Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்
Badam Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? அதற்கு சைடு டிஷ் எப்போதுமே சட்னி தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான, ரிச்சான வேற லெவல் சட்னியை செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் கொஞ்சம் பாதாம் பருப்பும், குடை மிளகாயும் உள்ளதா? அப்படியெனில் இவற்றை வைத்து இட்லி, தோசைக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான சட்னியை செய்யுங்கள். இந்த பாதாம் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னி இனிப்பும், காரமும் கலந்த சுவையில் இருப்பதால் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும். முக்கியமாக வேலை செல்பவர்கள் இந்த மாதிரியான சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், சட்டென்று காலை உணவை முடித்து விடலாம்.
உங்களுக்கு க்ரீமியான மற்றும் சுவையான பாதாம் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாம் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 முழு பாதாம் பருப்பு
- 1 சிறிய குடைமிளகாய்
- 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
- 3 வர மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- சிறிய துண்டு புளி
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
தாளிக்க:
- அரை ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வர மிளகாய் மற்றும் கடலைப்பருப்பைச் சேர்க்கவும்.
- கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் சுருங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் புளியைச் சேர்த்துச் சில நொடிகள் வதக்கி இத கலவையை ஆறவிடவும்.
- ஆறிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 10 முழு பாதாம் பருப்புகளைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாகன விழுதை அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இந்த தாளித்த கலவையைச் சட்னியுடன் சேர்த்து நன்றாகக் கலக்கினால் சுவையான பாதாம் சட்னி ரெடி.
- சூடான இட்லி அல்லது தோசையுடன் இதை பரிமாறவும்.



Click it and Unblock the Notifications