For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தலைமுடி உதிர்வதற்கான முக்கிய உடல் நலக் காரணங்கள் எவை எனத் தெரியுமா?

முடி உதிர்தலுக்கு காரணமான முக்கிய உடல் நல பாதிப்புக்கள் எவையென இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

தனது காதலனுக்காக கோட்டையை ஏற தனது நீண்ட கூந்தலை கொடுத்த ஜெர்மன் அழகான பெண் ராப்புன்ஷல் கதாபாத்திரத்தை நாம் நமது சிறு வயதில் இந்த கதையை அறிந்து இருக்கிறோம் அல்லவா.

அந்த மாதிரி நீண்ட கூந்தலை நாம் நம் வீட்டிலேயே பெறுவதற்கு முன் அதற்கான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் தன்னம்பிக்கையையும் வளரும். முதலில் இதைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்.

நமது தலையில் உள்ள ஒவ்வொரு முடியிழையும் புரோட்டீனால் நிற்கிறது. இந்த புரோட்டீன் தான் கெராட்டீன் என்று அழைக்கப்படுகிறது. இது தான் நமது உடலை முடியிழைகளோடு இணைக்கிறது.

Your Hair Fall Could Be Due To These Underlying Conditions

ஒரு சாதாரண மனிதனின் தலையில் 1,20,000-1,50,000 முடியிழைகள் இருக்கின்றனர். அதே நேரத்தில் சில முடியிழைகள் வளரும் நிலையில் தான் இருக்கும். 1/2 அங்குலம் வீதம் ஒரு மாதத்திற்கு என்று பல வருடங்கள் வளரும்.

பிறகு 3-4 மாதங்கள் அது ஓய்வு நிலையில் இருந்து முடி உதிர்தல் ஏற்பட்டு புதிய முடியிழைகள் வளரத் தொடங்கும். ஒரு ஆரோக்கியமான மனிதன் என்றால் ஒரு நாளைக்கு 100 முடியிழைகள் வரை உதிரலாம். ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முடி நன்றாக வளரத் தொடங்கும்.

முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!

சில பேருக்கு உதிர்தல் பிரச்சினை நின்று விடும் ஆனால் எல்லாருக்கும் அது நடக்காது. எனவே தான் என்னென்ன காரணத்தால் முடி உதிர்தல் ஏற்படுகிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

விட்டமின் ஏ அதிகரிப்பால் :

அதிகமான ஒரு குறிப்பிட்ட அளவு விட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் எந்த ஒரு விளைவும் ஏற்படுவதில்லை.. ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 10,000 IU அளவு விட்டமின் ஏ எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவை விட அதிகமாக எடுக்கும் போது அதிகமான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதில் ஒன்று தான் முடி உதிர்தல் பிரச்சினை ஆகும். அதிக அளவு விட்டமின் ஏ கிடைப்பது நாம் உண்ணும் உணவின் மூலம் அதிகமாக நடப்பதில்லை. ஆனால் விட்டமின் ஏ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது அதன் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது.

புரோட்டீன் பற்றாக்குறை :

உங்கள் உடலுக்கு தேவையான புரோட்டீன் இல்லாவிட்டால் முடியிழைகளின் வலிமை குறைந்து உதிர தொடங்கி விடும். மேலும் முடியிழைகள் ஓய்வு நிலைக்கு சென்று வளராமல் மற்றும் புதிய முடிகள் உருவாகுவதும் தடுக்கப்படும்.

ஹார்மோன் சமநிலையின்மை :

பெண்களின் மாதவிடாய் மற்றும் கருவுற்ற காலத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையின்மையால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. கருவுற்ற காலத்தில் இந்த ஹார்மோன் அளவு அதிகமாகவும் குழந்தை பிறந்த பிறகு குறையவும் செய்கிறது.

இதனால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன்களும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி அடர்த்தி குறைந்து ஒல்லியாகுவதற்கு பெண்களில் சுரக்கும் ஆண் ஹார்மோன்கள் காரணம் ஆகும்.

ரத்த சோகை :

இரும்புச் சத்து குறைபாட்டினாலும் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இது மிகவும் எளிதான ஒரு லாஜிக். நமது உடல் செயல்பாட்டு முறைக்கு சென்றதும் நமது உடல் பகுதிகள் போதுமான ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு நமது முடிகள் வளர்வதை தூண்டுகிறது. எனவே ஆரோக்கியமான இரும்புச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு முக்கியம்.

ஹைப்போ தைராய்டிசம் :

குறைந்த அளவிலான தைராய்டு உங்கள் உடலில் புதிய செல்கள் உருவாகுவதை குறைத்து விடும். மேலும் உங்கள் கூந்தல் வறண்டு மற்றும் உடைவது கூட முடியை ஒல்லியாக்க காரணமாகின்றன. இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை ஆகும்

பாலிசிஸ்டிக் ஓவரின் சின்ட்ரோம் (PCOS) :

Polycystic Ovarian Syndrome என்பது நமது உடலில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் அதிக அளவு சுரப்பதாகும். இந்த ஹார்மோனால் உங்கள் தலைமுடியின் வேர்கள் வலுவிழந்து உதிர ஆரம்பித்து விடும்.

வயதாகுதல் :

முடியிழைகள் வயதாக வயதாக குறைந்து விடும். அதன் எண்ணிக்கை வயதாகும் போது குறைந்து கொண்டே வரும். மேலும் முடி வளர்வதும் நின்று விடும். முடியின் நீளமும் அதன் அகலமும் குறைந்து விடும்.

முடியின் அடர்த்தி குறைந்து ஒல்லியாக மாறிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் இதே பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உடனடியாக எடை குறைதல் :

உங்களின் மனஅழுத்தத்தால் எடை உடனடியாக குறைந்து முடியிழைகள் ஓய்வு நிலைக்கு சென்று விடும். நமது உடலானது போதுமான ஊட்டச்சத்துக்களை கடினமான சூழ்நிலையில் உடலுக்கு செலவழிப்பதால் முடியின் வளர்ச்சிக்கு சத்துக்கள் கிடைக்காமல் உதிர ஆரம்பித்து விடும்.

பரம்பரை :

வழுக்கை விழுதல் பிரச்சினைக்கு பரம்பரையும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவர்கள் பரம்பரை ஜீன்களால், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் வயது போன்றவற்றால் வழுக்கை உருவாகுகிறது. மேலும் இந்த வழுக்கை அம்மா வழி பரம்பரையால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.

மன அழுத்தம் :

அதிகமான மனஅழுத்தம் உங்கள் முடியிழைகளின் வேர்களை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்கிறது. சில நேரங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி முடியின் வேர்களை பாதிக்கிறது.

சில பேர்கள் மனக் குழப்பத்தில் யோசித்து கொண்டு இருக்கும் போது தங்கள் முடிகளை பிடுங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

என்னங்க இதில் உங்கள் முடி உதிர்வதற்கான பிரச்சினையை கண்டுபிடித்து அதை சரி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக நல்ல பலனை பெறுவீர்கள்.

English summary

Your Hair Fall Could Be Due To These Underlying Conditions

Your Hair Fall Could Be Due To These Underlying Conditions
Story first published: Tuesday, July 11, 2017, 17:19 [IST]
Desktop Bottom Promotion