இந்த எண்ணெயையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்! தாளிக்கும் ரகசியங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

நாம் சமைக்கும் சமையல் தாளிப்பதில் தான் முழுமை பெறுகிறது. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் டிரெஸ்ஸிங்' என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, தாளிதம்' கிடையாது. சமைக்கும்போது, சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அதன் மூலப் பொருட்களும் கலக்கும்.

அப்போது ஏற்படும் மாறுதல்களால், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாக நல்ல நிலையில் வைத்திருக்கும் பொருள்) எனும் எட்டு வகை கார, நறுமணப் பொருட்களைக் கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்தனர்.

இப்போது உள்ள தாளிக்கும் முறைக்கும் அந்தக்கால முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போதுபோல, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அப்போது தாளிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன.

Surprising Health Benefits Of Mustard

Image Courtesy

சமைத்த பிறகு உணவில் இவை சேர்க்கப்படும்போது, சுவையைப் பெருக்கும்; ஜீரணத்தைச் சீராக்கும். உணவால் உடலுக்கும் எந்தக் கெடுதலும் நேராமல் பார்த்துக்கொள்ளும்.இவற்றில் இப்போது தாளிக்க அவசியம் பயன்படுத்தக்கூடிய கடுகினால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தென்னிந்தியாவிலிருந்து :

தென்னிந்தியாவிலிருந்து :

கடுகில் 40 வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகைகள் மட்டுமே பரவலாகப் பயிரிடப்படுகின்றன. கறுப்புக் கடுகு மத்தியக் கிழக்குப் பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலைப் பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

கடுகைப் பற்றி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தாளிப்பதற்குக் கடுகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தாளிப்பு முறை வட இந்தியாவிலிருந்தே தென்னகம் வந்திருக்க வேண்டும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

கடுகில் அதிகம் உள்ள ஐசோதியோசயனேட் புற்றுநோய் உருவாக்கும் பொருட்களில் உள்ள நஞ்சை நீக்குகிறது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல்-இரைப்பை தடத்தையும், குடல்வாலையும் பாதுகாத்துப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

ரத்தம் சுத்திகரிப்பு :

ரத்தம் சுத்திகரிப்பு :

கடுகு விதைகள் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்யும்.

கடுகு கீரை :

கடுகு கீரை :

செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை வைட்டமின்கள் கடுகு மூலம் கிடைக்கின்றன. கடுகில் உள்ள பீட்டா கரோட்டினை நம்முடைய உடல் வைட்டமின் 'ஏ'வாக மாற்றிக் கொள்கிறது.

கடுகுக் கீரையில் (சர்சோன் டா சாக்) பெரும்பாலான பைட்டோ வேதிப்பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து. அதனால்தான் வட இந்தியாவில் குளிர் காலத்தில் கடுகுக் கீரை அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.

சாலட்களில் :

சாலட்களில் :

கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை. பூஞ்சை எதிர்ப்புத்தன்மையைக் கொண்டுள்ளதால், ஊறுகாய் போடும்போது நறுமணத்தைத் தருவதுடன், உடலுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் சிறந்த எண்ணெயாகக் கடுகு எண்ணெய் இருக்கிறது.கடுகை ஊற வைத்து முளைகட்டிச் சாலட்களில் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் :

சமையல் எண்ணெய் என்று பார்த்தால், கடுகு எண்ணெய் மிகவும் ஆரோக்கியமான தேர்வு. வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் கடுகு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்த எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெயைப் போலவே, கடுகு எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினாலும் அதன் தன்மை மாறுவதில்லை. செயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள் உருவாக்கும் உடல்நலப் பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல், கடுகு எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

உடல் பருமன் :

உடல் பருமன் :

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கொழுப்பின் அளவு :

கொழுப்பின் அளவு :

போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற 'பி- காம்பிளக்ஸ்' வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

கடுகுப் பற்று :

கடுகுப் பற்று :

உடலில் எங்கேனும் தீரத வலி இருந்தால் கடுகுப் பற்று உடனடி நிவாரணம் கொடுக்கும். அதே போல அடிப்பட்ட இடத்தில் கடுகுப்பற்றுப் போட்டால் ரத்தக் கட்டு மறைந்திடும். சிலருக்கு கை கால்கள் சில்லிட்டு விறைத்துப் போகும்.அப்போது கடுகு எண்ணெயை லேசாக தடவிக் கொண்டாலோ அல்லது கடுகுப் பற்று போட்டாலோ சரியாகும்.

விஷ முறிவு :

விஷ முறிவு :

வெள்ளைக் கடுகு பூச்சிக்கடி விஷத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. விஷப்பூச்சி கடித்தாலோ அல்லது விஷம் உட்கொண்டவருக்கு, வெள்ளைக்கடுகை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொடுத்தால் வாந்தியை ஏற்படுத்தி நம் உடலில் சேர்ந்த நஞ்சினை வெளியேற்றும்.

செரிமானம் :

செரிமானம் :

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

இனிப்புக்கு :

இனிப்புக்கு :

நாம் சாப்பிடும் பிற உணவுகளுக்கு கடுகு போட்டு தாளிக்கிறோம். இதே இனிப்பு பண்டம் என்றால்? எந்த இனிப்புச் செய்தாலும், அதில் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால், இனிப்பால் அஜீரணம் ஏற்படாது; சளி சேராது. இனிப்பு, உடலில் வேகமாகச் சேராமல் இருக்கவும் ஏலத்தில் இருக்கும் விதை உதவிடும்.

அசைவ உணவுகளுக்கு :

அசைவ உணவுகளுக்கு :

எந்த அசைவ உணவைச் சமைத்தாலும், பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை அவசியம் அதில் சேர்க்க வேண்டும். மிளகு, ஒரு நச்சு நீக்கி. ஒவ்வாமை ஏற்படாமலும், சளி சேராமலும் பாதுகாக்கும்.

மிளகில் உள்ள பைப்பரைன் எனும் அல்கலாய்டு மிகச் சிறந்த ஜீரண நோய் எதிர்ப்பாற்றல் தரும் பொருள் . பூண்டு, இதயம் காக்கும் . உணவை எளிதில் ஜீரணிக்க சுக்கு உதவும்.

பெருங்காயத்தூள் :

பெருங்காயத்தூள் :

வாழைக்காய் பொரியல், உருளைப் பிரட்டல், சுண்டல் வகைகள் செய்யும்போது, முடிவில் பெருங்காயத் தூள் சேர்க்க மறக்கவே கூடாது. பெருங்காயம், மணமூட்டி மட்டும் அல்ல; உடலில் வாய்வு சேராமலும் அஜீரணம் ஆகாமலும் காக்கும். குடல் புண்களையும் ஆற்றும்.

சீரகம் :

சீரகம் :

மந்தம் ஏற்படுத்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களைச் செய்யும்போது, பொன் வறுவலாக வறுத்த சீரகத்தைச் சேர்க்க வேண்டும். சீரகமும் லவங்கப்பட்டையும் குடல் புண்களை ஏற்படுத்தும் `ஹெலிகோபேக்டர் பைலோரி' எனும் நுண்ணுயிரியைக் குடலில் வளரவிடாமல் செய்ய உதவுபவை.

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். இது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது.

வெந்தயம் :

வெந்தயம் :

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து நமக்குத் தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, சப்பாத்தி என அத்தனை உணவுகளிலும் வெந்தயத்தைச் சேர்க்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய முக்கியமான மூன்று பிரச்னைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து.

மஞ்சள் :

மஞ்சள் :

மணமூட்டிகள் வகைகளிலேயே தலைச்சிறந்தது மஞ்சள். இதை ஏதோ ஒருவிதத்தில் உணவில் நாம் சேர்த்துவருவதால்தான், பல நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கின்றன. மஞ்சள் இயற்கை நுண்ணுயிர்க்கொல்லி. புற்றுநோய் செல்களை அழிக்கும் சிறந்த மருந்து.

கார உணவுகளில், காய்ந்த மிளகாயின் கார்சினோஜெனிக் இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். அதனால்தான் மிளகாய் சேர்க்கும்போது, மஞ்சளும் சேர்க்கப்படுகிறது.

எல்லா வகைப் பொரியல்களிலும், கூட்டுகளிலும் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்குச் சேர்த்தால் மருத்துவச் செலவும் கண்டிப்பாகக் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Health Benefits Of Mustard

Surprising Health Benefits Of Mustard
Story first published: Monday, December 4, 2017, 16:00 [IST]