Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு நாம் குறிபிட்டளவு உப்பு சேர்க்கத் தவறினால் அது நமது இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமாம்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதலின் படி ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கிராமிற்கு குறையாமல் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனினும், கனடா ஆராய்ச்சியாளர்கள் அந்த அளவு போதுமானது இல்லை என்றும், அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், மதிநுட்பமானது அதிக அளவு உப்பு உடலுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கும் என்று கருதுகிறது.

குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...
சலிம் யூசுஃப் என்னும் கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது, " குறைவான உப்பு எடுத்துக்கொள்வது உடலுக்குத் தீங்கையே விளைவிக்கும்.
ஒரு நாளைக்கு 3 கிராமுக்கு குறைவாக சோடியம் எடுத்துக் கொண்டால் இதய செயலிழப்பு, திடீர் மரணம், மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது", இவ்வாறு கூறியிருக்கிறார்.
யூசுஃப் கூறுகிறார், உப்பின் அளவை குறைப்பதால் உடலின் உள்ள இயற்கையான சமநிலைகளும் குறைந்துக் கொண்டே வருகின்றது என்று.

குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...
குறைந்த அளவு உப்பை உட்கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி உலக வர்த்தக மையம், உயர் இரத்த அழுத்த ஐரோப்பிய சமூகம் மற்றும் ஐரோப்பிய பொது சுகாதார சங்கத்தின் கூட்டு செயற்பாட்டுக் குழுவின் மூலம் ஐரோப்பிய இதய இதழில் வெளியான ஒரு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், " நாள் ஒன்றுக்கு 2.3 கிராம் சோடியமுக்கும் குறைவாக எடுத்துக் கொள்ளுவது என்பது சாத்தியம் இல்லை. மேலும் இது நல்லது மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை" என்றும் கூறப்பட்டுள்ளது.

குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...
இதற்கு மாறாக யூசுஃப் இதைப் பற்றி விரிவாக கூறியது என்னவென்றால், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 7.5 கிராமில் இருந்து 12.5 கிராம் வரை உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இது 3 முதல் 5 கிராம் சொடியமிற்கு சமம் என்றும் விவரித்துள்ளார்.
எனவே, உப்பினை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ எடுத்துக்கொள்ளாமல் சரியான போதுமான அளவில் மட்டும் எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்.



Click it and Unblock the Notifications
