Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
ராஜா ராணிகள் தங்க-வெள்ளி பாத்திரங்களில் சாப்பிட இந்த அறியப்படாத ரகசியங்கள்தான் காரணம்..!
தங்கம், வெள்ளி மற்றும் தாமிர பாத்திரங்களினால் ஏற்படும் நன்மைகள்
மனிதன் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டுமென்றால், அதற்கு 3 முக்கிய தேவைகள் கட்டாயம் இருத்தல் வேண்டும். நீர், உணவு, உறைவிடம் தான் அந்த மூன்றும். ஒரு மனிதன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும் அதற்கு அடித்தளமாக இருப்பது இந்த மூன்றும்தான். இதில் மிக குறிப்பாக கூற வேண்டுமென்றால், உணவு மற்றும் நீர் மிக அவசியமானது. அதே போன்று அவற்றின் தன்மையும் இன்றியமையாததாகும். ஒரு மனிதன் எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்தான் என்பதை விட எத்தனை நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்தான் என்பதே சிறப்பானதாக கருதப்படுகிறது.

பசி எடுக்கிறதென்று தேவையற்ற உணவுகளை சாப்பிட்டால் அது பல்வேறு விளைவை தரும். அத்துடன் உண்ணும் பாத்திரத்தையும் நாம் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரத்தில் சாப்பிட்டால் எத்தகைய மருத்துவ பயன்கள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

தங்கமோ தங்கம்..!
இன்று நாம் விலை உயர்ந்த நகைகளில் முதன்மையானதாக கருதுவது இந்த தங்கத்தைதான். பலர் பத்திரிகைகளையும் செய்திகளையும் வாசிப்பதற்கு இந்த தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போன்றுதான் இதில் உள்ள மகத்துவமும் அதிகமானது. தங்கத்தை உடலில் அணிந்தாலோ, பாத்திரத்தமாக பயன்படுத்தினாலோ அது எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்தும்.

வெள்ளியும் தாமிரமும்..!
எவ்வாறு தங்கம் உடலுக்கு நலனை தருகின்றதோ அதே போன்றுதான் இந்த வெள்ளியும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளி மற்றும் தாமிர பொருட்களையே பெரிதும் பயன்படுத்துவர். இது உடலுக்கு நல்ல விதமான ஆற்றலையும், சூழலையும் தரும். அந்த காலத்து மன்னர்கள்கூட எப்போதும் இந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி போன்ற பாத்திரத்திலே உண்பார்கள்.

விலை உயர்ந்த நீர் இதுவே..!
எந்த ஒரு பொருள் நமது உடலுக்கு அதிக நன்மையை தருகிறதோ அதுவே அதிக விலை உயர்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் நமது உயிரை விட எதுவும் பெரிதானதாக இந்த உலகில் இல்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில் தங்கம், வெள்ளி மற்றும் தாமிர பாத்திரங்களில் நீர் குடித்தால் அது உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் தடுக்கும். அதனால்தான், இதனை விலையுயர்ந்த நீராக கருதுகின்றனர்.

இதயத்தை வலுப்படுத்தும் தங்கம்..!
தங்க தட்டில் உணவு சாப்பிட்டால் அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாரடைப்பு, இதய கோளாறுகள், இதய தசை பிடிப்பு போன்றவற்றை இது தடுக்கும். இதில் உள்ள anti-inflammatory தன்மை நுரையீரல், மூளை, மற்றும் இதயத்திற்கு நன்மை தரும். மேலும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவற்றை இது குணப்படுத்தும்.

இளமைக்கும் தங்கமே..!
பலருக்கு அதிக இளமையாக இருக்க வேண்டும் என்பது மிக பெரிய ஆசையாக இருக்கும். அந்த காலத்து ராஜா ராணிகள் தங்க பாத்திரத்தை பயன்படுத்த இதுவே மிக முக்கிய காரணமாக இருந்தது. அவர்களுக்கு நீண்ட இளமை தேவைப்பட்டதால் தங்கத்தை தேர்ந்தெடுத்தனர். இதில் உள்ள anti-aging தன்மை இளமையை பாதுகாக்கும்.

கிளியோபாட்ராவும் தங்கமும்..!
பேரழகி கிளியோபாட்ராவும் தங்கத்தை கொண்ட பொருட்களையே அதிகம் பயன்படுத்துவாராம். இதுதான் அவரின் பேரழகுக்கு காரணமாம். இனி நீங்கள் அழகாகவும், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால் அதற்கு தங்க பாத்திரத்தை உபயோகியுங்கள். அவ்வாறு செய்வதால், முக சுருக்கங்கள் இன்றி அழகான மின்னும் அழகை பெறலாம்.

வயிற்று ஆரோக்கியத்திற்கு வெள்ளியே..!
இன்றைய நவ நாகரிக உலகில் நாம் உடலுக்கு வேண்டாத உணவுகளை உள்ளே அனுப்பி கொண்டிருக்கின்றோம். இதனால், அஜீரண பிரச்சினை ஏற்படுகிறது. வெள்ளி பாத்திரத்திரல் உண்டால் ஜீரண கோளாறுகள், வாயு தொல்லை, குடல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும் வெள்ளி பாத்திரத்தில் வைத்துள்ள நீரை குடித்தால் நோய்கள் இன்றி வாழலாம்.

கிருமிகளை கொள்ளும் வெள்ளி..!
வெள்ளியில் சில முக்கிய மருத்துவ தன்மை உள்ளது. anti bacterial, anti viral மற்றும் anti fungal போன்ற மூன்று நோய் எதிர்ப்பு தன்மையும் இதில் இருக்கிறதாம். எனவே இது உடலில் கிருமிகளை வர விடாமல் தடுக்கும். இதனாலே, பண்டைய காலங்களில் வெள்ளி பாத்திரத்திலேயே பாலை அருந்துவர்களாம்.

தாமிரமும் ஆயர்வேதமும்..!
எல்லா வகையான ஆயர்வேத மருத்துவத்திலும் தாமிரத்தின் பங்கு முதன்மையானது. இது தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை அழிக்க வல்லது. தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானதாக இருக்கும். ஏனெனில் இது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டது.

நீரிழிவிற்கு உதவும் தாமிரம்...!
சராசரியாக பத்தில் 5 பேருக்கு நீரிழிவு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அந்த வகையில் நீரிழிவு உள்ளவர்கள் இந்த தாமிர நீர் குடித்து வந்தால் அது அவர்களின் உடலில் ஏற்படும் தோல் நோய், குடல் புண், குடல் வீக்கம் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

எதிர்ப்பு சக்தியை பெருக்குமா..?
தாமிர பாத்திரத்தில் நீர் அருந்துபவர்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்குதாம். இது உடல் செல்களுக்கு புத்துணர்வு கொடுத்து சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது. உடல் பருமன், தூக்கமின்மை, கல்லீரல் பிரச்சினை போன்றவற்றில் இருந்து இது விடுதலை தருகிறது.
நீங்களும் இந்த ஆரோக்கிய குறிப்புகளை பயன்படுத்தி நீண்ட நாள் மகிழ்ச்சியாக இருங்கள் நண்பர்களே...



Click it and Unblock the Notifications
