இந்த உண்மை அறிந்தால், இனிமேல் ஹேன்ட் ட்ரையரை கழிவறையில் பயன்படுத்தவே மாட்டீர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் பொது கழிவறைகளை பயன்படுத்த நமக்கு விருப்பம் இருக்காது. ஆனால், திரையரங்கு, ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு செல்லலும் போது வேறு வழியின்றி நாம் பொது கழிவறைகளை பயன்படுத்தி தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம்.

பொது கழிவறைகளை நாம் வெறுப்பதற்கு முக்கிய காரணம் கிருமிகள், அதன்பால் ஏற்படும் அருவருப்பு மற்றும் தொற்றுகள் மீதான அச்சப்பாடு. இன்றைய பெரும்பாலான நவீன பொது கழிவறைகளில் ஹேன்ட் ட்ரையர்கள் தான் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஒரு சில ஹேன்ட் ட்ரையர்கள் கழிவறையை காட்டிலும் அதிக கிருமிகள் தாக்கம் கொண்டிருக்கின்றன என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேன்ட் ட்ரையர்!

ஹேன்ட் ட்ரையர்!

இன்று நாம் கழிவறைகளில் டாய்லெட் பேப்பர்கள் இருந்தாலும் ஹேன்ட் ட்ரையரை தான் பயன்படுத்துவோம். பல இடங்களில் ஹேன்ட் ட்ரையர் செயல்படாத நேரத்தில் டாய்லெட் பேப்பர்கள் பயன்படுத்துங்கள் என போஸ்டர் எல்லாம் கூட ஒட்டியிருப்பார்கள்.

சுகாதாரமானது!

சுகாதாரமானது!

ஹேன்ட் ட்ரையரை பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் காரணமாக நமது கைகளில் இருக்கும் கிருமிகள் எல்லாம் அழிந்துவிடும். நாம் சுகாதாரமாக இருக்கிறோம் என்று தான் நாம் நம்புகிறோம். ஆனால், எல்லா ஹேன்ட் ட்ரையர்களும் அப்படி செய்வதில்லையாம்.

குறிப்பிட்ட ஹேன்ட் ட்ரையர்!

குறிப்பிட்ட ஹேன்ட் ட்ரையர்!

கைகளை வெளிப்புறம் வைத்து பயன்படுத்தும் வகையில்லாமல், ஹேன்ட் ட்ரையரின் உட்புறமாக வைத்து பயன்படுத்தப்படும் ஹேன்ட் ட்ரையர்களும் இருக்கின்றன. இந்த வகை ஹேன்ட் ட்ரையர் டாய்லெட் பேப்பர்கள், இதர வேறு ஹேன்ட் ட்ரையர்களை காட்டிலும் சுகாதாரமற்றது என கூறுகின்றனர்.

Image Source

300 மைல் வேகம்!

300 மைல் வேகம்!

இந்த வகை ஹேன்ட் ட்ரையர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னூறு மைல் வேகத்தில் காற்றை வெளியிடுகிறது. இதன் காரணாமாக கழிவறை முழுவதும் கிருமிகள் காற்றில் பரவுகின்றன என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னாடி நின்னாலே போதுமே...

பின்னாடி நின்னாலே போதுமே...

இதனால் நீங்கள் கழிவறையில் ஹேன்ட் ட்ரையர் பயன்படுத்தும் நபரின் பின்னாடி நின்றாலே போதும், கிருமிகள் உங்கள் உடல் முழுவதும் தொற்றும் வாய்ப்புகள் வெகுவாக இருக்கிறதாம்.

பேப்பரே போதும்!

பேப்பரே போதும்!

இதனால், பேப்பர் டவல் அல்லது உங்கள் சொந்த கர்சீப் பயன்படுத்துவது தான் சிறந்தது என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Next Time You See This Hand Drier At A Washroom, Don't Use It.

The Next Time You See This Hand Drier At A Washroom, Don't Use It.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter