Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
அடிக்கடி அஜீரணம் ஏற்படுகிறதா? இதுக்கூட காரணமா இருக்கலாம்!
நாம் சாப்பிடும் உணவு துரிதமாக செரிக்க இந்த அமிலம் மிகவும் அவசியமானதாகும்.
வயிற்றில் ஹைட்ரோ க்ளோரிக் என்ற அமிலம் இருக்கிறது.. இது தான் நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைத்து ப்ரோட்டீன் சத்தை பிரித்தெடுக்க உதவுகிறது.
நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கவும் இதுவே வழி வகை செய்கிறது.
இந்த செயல்கள் எல்லாம் சீராக நடைபெற வேண்டுமென்றால் நம் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவு சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்சனை தான். இதுவரையில் அமிலத்தின் அளவு கூடுவதைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த அமிலத்தின் அளவு குறையவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?
அமிலத்தின் அளவு ஏன் குறைகிறது என்று அதற்கான காரணங்கள், வயிற்றில் அமிலத்தின் அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படுகிற விளைவுகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
முதலில் வயிற்றில் இருக்கும் அமிலத்தின் அளவு குறைய என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்ட்டி பயோட்டிக் :
தொடர்ந்து அதிகப்படியாக ஆண்ட்டிபயோட்டிக் எடுத்துக் கொள்கிறவராக இருந்தால் அவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக அமையும். குடலின் செயல்பாட்டினை குறைத்து ஸ்ட்ரஸ் ஏற்படுத்தக்கூடிய ஹார்மோனை அதிகரிக்கும். இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவு குறைந்திடும்.

நோய்த் தொற்று :
சத்துக் குறைபாடான உணவுகளை எடுத்துக் கொள்வது, அதீதமான மனக்கவலை, நீண்ட நாட்களுக்கு மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவது H Pylori என்ற பாக்டீரியா வளர்வதற்கு காரணமாக அமைந்திடும்.
இது அதிகரித்தால் urease என்ற என்சைம் வளர ஆரம்பிக்கும். இது வயிற்றில் இருக்கக்கூடிய யூரியா என்ற அமிலத்தை கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமோனியாவாக பிரிக்கும். இதனால் கெட்ட நாற்றம் ஏற்படும்.

ஸ்ட்ரஸ் :
நாள்பட்ட மன அழுத்தம் என்பது நம் ஜீரண சக்தியையே சீர் குலைத்திடும். நம் நரம்பு மண்டலம் மிக முக்கியமாக இரண்டு பிரிவுகளாக கொண்டிருக்கிறது. அதிக மன அழுத்தத்தால் அதன் செயல்பாடு குறைந்து ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் அமிலத்தின் அளவு குறையத் துவங்கும்.

உணவு :
நாம் சாப்பிடும் சரிவிகித உணவாக எல்லாச் சத்துக்களும் சமமாக இருக்கிற உணவாக இருக்க வேண்டும். உடலில் குளோக்கோஸ் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
இதில் சர்க்கரையை தடாலடியாக ஒரே நேரத்தில் முற்றிலும் குறைத்தாலும் அல்லது உடல் எடையைக் குறைக்கிறேன் என்று சொல்லி குறிப்பிட்ட உணவைத் தொடர்ந்து எடுப்பது, பல சத்துமிக்க உணவுகளை தவிர்ப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

முக்கியமான காரணம் :
இது நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. வேலை, அவசரம் என்று ஏதேதோ காரணத்தைச் சொல்லி, வேக வேகமாக உணவை விழுங்குவது இந்தப் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
அதே போல ஒரே நேரத்தில் மிக அதிகமான உணவு சாப்பிடுவதும் ஓர் காரணம். இப்படி வயிறு முட்டச் சாப்பிடுவதும் ஓர் காரணம்.

