Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்!
ரத்தத்தை பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!
தேவையான நேரத்தில் ரத்தம் கிடைத்தால் மட்டும் உயிர் பிழைக்க முடியும். உயிரை காப்பாற்றும் ரத்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ரத்த மாதிரிகளைக் கொண்டு நம் உடலின் பல விஷயங்களை கண்டறிய முடியும். நோய் வந்த பிறகு தீர்ப்பதை விட வருவதற்கு முன்னதாகவே ஆயுத்த நடவடிக்கையை மேற்கொள்வது தான் சிறந்தது. உடல் நலனில் அக்கறை இருப்போர், உணவு விஷயத்தில் என்ன தான் கெடுக்குப்பிடி பிடித்தாலும் சில விஷயங்களை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும். ரத்த பிரிவைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை
பொதுவாக நான்கு விதமான ரத்த வகை இருக்கிறது அவை ஏ,பி,ஒ,ஏபி. இவற்றைத் தாண்டி மனிதர்களின் வாழ்க்கை முறை,உணப்பழக்க வழக்கத்தின் அடிப்படையில் 400 ரத்த வகைகள் இருக்கிறது. அவை மேலே குறிப்பிட்ட முக்கிய ரத்தவகையின் கிளைகளாகவே இவை இருக்கின்றன.

உணவுப்பழக்கம் :
ஏ ரத்த வகையை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அதிக காரமுள்ள உணவுகளை தவிர்ப்பது நலம்.
பி ரத்தவகையை சேர்ந்தவர்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக ஈடுபாடு இருக்கும். அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர் . மதுப்பழக்கம் இருந்தால் அதனை விட வேண்டும், உணவுகளில் செயற்கையான சுவையூட்டிகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அடுத்த இரண்டு வகை :
ஓ வகை ரத்தம் இருப்பவர்கள் உணவு விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பேக் செய்யப்பட்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நலம். இவ்வகை ரத்தம் இருப்பவர்கள் பெரும்பாலும் அதீத உணவு உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள் என்பதால் இதில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏபி வகையினர் எவ்வகை உணவையும் உட்கொள்ளலாம். உணவு விஷயத்தில் பயப்படத் தேவையில்லை.

குணநலன்கள் :
ஏ வகை ரத்தம் இருப்பவர்கள் குழு செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்டுவர், கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் உண்டு.
பி வகை ரத்தம் இருப்பவர்கள் நிறைய நட்புணர்வு பாராட்டுவார்கள், அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றல் இருக்கும்.
ஒ வகை ரத்தப் பிரிவு இருப்பவர்கள் செயலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எதிலும் சட்டென கவனத்தை செலுத்து ஆற்றல் உண்டு.இதுவே இவர்களுக்கு நெகட்டிவாகவும் முடியும் வாய்ப்புண்டு.
ஏபி வகையினர் அமைதியாகவும்,புதிது புதிதான சிந்தனைகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள்.

ஸ்ட்ரஸ் லெவல் :
ஏ வகையினர் :
இவர்கள் தங்களின் மனக் குமுறல்களை கையாளமுடியாமல் தவிப்பர். எதையும் அமைதியாக அணுகத் தெரியாமல் பிரச்சனையை பெரிதாக்குவர்.
பி வகையினர் :
இவர்கள் கொஞ்சம் அமைதியாக இருப்பர். ஆனால் அவர்களது மனம் சட்டென மாறிக்கொண்டேயிருக்கும். நிலையான ஒரு முடிவை எடுக்க முடியாமல் தவிப்பர்.இவர்கள் மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது
ஓ வகையினர் :
அதிகமாக கோபப்படுவர். நினைத்தது சட்டேன நடக்க வேண்டும். நிறைவேற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடனே எல்லா விஷயத்தையும் அணுகுவதால் சிக்கல் உண்டாகும்.
ஏபி வகையினர் :
தங்களுடைய மனதை சரியாக கையாளத் தெரிந்தவர்கள். சட்டென கோபம் உண்டாவதும் பின்னர் திருந்துவதும் அடிக்கடி நடக்கும்.சின்ன சின்ன விஷயங்களுகெல்லாம் டென்சன் ஆவார்கள்.

உடல் எடை :
இன்றைக்கு பலருடைய முக்கிய கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது இது தான். உடல் எடையைப் பற்றியது. உங்களின் ரத்த வகையைக் கொண்டு உங்களின் உடல் எடை எப்படி கூடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏ வகையினர் :
அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொண்டால் உடல் எடை கூடும்.
பி வகையினர் :
எண்ணெயில் பொறித்த உணவுகள், பாக்கெட் உணவுகளை உட்கொண்டால் உடல் எடையில் உடனடி வேறுபாட்டினை உணர முடியும்.
ஒ வகையினர் :
உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் உண்டானால் எடையில் மாற்றம் தெரியும்.
ஏபி வகையினர் :
பெரும்பாலும் இவர்கள் உணவினால் அல்லாது, உடல் உழைப்பு இல்லாததால் தான் வருகிறது.

ரத்தம் தேவை :
ஏபி பிரிவனர் எல்லாவகை ரத்தத்தையும் பெறலாம். ஆனால் ரத்தம் கொடுக்கும் போது ஏபி பிரிவனருக்கு மட்டும் கொடுக்க வேண்டும்.
ஏ பிரிவினர் ஏ அல்லது ஓ வகையினரிடமிருந்து பெறலாம். கொடுப்பதற்கு ஏ அல்லது ஏபியிடம் கொடுக்க வேண்டும்.
பி பிரிவனர் பி அல்லது ஒ பிரிவுகளிடமிருந்து பெறுவர்.கொடுப்பதற்கு பி அல்லது ஏபி உண்டு.
ஒ பிரிவினர் ஒ பிரிவில் இருந்து மட்டும் ரத்தம் பெற முடியும். ஆனால் எல்லா வகை ரத்த பிரிவினருக்கும் கொடுக்கலாம்.

ப்ளாஸ்மா :
ஏபி பிரிவனர் ஏபி பிரிவினரிடமிருந்து மட்டுமே ப்ளாஸ்மா பெற முடியும். ஆனால் மற்ற எல்லா பிரிவினருக்கும் கொடுக்கலாம்.
ஏ பிரிவினர் ஏவிடமிருந்தும் ஏபி விடமிருந்தும் பெற முடியும். ஆனால் ஏ அல்லது ஒ பிரிவினருக்கு கொடுக்கலாம்.
பி பிரிவினர் பி அல்லது ஏபி இருந்து பெற முடியும். இவர்கள் பி அல்லது ஒவிற்கு கொடுக்க முடியும்.
ஒ பிரிவனர் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் ஒ பிரிவினருக்கு மட்டுமே ப்ளாஸ்மா கொடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications