் இடம்
இந்த வகை தொற்று நுரையீரல், அடிவயிறு மற்றும் சிறுநீர் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். செப்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் ப்ளட் பாய்சனிங் என்பது உங்கள் இரத்தத்தில் பாக்டீரியா மற்றொரு தொற்றுநோயுடன் சேர்ந்து உங்கள் உடலுக்குள் வரும்போது ஏற்படுவது. தொற்றுநோய் இல்லாமல் உங்கள் உடலில் செப்ஸிஸ் ஏற்பட வாய்ப்பில்லை.

செப்ஸிஸ் ஏற்பட காரணங்கள்
உங்கள் உடலுக்குள் செப்ஸிஸ் ஏற்பட பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் செல்லவேண்டும். அவை வேறுசில தொற்று மூலமும் உள்ளே நுழையலாம். அவை முறையே அடிவயிறு தொற்றுநோய், பூச்சிக்கடிகள், கீமோதெரபியின்போது, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையின் போது, நிமோனியா, சரும தொற்றுகள் என செப்ஸிஸ் ஏற்பட பல வழிகள் உள்ளது.

யாருக்கெல்லாம் ஏற்படும்
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாய் உள்ளவர்களுக்கு ப்ளட் பாய்சனிங் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லுக்கோமியா உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், போதை பழக்கம் உள்ளவர்கள், பல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், பாக்டீரியா மற்றும் மற்றும் வைரஸ் அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்
சில அறிகுறிகளை வைத்து உங்களுக்கு ப்ளட் பாய்சனிங் உள்ளதா என்பதை கண்டறியலாம். உடல் குளிர்ச்சியாகவே இருத்தல், அதிக காய்ச்சல், சோர்வு, வேகமாக மூச்சு விடுதல், இதய துடிப்பில் மாற்றம், சரும அழற்சி குறிப்பாக முகத்தில். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுங்கவும். நோய் முதிர்ச்சியடைந்து விட்டால் குழப்பம், சருமத்தில் பெரிய சிவப்பு புள்ளி, உடலுறுப்புகள் செயலிழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்
ப்ளட் பாய்சனிங்கிற்கு சரியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் அது வேகமாக உடலில் பரவக்கூடியது இதனால் இதய அடைப்பு ஏற்படலாம். உங்களுக்கு ப்ளட் பாய்சனிங் உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டால் உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும். குறைந்த இரத்த அழுத்தம், மயக்கம், குறைந்த இதய துடிப்பு போன்றவை இருந்தால் நீங்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரத்த அழுத்தத்தை சீராக்க ஆக்சிஜன் வழங்கப்படும். செப்ஸிஸ்க்கு நீரேற்றம் வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது, அல்லது நரம்பு வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில சமயம் இரத்த அழுத்தத்தை குறைத்தும் சிகிச்சை அளிக்கப்படும். இவை வேஸோப்ரெஸ்ஸர்ஸ் என்று அழைக்கப்படும். இது ஏற்பட்டால் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.

தடுக்கும் முறை
ப்ளட் பாய்சனிங் ஏற்படாமல் தடுக்க ஒரேவழி தொற்றுநோய்களுக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பதுதான். அதேபோல காயம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்வதுடன் அதை சுத்தமாக பராமரிக்கவும் வேண்டும். ஒரேவேளை நீங்கள் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மருத்துவர் முதலில் பரிந்துரைப்பது ஆன்டிபாக்டீரிய மருந்தைதான். பாக்டீரியா, வைரஸ் உள்ள இடங்களை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications