உங்கள் உயிருக்கு வயதாகிவிட்டது என்பதை அறியும் 10 வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

முதிர்ச்சி என்பது சரும செல்கள் சுருக்கம் அடைந்து, நடை தளர்ந்து, நரைத்த வெள்ளிக் கம்பிகள் எட்டிப்பார்த்த பிறகு வருவது அல்ல. அவர்களது அறிவினால் வருவது.

ஒருவரது அறிவும், மனதும் முதிர்ச்சி பெறுவதை வைத்து தான், அவர்களது உயிர் எவ்வளவு முதிர்ச்சி பெற்றிருக்கிறது என கணக்கிட முடியும்.

Ten Ways to Find Out That You Are Old Soul!

சிலர் ஒரே அலுவலகத்தில் நாற்பது ஆண்டுகள் ப்ரமோஷன் வாங்காமல் ஒரே ஊதியத்தில் பணியாற்றி வருவார்கள். சிலர் பணிக்கு சேர்ந்த ஒருசில ஆண்டுகளில் மேலதிகாரி ஆகிவிடுவார்கள். இதற்கு எப்படி அறிவு முக்கியமோ, அதே போல தான் உயிரின் முதிர்ச்சிக்கும்.

அதிக புத்தகங்கள் படித்தால் அறிவு மேம்படும். அதிக மனிதர்களை படித்தால் உணர்வும், உயிரும் மேம்படும். சரி, இனி ஒருவரது உயிர் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதை அறிவதற்கான அறிகுறிகள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸ்!

செக்ஸ்!

உங்கள் உயிர் முதிர்ச்சி பெற்று வருகிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இது. ஆம்! உங்களுக்குள்ளான செக்ஸ் ஆசை குறைந்துவிடும். வெளிப்புற ஆசைகள் மூலமாக சந்தோஷம் அடையும் சதவிதம் இல்லாமல் போகும்.

திருப்தி!

திருப்தி!

பணம் சம்பாதிப்பது, சமூக மதிப்பிற்காக உழைப்பது, உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்காது. இவை பெரும் பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் செய்யும் வேலைகளில் இருந்து தான் திருப்தி அடைவார்கள். அவர்கள் மனதுக்குள் இருக்கும் ஆழமான நிம்மதியை தேடி பயணிப்பார்கள்.

இதனால் அவர்கள் சமூகம் செல்லும் பாதையில் இருந்து நேரெதிர் பாதையில் செல்கிறார்கள் என அர்த்தம் ஆகாது.

தனித்துவம்!

தனித்துவம்!

ஓர் உயிர் முதிர்ச்சி அடையும் போது, அது தன்னால் தனித்துவம் அடைந்து காணப்படும். அவர்களது பார்வை, ஒரு செயலை செய்யும் கோணம் போன்றவை வேறுவிதமாக இருக்கும். அதற்கு பெயர் தான் முதிர்ச்சி. அவர்கள் தனிமையில் இருக்கவும், இயற்கையுடன் ஒன்றி இருக்கவும் அதிகம் விரும்புவார்கள்.

கலைநயம்!

கலைநயம்!

எந்த ஒரு விஷயத்தையும் போகிறப் போக்கில் கண்டு செல்லாமல், நின்று நிதானமாக அதை ஆழமாக கண்டு ரசிப்பார்கள். அது இசை, ஓவியம், நடனம், பேச்சு, கவிதை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மையில் அவர்கள் தன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

கேள்விகள்!

கேள்விகள்!

அவர்களது நடை, உடை, பாவனைகள் வேறுபடும். அவர்களுக்குள் எழும் கேள்விகள், சந்தேகங்கள் எல்லாம் வேறு தரத்தில் இருக்கும். இவை எல்லாம் ஓர் உயிர் முதிர்ச்சி அடையும் போது தான் உணர முடியும்.

முதிர்ந்த நபர்!

முதிர்ந்த நபர்!

முதிர்ச்சி என்பது சரும செல்கள் சுருக்கம் அடைந்து, நடை தளர்ந்து, நரைத்த வெள்ளிக் கம்பிகள் எட்டிப்பார்த்த பிறகு வருவது அல்ல. அவர்களது அறிவு முதிர்ச்சி பெற்றிருக்கும்.

அவர்களுக்கு இணையான வயதுக் கொண்ட நபர்களுடன் பேச மாட்டார்கள். அவர்களுக்கும் மேலான அறிவு கொண்ட நபர்களிடம் அதிக நேரம் செலவிட எண்ணுவார்கள். சுவாரஸ்யமானவற்றை அறிந்துக் கொள்ள முயல்வார்கள்.

ஆராய்ச்சி!

ஆராய்ச்சி!

எதையும் ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள், செயல்படுத்துவார்கள். இது சிறிது, பெரிது என பாராபட்சம் இல்லாமல், அனைத்தையும் ஆராய துவங்குவார்கள். இது மற்றவர்களுக்கும் என்ன, "இத போய் இவ்வளவு நேரம் யோசிக்கிறீங்க..." என கேள்வி எழுப்ப செய்யும். ஆனால், அவர்களது யோசனை, சிந்தனை வெளிப்புற தோற்றதை பற்றி இருக்காது. உட்புற விஷயங்களாக இருக்கும்.

பச்சாதாபம்!

பச்சாதாபம்!

ஓர் உயிர் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதை அறிய சிறந்த அறிகுறி. ஒரு சூழலில் தனது உணர்வு நிலையை மட்டும் பற்றி சிந்திக்காமல், மற்றவரது நிலை, உணர்வுகளையும் அறிந்து புரிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

யாரையும் விமர்சிக்கும் முன்னர் அவரது நிலையை, அவர் நிலையில் இருந்து சிந்தித்து பேசுவார்கள். இது கற்று வருவது அல்லது, உள்ளார்ந்து வரும் ஒன்று.

கணிப்பு!

கணிப்பு!

ஒரு நபரை கண்டதுமே, அவர் இப்படிப்பட்டவர் என கணிக்கும் திறன் ஒரு முதிர்ச்சி பெற்ற உயிரிடம் நாம் காணலாம். இதை உள்ளுணர்வு என்று கூட கூறலாம். முதிர்ச்சி பெற்ற உயிர்கள் உணர்வு ரீதியாக சிந்திக்க, சிந்திக்க, அவர்கள் மற்ற மனிதர்களை எளிதாக கணிக்க துவங்கிவிடுவார்கள்.

தேடி வருவர்!

தேடி வருவர்!

நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற உயிர் என்றால், மக்கள் உங்களை தேடி வருவார்கள். வந்து அவர்களை வாழ்வில் இருக்கும் நிறை, குறைகளை உங்களிடம் கூறுவார்கள். இதற்கு காரணம் அந்த நபர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. உங்களிடம் இருந்து ஊக்கம் பெற்று, தங்கள் வலிமையை அதிகரித்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Ways to Find Out That You Are Old Soul!

Ten Ways to Find Out That You Are Old Soul!
Story first published: Monday, August 7, 2017, 15:32 [IST]