இஞ்சி டீ குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அதிசயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இஞ்சி உணவின் மணத்தை அதிகரிப்பதோடு, உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது. அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடலில் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஞ்சியை பலவாறு நாம் உட்கொள்ள முடியும்.

அதில் இஞ்சி ஜூஸ், இஞ்சி டீ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இக்கட்டுரையில் ஓர் அற்புதமான மசாலா இஞ்சி டீ குறித்தும், அதைக் குடித்த 5 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உட்கொண்ட 3 மணிநேரத்தில்...

உட்கொண்ட 3 மணிநேரத்தில்...

3 கிராம் இஞ்சியை உட்கொண்டால், உடலினுள் பல அற்புதங்கள் ஏற்படும். குறிப்பாக இஞ்சியை உட்கொண்ட 3 மணிநேரத்திலேயே, இஞ்சி உடலினுள் அதன் வேலையைக் காட்டிக் கொண்டிருப்பதை உணரக்கூடும்.

எரிச்சலுணர்வு

எரிச்சலுணர்வு

இஞ்சியை உட்கொண்ட பின், வயிற்றில் ஒருவித எரிச்சலுணர்வை சந்திக்கக்கூடும். ஏனெனில் இஞ்சி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருப்பதால் தான்.

அடுத்த 2 மணிநேரத்தில்...

அடுத்த 2 மணிநேரத்தில்...

அடுத்த 2 மணிநேரத்தில், இதுவரை உடலில் இருந்த ஒருவித அழுத்தம் வெளியேற்றப்பட்டு, உடல் லேசானது போன்ற உணர்வைப் பெறக்கூடும்.

இதர நன்மைகள்...

இதர நன்மைகள்...

இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும்.

இப்போது மசாலா இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 சிறிய துண்டு

எலுமிச்சை - 1

பட்டை - 2 துண்டுகள்

புதினா இலைகள் - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Will Happen To Our Body 5 Hours After Drinking Ginger Tea

Do you know what will happen to our body 5 hours after drinking ginger tea? Read on to know more...
Story first published: Tuesday, January 31, 2017, 13:33 [IST]
Subscribe Newsletter