வேறு காரணங்கள் :
இவற்றைத் தவிர வயிற்றில் இருக்கும் உற்பத்தியாகும் அமிலம் குறைவதற்கு
சிறு குடலில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிப்பது, வயதாவது, எடுத்துக் கொள்கிற உணவு ஆகியவை தான் காரணமாக இருக்கும்.
தற்போது இந்த அமிலம் எதற்கெல்லாம் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உணவு செரிமானம் :
அமிலத்தின் முதன்மை செயல்பாடு இது தான். பச்சையாகவோ அல்லது சமைக்கப்பட்ட உணவையோ சாப்பிடும் போது நம்மையும் அறியாமல் பல பாக்டீரியாக்கள் உள்ளே செல்கிறது. அவற்றை அழித்து உணவை செரிக்க வைக்கிற வேலையை அமிலம் செய்கிறது.

ப்ரோட்டீன் :
நாம் உணவாக சேர்த்துக் கொள்கிற ப்ரோட்டீனை உடைத்து அது நம் உடலில் சேர் உதவி செய்திடுகிறது.
அசைவ உணவுகளில் ப்ரோட்டீன் அதிகமாக இருக்கிறது. அதனால் ப்ரோட்டீன் உணவுகள் சாப்பிடும் போது வயிறு முட்டச் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பெப்சின் :
பெப்சின் என்பது ஓர் ப்ரோடியோலைட்டிக் என்சைம். இது ப்ரோட்டீன் செரிக்கவும் நம் உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்கவும் அவசியமான ஒன்றாகும். இதனை உற்பத்தி செய்ய வயிற்றில் இருக்கும் அமிலம் உதவிடுகிறது.

விட்டமின் பி 12 :
வயிற்றில் இருக்கக்கூடிய அமிலம் உடலில் இன்ட்ரின்சிக் செயல்பாட்டினை துரிதப்படுத்தி க்ளைகோப்ரோட்டீன் உற்பத்தியை அதிகரிக்கும். இவை நாம் உணவாக எடுத்தக்கொள்ளும் உணவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் பி 12 உறிந்து கொள்ள தேவைப்படுகிறது.
அமிலம் குறைந்திருக்கிறது என்பதை நீங்கள் சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடிக்கலாம் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

கேஸ் :
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வயிறு உப்பலானது போன்ற ஓர் உணர்வு, ஏற்படும். வயிற்றில் அதிகமாக கேஸ் சேர்வது தான் அதற்கு காரணம். அதே போல வயிற்று வலி, நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்.

கெட்ட நாற்றம் :
அமிலம் குறைந்தால் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதனால் கெட்ட நாற்றம் ஏற்படும். அதே போல வியர்வை நாற்றமும் அதிகமாக இருக்கும்.
உணவு செரிமானத்தில் பிரச்சனை உண்டாகும்.

பசி பசி எந்நேரமும் பசி :
எந்நேரமும் பசியுணர்வு இருந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு வயிறு ஃபுல்லானது போன்ற உணர்வு இருக்கும் ஆனால் அதீத சோர்வுடன் காணப்படுவார்கள் அதற்கு காரணம் வயிற்றில் இருக்கிற உணவு சரியாக செரிக்கவில்லை. இதனால் நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைத்திருக்கவில்லை என்று அர்த்தம்.

அனீமியா :
உணவு சாப்பிட்டதும் அதீத சோர்வாக இருப்பது, அனீமிக்காக உணர்வது, தலைமுடி மற்றும் நகங்கள் ஆகியவை வலுவிழந்து காணப்படும். முடி அதிகமாக உதிரும்.
சிலருக்கு குமட்டல் கூட ஏற்படக்கூடும்.
சரி, இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் மருத்துவரிடம் சொல்லி ஆலோசனைப்பெற்றிடுங்கள். உங்களுக்கு வயிற்றில் இருக்கும் அமிலம் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் :
அதிகமாக தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள். முதல் இரண்டு நாட்களுக்கு திட உணவுகளை சாப்பிடாமல் திரவ வகையிலான உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இஞ்சி :
நாம் சாப்பிட்ட உணவு செரிப்பதற்கும் , உடலில் ஏற்படக்கூடிய அஜீரணத்தை சரி செய்ய இஞ்சி மிகவும் அவசியமானதாக பயன்படுகிறது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு எடுத்துக் குடிக்கலாம்.

எலுமிச்சை :
உணவு சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிக்கலாம். இது நாம் சாப்பிட்ட உணவு வேகமாக செரிக்க வைக்க உதவிடும்.



Click it and Unblock the Notifications











